badge

Followers

Showing posts with label cyclone. Show all posts
Showing posts with label cyclone. Show all posts

Wednesday, 11 October 2017

மழைக்காலம் வருகிறது -- சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்



மழைக்காலம் வருகிறது --  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்.  இதுக்கெல்லாம் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.

1. வீட்டிலே ஒரு நாலு நாளைக்காவது அரிசி பருப்பு ஸ்டாக் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ( இது கூட இருக்காதான்னு கேக்காதீங்க…. சென்னை பெருமழையின் போது  ஒரு நாள் மழைக்கே மாடி வீட்டில் இருந்தவர்கள் கூட எதுவுமே இல்லாததுபோல பேசியது மறக்கவில்லை)

2. கையிலே அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் பணமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்)

3. ஜுரம், தலைவலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, இருமல் போன்றவற்றிற்கு மாத்திரைகள் தைலம் முதலியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

4. வீட்டின் சமையலறையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், சேப்பங்கிழங்கு, வேப்பம்பூ போன்ற சீக்கிரம் கெட்டுப்போகாத பொருட்களை வைத்திருக்கவும்.

5. தண்ணீர் கேன் ஒன்று கூடுதலாக வைத்திருக்கவும். அப்படியே கேஸ் சிலிண்டரும்.

6. குடை, டார்ச், ரெயின் கோட் போன்றவற்றை தூசு தட்டி எடுத்து வைக்கவும்

7. விளக்குகளைத் துடைத்து வைக்கவும்.  கடையிலிருந்து இலுப்பை எண்ணை ஒரு லிட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம் – இது நின்று எரியும் வெகு நேரம்

8. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியை (ஈமெயில் முகவரி இல்லீங்க) ஒரு டயரியில் அல்லது நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளவும்

9. எப்படியும் இன்றைக்கு எல்லோரும் குறைந்தது இரண்டு சிம்மாவது வைத்திருக்கிறோம். அப்படியே வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரே ஒரு பி எஸ் என் எல் சிம் வைத்திருக்க வேண்டும் – அதுதான்  ஆபத்து காலத்திலும் வேலை செய்த ஒரே ஒரு நிறுவனம்

10. ஸ்மார்ட் ஃபோனை மட்டும் நம்பியிருக்காமல் அந்தக் காலத்து நோக்கியா போன்ற சாதாரண மொபைல் ஃபோன் ஒன்றாவது வைத்திருக்கவும் – இதுதான் குறைந்த பட்சம் 2-3 நாட்களாவது தாக்குப் பிடிக்கும்

11. நானோ சிம்முக்கான அடாப்டர் கைவசம் இருக்கட்டும் – பிற ஃபோன்களில் உபயோகப்படுத்த தேவைப்படும்

12. வண்டிகளில் பெட்ரோலை ரிசர்விலேயே வைத்திருக்காமல் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்காவது குறைந்த பட்சம் 3-4 லிட்டர் மோட்டார் சைக்கிளிலும் 10-15 லிட்டர் காரிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

13. அந்தக் காலத்தில் கிரிக்கெட் கமெண்டரி கேட்போமே ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ – ஞாபகமிருக்கிறதா?  அதே போல ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு பேட்டரியும் கைவசம் வைத்திருக்கவும் – புயல் மழை பெருவெள்ளம் போன்ற காலங்களில் அரசின் அவசர செய்திகள் ரேடியோ மூலமாகவே சென்றடைகிறது.  எஃப் எம் மட்டுமல்லாமல் மீடியம் வேவும் இருக்கிற ரேடியோவாக இருப்பது நலம்

14. மழை புயல் காரணமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நேரிடும்.  ஸ்மார்ட் ஃபோனும் வேலை செய்யாது.  சிக்னலும் இருக்காது, இந்த மாதிரி நேரங்களில் சீட்டுக் கட்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம் போன்ற நமது பழைய விளையாட்டுக்களை குடும்பத்தினரோடு விளையாடலாம்.  ஸ்மார்ட் ஃபோனுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணரலாம்.

15. பயன்படுத்தாத பழைய உடைகள், போர்வைகள், குடைகள், ரெயின் கோட் போன்றவற்றைத் தேடி எடுத்து தெருவோரங்களில் வசிப்பவர்கள், நடைபாதைவாசிகள், ஏழைகள் போன்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

Courtesy-Net

Wednesday, 14 December 2016

வர்தா புயல் ...என் பார்வையில்...



வருதா ,வராதா என்று எல்லோரும் பட்டிமன்றம் 
நடத்திக்கொண்டு இருக்கும் போதே சொன்ன டைமுக்கு கரெக்ட்டாக வந்து சென்னையை ஒரு கலக்கு கலக்கி,பிரட்டி,உருட்டி,கிழித்துப் போட்டுவிட்டு தன்  வழியே போய்விட்டது...

வர்தா  புயல் 


சென்னையின் மழையின்மை ,நல்ல குளிர் போன்றவைகளுக்கு இடையே வர்தா  என்ற பெயர் சூடிய புயல் வரப்போகிறது என்று டீ வி கூவினாலும் முழு நம்பிக்கை இல்லை தான்.

ஏனென்றால் ,புயல்கள் சாதாரணமாக சென்னையை மிரட்டிவிட்டு மழையாய் கொட்டி தீர்த்துவிட்டு ஆந்திராவை ,அல்லது ஒரிஸ்ஸாவை அடிக்கும்...இதுவே அதற்க்கு ஒரு பிழைப்பு....என்று சென்னைவாசிகள் கிண்டல் செய்தது கேட்டு விட்டதோ என்னவோ...வந்தது வர்தா ....

ஞாயிறு மாலை...மிக  இதமான தூறல் மழை...சில்லென்ற குளிர்....சென்னையில் ஷால் போர்த்திக்கொள்ள  வேண்டிய சீதோஷணம்.

எதற்கும் டீ வீ காரர் சொன்னதைக் கேட்டு வைப்போம் என்று ஒரு ப்ரெட்டும் ,கொஞ்சம் பிஸ்கெட்டும் வாங்கி வைத்தேன்...


நடு இரவில் தூறல் கொஞ்சம் கனத்தது...

விடியக்காலை  நோ கரண்ட் ......

தூறல் இன்னும் பலத்து...

சென்னை ஊட்டி குளிர் அனுபவித்தது...

மதியம் 11 மணிக்கு மழை ,காற்றோடு பலத்து....

12 மணிக்கு எங்கள் காம்ப்ஸ்ஸில்  உள்ள மரங்கள் பயங்கரமாக சாமியாட ஆரம்பித்தன....
ஊஊஊஒ ...... ஓஓஓஓஓஓஓ ..........ஷ்ஷ்ஷ்ஹ்ஷ் ....என்ற பாக்கிரௌண்ட் ம்யூஸிக்குடன்....

வீடெல்லாம் இருட்டு....
சார்த்தி வைய்த்த கண்ணாடி ஜன்னல்கள் படபடக்க....
சுமார் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள மிக பிரம்மாண்ட ஷெட் ஒன்றின் கூரை ஷீட்கள் ஒன்றொன்றாய் பறந்தன....ஒரு மணி வாக்கில் ஷெட் வெறும் எலும்புக்கூடு...

வீட்டை சுற்றி உள்ள மரக்கிளைகள் பெரிய சத்தத்துடன் முறிந்தன....

என் வீட்டு ஜன்னலுக்கு ஜஸ்ட் 10அடிக்கு அப்பால் ஒரு நெடிய கிளை முறிந்து விழுந்தது...

என் அதிருஷ்டம் கிளையின் நுனி என் AC யை தொடவில்லை...

கிளைகளுக்கு அடியில் கார்கள் பாவமாய் நசுங்கி....
பைக்குகள் விழுந்து...
மொபைல் சார்ஜ் இல்லை...
டீ வீ  இல்லாததே தனிமையில் தள்ளியது போல இருந்தது...

கணவர் இந்த
மருத்துவக்கல்லூரி +மருத்துவமனை 
வளாகத்திலேயே வேலை என்பதால் பெரிய கவலை இல்லை.

மாலை ...
இவர் வீடு வந்தபின் ....
"வேற என்ன நியூஸ்..."

"புயல் தான்...பயங்கரம்...இங்கே மட்டும் 300 மரங்களுக்கு மேல விழுந்திருக்கு...நிறைய கார்கள்,அவுட் ..."
"ஒரு பையன் ...வீட்டை விட்டு அப்போதான் வெளியே வந்திருக்கான். மரக்கிளை மேல விழுந்திடுத்து...இங்கே emergency க்கு தூக்கி வந்தால்...கதை அப்பவே முடிந்தாச்சு...அந்த பையன் இங்கே வேலை பார்க்கும் ஒரு செக்யூரிட்டி யின்  மகன்.....கதறுகிறான் பெத்தவன்...தாங்க முடியவில்லை..."
அடி வயிற்றில் நரம்புகள் இழுத்தன...

கார்த்திகை   தீபங்கள்....வீட்டுக்குள்ளே ஒளி வீசி இதமளித்தன...அப்பம் ,பொரி  இல்லாத கார்த்திகை....பயம் சூழ்நத கார்த்திகை....

கார்த்திகை விளக்கு ஒளியில் தோசை டின்னர் ....

இடைவிடாத காற்றின் ஓலம்...

இருட்டு...

பயமுறுத்தத்தான் செய்தது....

விடிய விடிய  ..தொடர்ந்தது...

காலை....புயலுக்குப்பின் அமைதி...

கரண்ட் இல்லை....மொபைல்  இல்லை....

டோட்டல்  கம்யூனிகேஷன் கட்...



புயல் எனக்கு சொன்ன செய்திகள்...


போன டிசம்பரில் சென்னை மிதந்தது ....

இந்த டிசம்பரில் சென்னை பறந்தது....

ஆனால், போன வருஷத்தை விட இது சற்று பெட்டர் தான்....

புயலுக்கு மக்களும்,அரசாங்க இயந்திரமும் இன்னமும் தயார் நிலையில் இருந்தனர்...

எச்சரிக்கை படி வீட்டுக்குள் இருந்தவர்கள் பத்திரமாக இருந்தனர்...
ஆடும் மரம் முன் செல்பீ  எடுக்க சென்றவர்கள் அதிகம் அடி பட்டனர்...
வீடுகள் ,வாகனங்கள் சேதப்பட்டாலும் இன்சூரன்ஸ் செய்தவர்கள் கொஞ்சம் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்...

ஒரு தெருவில் ஓரிருவர்  பாதிக்கப்பட்டனர்....ஆனால் வெள்ளத்தின் போது இன்னும் பலபல மக்கள் எதிர்பாராமல் பாதிக்கப்பட்டனர்....ஏரியாவே மொத்தமாக மூழ்கியது...

வெள்ளம் man made  disaster ...இது இயற்கையின் வெறியாட்டம் ....

விழுந்த மரங்களும் மீண்டும் வளர 10 - 20  வருடங்கள் ஆகும்...

மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல விபத்துகள் தவிர்க்கப்பட்டன...

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாவிட்டால் இன்வெர்ட்டர் ,மொபைல் போன் பிளாஷ் லைட் எல்லாம் வேலைக்கு ஆகாது....அந்தக்கால டார்ச் லைட் ,மெழுகு வர்த்தி தான் பெஸ்ட் .

மின்சாரம்,நெட்ஒர்க் , போனால் paytm ,debit ,credit card ,ஆன்லைன் transfer எல்லாம் எட்டு சுரைக்காய் தான்...

கையில் இருக்கும் காசே கடவுள்...

அதிலும் 2000/- வேலைக்கு ஆகவில்லை .

"கேஷ் லெஸ் "விட  "லெஸ் கேஷ் " உத்தமம்....

கையில் கோடாலியுடன் மரம் வெட்டிய போலீஸ் காரர்களுக்கும் ,மாநகராட்சி ஊழியர்களுக்கும்,  சேவகர்களுக்கும் என் வணக்கங்கள்....