பல ஆண்டுகளாக சென்னையின் மிக முக்கியமான இடத்தில இருக்கும் ஒரு காலனி (குடியிருப்புப்பகுதி) சமீபத்தில் V .I .P. அந்தஸ்து பெற்று விட்டது...
அது தான் டிமண்டி காலனி....
பார்க் ஷெரட்டன் ஹோடேலில் இருந்து கூப்பிடு தூரம்...
TTK ரோடு அருகே ,,,நகரின் V V I P ஏரியா வான போட் கிளப் ரோடுக்கு பக்கம்....
அபிராமபுரம்,ஆள்வார்பேட்டுக்கு பக்கம் இருக்கும் இந்த ஏரியா இப்போ டூரிஸ்ட் அட்ட்ராக்ஷன் ....
எல்லாம்...டிமாண்டி காலனி திரைப்படம் வெளிவந்த பிறகு ....
எனக்கு நினைத்தால் சிரிப்புதான் வருகிறது...
ஏன் என்றால்,கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அந்த ஏரியா வழியே தான் நான் காலை நடை ப்பயிற்சி செய்வேன்...
சில நாட்கள் மாலையில்,சுமார் 6 மணி வாக்கில் ஒரு வாக் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தேன்...
அபிராமபுரத்தில் குடியிருந்த என்னைப்போன்ற பலரும் அந்த அமைதியான தெருவை வாகிங் பாதையாக வைத்து இருக்கக் காரணம்....அதன் அமைதியான ,மரங்கள் நிறைந்த சாலைகள்...தனிதனி வீடுகள்...ட்ராபிக் இல்லாத சூழ்நிலை....
கிட்டத்தட்ட 2005ஆம் ஆண்டு வரை வாரம் 3-4 முறையாவது அந்ததெருக்களில் நான் நிச்சிந்தையாக ,அமைதியை ரசித்தபடி,காலையில் நடக்கும் போது என் கண்ணில் படுவது,அங்கங்கே வாசல் தெளிக்கும் வேலைக்காரப் பெண்கள் ...பேப்பரை தூக்கி எறிந்துவிட்டுப்பறக்கும் சிறுவர்கள்...கார்...பைக் துடைக்கும் ஆட்கள்...தான்.....சுகர், bp ,அதிக எடை குறைக்க முயல்பவர்கள் தான் ......
மருந்துக்குக்கூட ஒரு பேய் கண்களில் தட்டுப்பட்டது கிடையாது...
யாருமே அங்கு பேய்கள் குடியிருப்பதாக் சொன்னதும் கிடையாது...
அந்த இடம் யாரோ வெள்ளைக்காரர் சர்ச்சுக்கு தானமாகக் கொடுத்தது....அதில் சர்ச் 60 வருடங்களுக்கு முன்பே வீடுகள் கட்டி வாடகைக்கு ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு விட்டது...அந்த சொத்து இன்று பலபல கோடிகள் பெரும் ...வழக்கில் இருப்பதால் அதை யார்ய்க்கு விரற்க முடியாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்...
2004இல் அபிரமபுரதிலிருந்து நான் இடம் மாறிய பிறகு டிமண்டி காலனி யை மறந்து போனேன்....
அவ்வப்போது அந்த வழியில் போகும் போது வீடுகள் காலியாக கவனிப்பாறற்று பரிதாபமாகக்காட்சி அளிக்கும்...இன்னும் சில வீடுகள் தரை மட்டமாக ஆக்கப்பட்டு பார்கிங் லாட் களாக மாறி உள்ளன (சிவில் கேசில் மாட்டிக்கொள்ளும் சொத்துக்களின் தலை எழுத்து நம் நாட்டில் அது தானே!)
ஆனால்,திடீர் என்று 3-4 ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகை ஒரு "திகில் சிறப்பிதழ்" வெளியிட்டது...அதில் சென்னையில் பேய்,பிசாசு வசிக்கும் இடங்களில் இந்தக்காலனியும் முக்கியமான இடமாக சொல்லப்பட்டது....
படித்துவிட்டு சிரித்தேன்....
"ஒரு பேய் கூட என் கண்ணில் படலையே.... "பொய்யாக அங்கலாய்த்தேன் ....
":உன் கிட்டே மாட்டிண்டு அவஸ்த்தை பட பயம் தான்" உடனே பதில் வந்தது....
(கேட்டு வாங்கிக்கிறது என்பது இதுதானோ?)
இப்போது நடக்கும் "பேய்"சீசனில் இந்தக்காலனியே ஹீரோவாக்கி வந்த படம் சக்கை போடு போட...
வந்தது இந்தக்காலனிக்கு vip அந்தஸ்து...
ஜனங்கள் கூட்டம் கூட்டமாக இந்தக் காலனியை இரவில் காண வர ஆரம்பித்தனர்....இரவிலும் பகலிலும் இந்த ஏரியாவை விடியோ ,போட்டோ எடுத்து சுடசுட you tube இலும் ,facebook இலும் போட்டு லைக் வாங்க ஆரம்பித்தனர்...
சிலர் கஷ்டப்பட்டு PHOTOSHOP செய்து உருவங்களை பாழ் வீடுகளின் முன் ஒட்டி பேய்களில் போடோக்களை வெளியிட்டனர்...
இன்று அதனை வீடுகளும் காலியாக இருக்கும் இந்தக்காலனியில் பேய் இருக்கோ இல்லையோ....இக்காலி வீடுகள் சமூக விரோதிகளுக்கு நல்ல தங்குமிடமாகி விட்டது என்பதே உண்மை...
இதற்க்கு சாட்சி-அந்த வீடுகளில் கிடக்கும் காலி டாஸ்மாக் பாட்டில்களும்,வாட்டர் பாகேட்களும்....
இன்று ,காலனிக்குள் நுழைய முடியாமல் தடுப்புகள் ....
இதே ரேட் இல் போனால் ,சீக்கிரமே,டிமண்டி காலனி -மெரினா பீச் ,வண்டலூர் ஜூ ,போல சென்னையின் ஒரு டூரிஸ்ட் அட்ட்ராக் ஷானாக மாறிவிடும...
"பேய்களை நம்பாதே....
பிஞ்சிலே வெம்பாதே..."
என்று போதித்த திரை உலகம் இன்று போகும் பாதையை நினைக்க கவலை வருகிறது...
தமிழன் பகுத்து அறியும் குணத்தை இவை மெல்ல மெல்ல மழுங்கடிதுவிடுமோ?
கொடுமை...!
ReplyDeleteஉண்மையிலேயே கொடுமை தான்....தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி,தனபாலன் சார்
Deleteதாங்கள் கொடுத்துள்ள இந்தத்தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. ஏதாவது ஒரு வியாபார நோக்கத்தில் இதுபோல பீதியைக்கிளப்பி விட்டு, திகில் ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
ReplyDelete"பேய்களை நம்பாதே....
பிஞ்சிலே வெம்பாதே..."
:)
Thank you Sir
Delete