badge

Followers

Friday, 28 October 2016

ஷிர்டியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்...
ஷிர்டியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்.....

36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. 

அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது, அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக நிர்வாகம் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். 

இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வசந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார்கள். 

அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டப்பட்டார்.
அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தை போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.

பின்னர் அந்தச் சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.

 அன்று விஜயதசமி, அந்தச் சிலையை உண்மையான மனிதராக எண்ணி அதிகாலை வெந்நீர் ஸ்நானம் செய்து காலை, மதியம் , மாலை,இரவு என  வேலையும் உடை மாற்றி தங்க க்ரிடம் சார்த்தி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு ஆரத்திக்குப்பின் கொசுவலை சார்த்தி சமாதி மீது பருத்தியினால் ஆன வெள்ளைத் துணியை போர்த்தி விடுவார்கள். சிலை வைப்பதற்கு முன்பு வழிபட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் சமாதியில் இருக்கிறது.

தற்போது உள்ள கோயில் கட்டிடம் முந்தைய கட்டிடத்தை விட இருமடங்கு பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, 25 October 2016

அந்த எங்கே தீபாவளி ?பட்டாசு கடை கடை லிஸ்ட்டை வாங்கிவந்து 

மனப்பாடம் செய்து,அதைப் பற்றி ஸ்கூல் 

சாப்பாட்டு நேரத்தில் மண்டை உடைய 

விவாதம் செய்து....


நாம் போட்ட   லிஸ்டில் பாதியை அப்பா 

அடிப்பதை திக் ...திக்... 

என்று பார்த்து,அப்பாவுக்குத் தெரியாமல் 

அம்மா,சித்தப்பாவை நைஸ் பண்ணி   இன்னும் 

கொஞ்சம் வாங்கி வந்து ....


பட்டாசை வெய்யலில் காய வைத்து ...
பத்து நாட்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு....

"கொஞ்சூண்டு பட்டாசு "....கெஞ்சி வாங்கி ஹோம் ஒர்க் முடித்த பிறகு கொளுத்தி மகிழ்ந்து ...

விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து....

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து

புதுத்துணி தைக்க கொடுத்து, தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி பாழாப்போன surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பட்டாசை வெய்யலில் காய வைத்து ....
பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள.....

தாத்தாபாட்டியோடதான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு பஸ்ஸில் பயணம் செய்து....
அங்கே உள்ள பழய, புதிய friends கூட ஜாலியாகப்பழகி....
பந்துக்களுடைய பாச மழையில் நனைந்து....

"தீபாவளியன்று மழை வரக்கூடாதே "என்று தெரு முக்குப்  பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்ட....

வாங்கி வந்து பட்டாசை வீட்டில் உள்ள பொடிசுகளுக்கு பெரியப்பாவோ ,தாத்தாவோ பங்கு பிரித்துத் தந் பின் மீண்டும் எங்களுக்குள் ஒரு பாகப்பிரிவினை செய்து கொண்டு... 

ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி, சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த.....

காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணை தேய்த்த....

அந்த இருட்டிலே கொட்டாங்குச்சி சிரட்டையால் வெந்நீர் அடுப்பை நம் தாத்தா ஊதிக்கொண்டிருந்த...
நாம் முரண்டுபிடிக்க எண்ணைபோக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...

ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை பெரியவா்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....

கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி இனாம் என்று 1 ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....

கங்காஸ்நானம் ஆச்சா என்று கையயில் உக்காரை,லட்டு ,ரிப்பன் பக்கோடா , மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும் கையில் இழுத்துக்கொண்டோடிய....

அவர்கள் தீபாவளி துட்டு என்று ஆசையாக நாலணா தந்த...
காலை 6 மணிக்கெல்லாம் தீபாவளி டிபன்  இட்லியும் பஜ்ஜியும் சாப்பிட்ட..
சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது, சனியனே காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று தாத்தா திட்டிய...
மதியம் முழுக்க கட்டைப்பிரித்து ஒத்தை வெடி ஓடி ,ஓடி விட்டு கால் வலிக்க சந்தோஷித்த ...
ரெண்டு சீனி வெடியை சேர்த்து, கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக்கொண்டாடிய...

நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த...

"யார் வீட்டு வாசலில் பட்டாசு குப்பை ஜாஸ்தி ?"என்று கண்ணாலே எடை போட்டு "நாம் தான் டாப் "என்று மனசுக்குள் மார் தட்டிய....

தீபாவளி மலரை புது வாசனை மாறாமல் புரட்டி படம் பார்த்த....ஜோக் படித்த...

போஸ்ட்மேன் சாயங்காலம் கொண்டு வரும் வண்ண வண்ண வாழ்த்து அட்டைகளுக்காக காத்து நின்ற ....

அதிருஷ்டம் இருந்தால் புது ரிலீஸ்  அப்பா,அம்மா,அத்தை மாமா,பெரிப்ப,சித்தப்பா குடும்பங்களுடன் சேர்ந்து சோடா கலர் குடித்தபடி புது டிரஸ் அணிந்தபடி பார்த்த...
.
ராத்திரியில் சீக்கிரமே ஊர் களைப்பால் ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி நாம் அறியாமல் விடைபெற்ற 
அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பிவைங்களேன்....ப்ளீஸ் ....

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்
🌸குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்

* குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை.*
பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

 இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.
உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன்.
சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.
 *குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு*
இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம்.
*அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.*
 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன.
திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும்.
*வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.*

 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும்.
முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும்.
இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

 நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.
 இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா.

பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

 *குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர்.*
கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல்,
*குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது.
இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

 *கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை.
இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம்.
மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள்.
இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...

Friday, 21 October 2016

ஈசன் உபதேசம் அருளிய ஸ்தலங்கள் ...


ஈசன் உபதேசம் ...
1, ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

10, திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.

Tuesday, 18 October 2016

Saturday, 15 October 2016

நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...
அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.
உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.
அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!
பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

Friday, 14 October 2016

தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் 
வெந்நீர் /சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.

அதிலும் வெந்நீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

எடை குறைவு :-
வெந்நீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.

சளி, இருமல் நீங்கும் :-
வெந்நீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-
வெந்நீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் சுத்தமாகும் :-
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும்

முதுமையைத் தடுக்கும் :-
வெந்நீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.

செரிமான பிரச்சனை :-
செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் :-
செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-
சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயுடன் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்.

Thursday, 13 October 2016

செக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்!
நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா! அல்லது தீமை விளைவிக்குமா!! ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?...
உடலில் உள்ள செல்கள்,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் ஹார்மோன் சுரப்பிகள் இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம். தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ரல் கிடையாது .தவிர பல வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .
உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணெய்க்கு நிச்சயம் உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாதுகாக்கும்.
இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகிய வற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக ஆண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னீசிம், செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.இவை தான் எண்ணெயின் உண்மையான குணங்கள் .
ஆனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர்,என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய்யை குறை சொல்ல தொடங்கி விட்டோம்.
சமையல் எண்ணெய் சுத்திகரிக்க படுவதை பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும் பல உள்நாட்டு கம்பனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளை களுக்கு
இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .
இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழ கொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். பிறகு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமில எண்ணெய் நமக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்...
இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது.முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது.அது மட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .
பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான புரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,
குளோபில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .
செக்கில் ஆட்டிய விளக்கெண்ணை எனப்படும் ஆமணக்கு எண்ணெயில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த ஆண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது.ந்தால் தினமும் விளக்கெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய் விடும்.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும்.
"லெக்சீதீன்" என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம்.அதனாலையே இதற்கு"குயின் ஆப் ஆயில் " என்றும் அழைகிறார்கள்.
மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .
வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது
செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .
ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர்.தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் முலம் இயக்கபடுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும் படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம்.
சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான அல்லது கல்லால் ஆன செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .
செக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவ்வளவாக வெப்பம் ஏறாது .இப்படி மர,கல் செக்கில் ஆட்டிப் பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மணமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .
மர,கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.
ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.
ஒரு முறை மர,கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால் ...
அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்