badge

Followers

Showing posts with label karuthu. Show all posts
Showing posts with label karuthu. Show all posts

Tuesday, 15 July 2014

இது தான் இன்றைய வாழ்கை!!!










பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரை  அடையாளம் தெரியாது ...
பக்கத்து கிரகத்தில்
மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது!!!


கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம்....
ஆனால் அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை!!!




மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி...
தெருவுக்குத்தெரு டாக்டர்கள் ...ஆஸ்பத்திரிகள்....
புதுசு புதுசாக நோய்கள்....நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்!!!




நிறைய வருமானம்...
அதற்குமேல் கடன்!!!
வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை!!!!




புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான
விவாதங்கள் அதிகம்....
உணர்வுப் பூர்வமான உரையாடல்களும்,
சின்னச்சின்ன பாராட்டுகளும் குறைவு!!!!



அளவில்லாத நண்பர்கள்...முகநூலில் ....அதில் பலரையும் பார்த்தது கூடக் கிடையாது !
ஆபத்துக்கு உதவ யாரும் இல்லை...அருகில்!!!!!!!



பல பல பட்டங்கள்...பட்டயங்கள்....
ஆனால் சிறிய பிரச்சனையை சமாளிக்கத் திணறும் காரணம் பொது அறிவு இல்லாமை...


பொழுது போக்காக விளையாட்டு -அது அந்தக்காலம்...
ரத்த அழுத்தம் ,அதிக சர்க்கரை ,உடல் பருமனைக் குறைக்க ஜிம்மில் வியர்வை சிந்துவது...இந்தக்காலம்!!!


அப்பா ,அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு...
குழந்தைக்கு அடுத்த வீடு தாத்தா ,பாட்டியை அறிமுகம் செய்வது !!!!


கோவில்,குளம் போக நோ டைம்!!!
மன அழுத்தம் குறைக்க ஆயிரங்கள் கொட்டிக்கொடுத்து "குருஜி"யிடம் தியானம் பழக அலைமோதும் கூட்டம்!!!


கஷ்டப்பட்டு அம்மா சுட்ட மல்லிகைப் பூ இட்லி அரை டஜன்  சாப்பிட்டபின் ஒரு வார்த்தை பாராட்டு இல்ல...
ஆனால் முகநூலில்  யாரோ போட்ட இட்லி,சட்னி படத்துக்கு 118 "லைக்"குகள் !!!! 68 கம்மேன்ட்டுகள்..."சூப்பர் ",ம்ம்மம்மம்ம்ம்ம் ...", "அருமை!"என்று ...



தண்ணீர் குடிக்கததால் சிறுநீரகத்தில் கல்லு !
தண்ணி அடிப்பதால் வயிறெல்லாம் புண்ணு  !!!!

Friday, 7 March 2014

சவுக்கு மரங்கள் அழுவதில்லை...

நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நகைச்சுவை மகா நடிகர் அமரர் நாகேஷின் பேட்டியை படித்தேன்...

எத்தனை ஆழமான உண்மை...

யோசித்து பார்த்தால்  நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...

வீட்டில்...

வேலை பார்க்கும் இடத்தில...

என்று பலமுறை இதை அனுபவித்திருப்போம்...

அப்போது நினைத்துக்கொள்வோம்...நாகேஷின்  இந்த ஆழமான சவுக்கு மரக் கதையை...

நாமும் தயாராவோம் அடுத்த பணிக்கு...





ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!