badge

Followers

Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Wednesday, 18 January 2017

குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்...



குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்!


பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.



Wednesday, 28 December 2016

​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?




​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?
1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.


2) உற்சாகமாக இருங்கள் :-
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.


3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.
உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.
இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.


4.உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.
உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


5. பயணப்படுங்கள் :-
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.
அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கையில் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்​...

முயன்று பாருங்களேன் ....

Saturday, 4 July 2015

நிகழ்காலத்தை தொலைத்து விடாதீர்கள்...



அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. 


பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்
கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... 


குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. .....


இந்தச் சிந்தனையினூடே அவன் வலது கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.


பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். 


பிரமித்துவிட்டான்.


 காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.


யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.



ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் .