badge

Followers

Sunday, 21 June 2015

நான் ஹிநதுவாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்




நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத் அத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு இந்துகளுக்கு.
8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும்
கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும் கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன், நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள் , பெண் ஆசையை ஒழிக்க இராமாயணம், மண் ஆசையை ஒழிக்க
மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த
சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா, ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல் நன்மைக்கு யோகா சாஸ்த்திரம், கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம், விண்ணியலுக்கு கோள்கணிதம்.
11. வாளால் பரப்பப் படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்றுதொடங்கிய ஆதி மனித உணவு முறையிலிருந்து "கொல்லாமை ""புலால் மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்

22 comments:

  1. ஒவ்வொன்றும் சிறப்பானவையே...

    ReplyDelete
  2. எல்லாம் சரிதான். ஆனால் சக மனிதனை ஜாதி என்ற மாயை கொண்டு கீழ்த்தரமாக பார்க்கும் பார்வை பற்றி எதுவுமே நீங்கள் சொல்லவில்லையே. மேலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த சைவம் ஜைன மற்றும் புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட போதனைகள் என்பதைக் குறித்தும் நீங்கள் மவுனம் சாதிப்பது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. இந்து மதத்தில் ஜாதிகள் உண்டு. ஆனால், அவை பிறப்பினால் வந்தவையாக மாற்றியவர்கள் வெளியில் இருந்து வந்து நம்மை பிரித்தாண்டவர்கள். விசுவாமித்திரர் பிறப்பால் சத்திரியனாக இருந்து பின்னார் அந்தணரானார். வேதங்களை தொகுத்தளித்தவரும், மகாபாரதத்தை இயற்றியவருமான வேத வியாசர் மீனவ பெண்ணுக்கு பிறந்தவர். ராமாயணத்தை இயற்றிய வால்மீகி வேடுவ குலத்தில் பிறந்து திருடனாக இருந்தவர். இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எமனை எதிர்த்து ஒரு பெண் கேள்வி கேட்டதும் இங்குதான். பல பெண்களை மணந்த தசரதனை சிறந்த மனிதன் என்கிறது இந்து மதம், ஆனால் ஒரே பெண்ணை மணந்த அவர் மகன் ராமனை தெய்வம் என்கிறது. நீங்கள் மனிதனாக வாழ்வதானாலும் சரி, தெய்வமாக உயரவிரும்பினாலும் சரி அது உங்கள் இஷ்டம் தான். ஆண்களுக்கு நிகராக மைத்ரி, கார்கி முதலான பெண்கள் கல்வி கற்று அவர்களுடன் விவாதங்களும் நடத்தியிருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பலரை மணக்கலாம் உதாரணம் பாஞ்சாலி. மகன் தந்தைக்கு உபதேசம் செய்யலாம், உதாரணம் முருகன்.

      Delete
  3. அனைத்தும் மிகச் சரியான கருத்து
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எந்த வரையறையும் இல்லாத ஒன்றை எப்படி ஒரு மதம் என்று கொள்வது? ஒரு மனிதர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதற்கு என்ன அடிப்படை தேவை?

    ReplyDelete
  5. படிக்க அருமையாகவும், நினைக்கப் பெருமையாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. பிறப்பினால் கிடைத்த மதத்தையிட்டு பெருமைப்பட்டு ’ நான்’ ’எனது மதம்’ என்று அகங்காரம் கொள்வது இந்து மதத்துக்கு முரணானது

    ReplyDelete
  7. இதையும் சேர்க்கலாம் எனத் தோன்றுகிறது!
    ”இந்து மதக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் மதமே தனக்குத் தேவையில்லை என நினைத்தால், ’நான் இந்து இல்லை’ எனவும் தைரியமாக வெளியில் சொல்லலாம்.!!”

    ReplyDelete
  8. நானும்தான் தான் .முக்கியமாக பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது .
    மதத்தினை விட்டு விலகினாலும் மரணதண்டனை விதிக்காத மதம் .இந்துவாகவே இருந்துகொண்டு இந்துக்களை ,இ ந்து மதத்தினை விமர்சிக்கிறவர்களை கொண்ட
    மதம் . இன்னும் எழுதலாம் நேரம் கிடைக்கட்டும் .
    உங்கள் பதிவுக்கு நன்றி திருமதி உஷா சிரிகுமார்

    ReplyDelete
  9. உங்கள் பதிவுக்கு நன்றி திருமதி உஷா சிரிகுமார்

    ReplyDelete
  10. நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் என்று நீங்க சொன்ன காரணங்க ஒன்று தொடக்கம் ஏழு வரை உண்மை நான் அனுபவித்தவை ஏற்று கொள்கிறேன்.இதே சுதந்திரத்தை இப்போது மேற்கு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கும் அனுபவித்து மகிழ்கிறார்கள்.ஆசிய கிறிஸ்தவர்களு இந்த சுதந்திரம் கிடையாதாம்.வருந்துகிறேன்

    ReplyDelete
  11. அருமை! அருமை!!

    ReplyDelete
  12. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

    We must note that Hindu religion is on two kinds: one, as a philosophical system and two, as a religion to live by or practise. As a philosophical system, it has a variety of sub-systems that weave the fabric of the System, as a whole. We call the fabric with one word: Hinduism or Hindu religion.
    One such strand is Atheism. It is accepted as a sub-system within the System. Sakhiyam is its name. Its followers cannot be denied as being non-Hiindus. Not only Sakhiyam. One can deny all sub-systems and worship his Hindu God using his own rituals, like Chitthars of Tamilnadu did.

    At the same time, in the second kind namely, practical religion, it is not allowed. Atheists may not be killed as in other religion like Islam for blasphemy. Still, in Hindu religion, to deny God is blasphemy still. Puranic stories do give them indirect punishment. One cannot wish to be with Perumal or Shiva in Vaikuntam or Kailasm, as the case may, but hate Perumal or Shiva 
    In common life, people will curse such persons who deny God. In your point, you mix both systems.
    இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
    வரையறுக்காத மதம்.

    No compulsion indeed. But then what are temples for? Kripananada Variyar gave the reply that in a cow, we suckle milk only from its udder; not from other parts of its body. Likewise, only in temple, we get the spiritual nearness to God. This is accepted by all Hindu spiritual leaders. No one has said we can neglect the temple. They say temples have special magnetic powers too. They are not built like we build our houses. Rather, they are built under certain ancient rules called agama shastras; after that, consecration ceremony (kumbabishekam) is required to be conducted with vedic chants. After reading or knowing all these, a Hindu will feel better or necessary to go and pray at temple. No compulsion as said by you. But a necessity is created and felt: haven’t you noted that?

    (to be cont'd)

    ReplyDelete
  13. 1. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
    2. Same reply as given to point no.2. Pilgrimage is not compulsory. But it is necessary for a good Hindu. To go on a pilgrimage to Kasi or Rameshwaram or Pazhani is not a one-day decision. People feel it for long and save money and go. The feeling, the saving, the desire and the final pilgrimage – constitute the glory of the relgion you are attempting to belittle and say delight in the freedom to neglect it. The devotees who walk more than 60 miles barefoot to Pazhani to attend Thairpoosam – are they fools and wasting their precious time?

    For you I relate a story of a Chettiar here. Kesavan Chettiar from a small village in Tanjavur district was going to Tirupathi evey year from his young age onwards. He became too old to go. He was agonised and prayed to his Lord about his inability. The Lord came on his dream and told him not to worry and construct a small temple in his village itself and worship him. Chettiar did so and after many years worshipping there, he died in peace. The temple today is in the village Harikkudi and the temple there became a famous pilgrim centre for Tamil vaishanvas. You have forgotten the story of Shravanan. It is in the Ramayanam His parents were very old. Their only desire before death is to go to Kashi and worship Kasinath. But they were too old to travel; and worse, they were blind. Everyday, they were saying they were going to die without fulfilling their pilgrimage to Kasi. Shravan, their only child, now a young man, seated them on two baskets tied at each end of a pole and carried them on his soldier to Kasi. He was killed by Rama’s father; and the curse of his parents became true – read it in the Ramayanam.

    So, no compulsion on Shravan’s parents but they didn’t feel proud of such freedom like you. Rather, they wept about their inability. You cannot be a good Hindu if you belittle the important aspect of the religion to go on pilgrimages. In ancient India, people went on pilgrimages and the Kings and others built chathirams and planted trees on highways for them. Did those Hindu feel proud that there was no compulsion to go on pilgrimages?
    (To continue)

    ReplyDelete
  14. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
    வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
    No compulsion indeed. You can be a rogue and a loafer or a philander- that make you feel proud, doesn’t ?. But you should attempt to live as your religion says you should. What for is your religion to you? Just read and forget?
    மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
    Wrong again. நீரில்லா நெற்றி பாழ். The symbols have significant meanings you want to pooh-pooh on the grounds of your absolute freedom. In Vaishanavism, the namam has great significance and intricate meanings and all devotees are asked to wear it. Jeyalalitha does it (though not exactly!), haven’t you noticed it? Has any one compelled her? No. No compulsion indeed. But to neglect it makes you a rough Hindu.
    ஒட்டு மத்த இந்து சமுகத்தை
    கட்டுபடுத்தும் மதத் அத்தலைவர் என்று யாரும் இல்லை.

    But sects have leaders. Madhvacharyas for Madhav Brahmins. Vallaba for Telugu vaishanvas, Chaitanya for Vaishanvas who take only Krishna avatar, Ramanujacharya for Vaishanvas, Desikan also. These leaders gave theological systems to their followers which are strictly followed today. In Savisim, it may not be so. But you cannot talk on behalf of all sects please.
    தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு இந்துகளுக்கு.
    Harsh words. Avoid please. If a god man commits a crime, he is no longer a god man but just a common man, and he will be dealt with under law for his criminal act as Asharam babu is facing today. When he is not a god man, he is not in our reckoning at all. For our part, we must honor and revere Hindu monks because they renounce this world in order to seek spiritual enlightenment and integration with their God.

    ..to continue

    ReplyDelete
  15. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும் கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும் கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன், நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள் (வராகம்).

    No dispute.

    நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

    Sorry. Only one sect believes in this i.e. Sankara’s Vedanta. Since they are large in number, they pass it off as if it is the one and only religious thought. Vaisnavism doesn’t accept it. Saiva Sithantha doesn’t also. Man cannot be God.

    எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள் , பெண் ஆசையை ஒழிக்க இராமாயணம், மண் ஆசையை ஒழிக்க
    மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா, ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல் நன்மைக்கு யோகா சாஸ்த்திரம், கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம், விண்ணியலுக்கு கோள்கணிதம்.
    Thirumarais and the two Ithikasas only are religious books. Others are secular. Why do you mix them here?

    வாளால் பரப்பப் படாத மதம்.
    I have already explained it.

    எதையும் கொன்று உண்ணலாம் என்றுதொடங்கிய ஆதி மனித உணவு முறையிலிருந்து "கொல்லாமை ""புலால் மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்

    Hindus don’t accept it. You may be a Brahmin and you want to remain a vegan. Be so. Don’t make it a virtue for the religion. If you insist vegan-ism and say you feel proud of it, it means non-vegans cannot be Hindus and they have to feel ashamed of being non vegans. Can the religion, then, survive only with persons like you?

    From point 1 to 12, you spoke of freedom; and here you impose your fetish on others. If you are correct, then other Hindus will say we are not feel proud to be Hindus because we are forced to be vegans :-)

    - Finsihed

    ReplyDelete
    Replies
    1. Sankara's stance can be explained.
      Will follow up

      Delete
    2. நிர் குண பிரம்மன் என்பவன் குணங்களுக்கு அப்பாற்பற்றவன் என்கிறார் சங்கரர். இதை நாம் இயற்கை என்று நாம் ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். இங்கே இயற்கை என்பது, வெளியை இயக்கும் அறிவு. மனிதன் இந்த அறிவிற்கு கடவுள் என்று பெயர் வைக்கிறான். இந்த அறிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் புரிந்து கொள்கிறான்.

      உலகம் அடிப்படையில் அணுக்களால் ஆனது. நான் என்கிற உடம்பு இறக்கிற போது, நம் உடலில் உள்ள அணுக்கள் அழிவதில்லை. நான் என்கிற சிந்தனைதான் இல்லாமல் போகிறது. எங்கிருந்து வந்தது உயிர்? எங்கே போனது உயிர்? அணுவினுள்ளே உள்ள வெளியில் தோன்றி மறைந்ததா? சும்மா இருப்பதை செவனே என்று இருப்பதாக தென் தமிழ் நாட்டில் சொல்வதுண்டு. என்னுடைய அடிப்படை கட்டுமானமும்(sub atomic level), இந்த உலகிலுள்ள உயிருள்ள, மற்றும் உயிரற்ற பொருட்களின் கட்டுமானமும் அடிப்படையில் வேறில்லை. நம்மில் அடிப்படையாக இருக்கும் இந்த வெளியை இயக்கும் அறிவு, சிவம். சிவத்திலிருந்து சக்தி தோன்றி மறைகிறது.

      Delete
    3. குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,

      நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,

      வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,

      நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

      இந்தப் பாடல் என்னுடைய பார்வையில்.

      குலமும் செல்வமும் மனிதனுக்கு எந்தக் காலத்திலும் முக்கியமாக இருந்திருக்கிறது:-) :-(. இது கிடைக்கும், அது கிடைக்கும் என்று ஆசை காட்டினால்தான், நாராயணா என்னும் நாமத்தைச் சொல்வான் என்று நினைத்தார் போலும்.

      பிறப்பு நம் கையில் இல்லை. பிறந்தவுடன் மரணத்தை நோக்கிப் பயணம். பாதை கரடுமுரடாக இருந்தாலும், பயணத்திற்கு துணை சரியாக அமைந்ததால், எதுவும் கடினமாகத் தெரியாது. வைணவத்தில் கண்ணன், துணையாக மட்டுமில்லை, சாரதியாகவும் வருகிறான்.

      பாரதியார் ---

      சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
      சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
      கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
      வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

      எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
      இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.
      ------

      வாழும் ஆசிரியர்களிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியுமா :-)

      ஒரு மாலை வேளை. ஒரு கிராமம். அந்தக் கோயிலில் மூன்று நிலைகள் உண்டு. மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற வழி காட்டி, இங்கிருந்துதான், பெரியவர், தன்னுடைய உயிர் போனாலும் சரி என்று , அனைவருக்கும்,
      ஓம் நமோ நாராயணா என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார், பெரியவர், ராமானுஜர். ஊர் திருக்கோட்டியூர்.

      எனக்குத் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது பெரியவரின் கருணை. அந்த வயதில் தேவைகள் எதுவும் இல்லை.
      மரண பயம் மட்டும் இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஓம் நமோ நாராயணா என்று சொல்லத் தொடங்கினேன் .

      வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குவதற்குத்தான் மதச் சடங்குகள்.

      Delete
  16. அப்படி சொல்லுங்க.

    ReplyDelete
  17. அன்புள்ள சகோதரி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வணக்கம்! தமிழ்மணத்தில் வரும் உங்களது வலைத்தள ஆக்கங்களை அவ்வப்போது படிப்பவன் நான்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (24.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 24ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/24.html

    ReplyDelete
  18. பின்னூட்டம் இட்டு என் பதிவை பாராட்டி,விமரிசித்து,ஆதரவளித்த தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....நேரமின்மையால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் .

    ReplyDelete