தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகள் !
உடல் ரீதியான நன்மைகள்
1. பிராணவாயுவின் தேவையை குறைக்கிறது
2. மூச்சு விடும் சுற்றை குறைக்கிறது (ஒரு நிமிடத்துக்கு நாம் எவ்வளவு முறை மூச்சு விடுகிறோம் என்பது நமது ஆயுள் சம்பந்தப்பட்டது. குறைந்த மூச்சு நிறைந்த ஆயுள்!)
3. இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை இயங்க செய்கிறது
4. உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையை மாற்றி உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்கிறது.
5. நம் உடலுக்கு அவ்வப்போது மிகவும் தேவையான ஆழ்ந்த ஓய்வை தருகிறது
6. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தியானம் ஒரு மிகச் சிறந்த மருந்து
7. இரத்தத்தில் உள்ள lactic acid அளவை குறைத்து அச்ச உணர்வினால் ஏற்படும் நோய்களை பூரணமாக விரட்டுகிறது.
8. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது.
9. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது
10. பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பயங்களை போக்கி அது சீராக இருக்க உதவுகிறது.
11. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்துகிறது
12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
13. வைரஸ்களின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. மனக்கவலையை போக்குகிறது.
14. ஆற்றல், சக்தி, வீரியத்தை அத்கிகரிக்கிறது
15. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
16. திசுக்களை பாதுக்காக்க உதவுகிறது.
17. தோலுக்கு பலம் கூடுகிறது. (Higher skin resistance)
18. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது
19. நுரையீரலுக்கு சரியான அளவு பிராணவாயு செல்ல உதவுகிறது.
20. முதுமையை ஒத்திப்போடுகிறது.
21. நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் Dehydroepiandrosterone என்ற ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உதவுகிறது.
22. நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
23. வியர்வையை கட்டுப்படுகிறது
24. மைக்ரேன் மற்றும் தலைவலியை போக்குகிறது
25. மூளையை நன்கு இயங்கச் செய்கிறது
26. உடலுக்கான மருத்தவ தேவையை குறைக்கிறது
27. நமது சக்தி (எனர்ஜி) விரயமாகாமல் பாதுகாக்கிறது.
28. விளையாட்டு மற்றும் H இதர செயல்பாடுகிளில் ஆர்வத்தை தூண்டுகிறது
29. ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது
30. விளையாட்டு போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாட உதவுகிறது
31, உங்கள் உடலுக்கு தேவையான எடையை அளிக்கிறது
32. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது
33. நமது நரம்பு மண்டலத்தை பாதுக்கக்கிறது
34. மூளையின் மின் செயல்பாடுகளை பராமரிக்கிறது (brain electrical activity).
35. ஆண்மைக்குறைவை போக்குகிறது.
மன ரீதியான நன்மைகள்
36. தன்னமபிக்கையை அதிகரிக்கிறது
37. நமது இரத்தத்தில் செரோடொனின் அளவை அதிகரித்து நமது மனோநிலையையும் நடத்தையையும் சரியாக இருக்க செய்கிறது
38. தேவையற்ற அச்சத்தை போக்கி பயம் சார்ந்த நோய்களை விரட்டுகிறது
39. நமது எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது
40. நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.
41. கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது
42. மூளையின் மொத்த சமச்சீர் செயல்பாட்டை (Brain wave coherence) அதிகரிக்கிறது
43. கற்கும் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது
44. மனதுக்கு உற்சாகத்தையும் இளமையையும் தருகிறது
45. உணர்சிகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
46. உறவுமுறைகளை மேம்படுத்துகிறது
47. மூளைக்கு முதுமை ஒத்திப்போடப்படுகிறது.
48. தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விரட்டி விடுகிறது
49. உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.
50. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது
51. வீட்டிலும் பணியிடத்திலும் சுமூகமான ஒரு சூழலை நமக்கு ஏற்படுத்தி தந்து உதவுகிறது
52. ஒரு சூழ்நிலையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது
53. சின்னஞ்சிறு அற்பத்தனமான சச்சரவுகளில் ஈடுபடாமல் நம்மை காக்கிறது
54. மிக கடினமான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்க்க உதவுகிறது
55. நமது நடத்தையை சுத்தப்படுத்துகிறது
56. நமது WILL POWER அதிகரிக்க உதவுகிறது
57. வலப்பக்க மூளைக்கும் இடப்பக்க மூளைக்கும் சரியான தொடர்பை ஏற்படுத்தி தருகிறது
58. இக்கட்டான தருணங்களில் சமயோசிதத்துடன் முடிவுகளை மேற்கொள்ள உதவுகிறது.
59. பார்ப்பவற்றை சரியாக உள்வாங்கும் திறனையும் நமது உடலின் தசைக்கூறு செயல்ப்பாட்டையும் மேம்படுத்துகிறது. (Perceptual ability and motor performance).
60. புத்தி சாதுரியம் கூட உதவுகிறது
61. செய்யும் வேளையில் பரம திருப்தி கிடைக்கிறது
62. நாம் நேசிப்பவர்களுடன் சரியான ஒரு உறவு முறையை கையாள உதவுகிறது.
63. மனநல குறைபாடுக்கான சத்தியங்களை குறைக்கிறது
64. நமது சமூக செயல்பாடு மேம்படுகிறது
65. தேவையற்ற போர்குணத்தை (எதிர்மறையான) கட்டுப்படுத்துகிறது.
66. மதுப் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கங்களை கைவிட உதவுகிறது
67. மருந்து, மாத்திரைகளுக்கான தேவைகளை குறைக்கிறது
68. உடலுக்கு தேவையான தூக்கத்தை கிடைக்க உதவுகிறது
69. ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் செல்ல / எடுத்துக்கொள்ள நேரத்தை குறைத்து தூக்கமின்மை நோயை விரட்டுகிறது
70. பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது
71. சாலையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் வெறுப்புணர்வை போக்குகிறது. (Road rage).
72. அர்த்தமற்ற சிந்தனையை கட்டுபடுத்துகிறது
73. கவலையை போக்குகிறதுஅல்லது சமாளிக்க உதவுகிறது.
74. கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது. இரக்க குணத்தை ஏற்படுத்துகிறது.
75. சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
76. சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது
77. ஆக்கப்பூர்வமான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் சிந்தனையை செலுத்தவும் உதவுகிறது
78. நமது ஆளுமையை மிக மிக சரியாக பராமரித்து சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தருகிறது.
79. உணர்வு ரீதியான பக்குவத்தை தருகிறது. (Emotional Maturity).
ஆன்மீக ரீதியிலான பலன்கள்
80. சரியான இடத்தில் சரியானதை வைத்து பார்க்க உதவுகிறது
81. மனஅமைதி, மகிழ்ச்சியை தருகிறது
82. நமது வாழ்வின் குறிக்கோளை கண்டுபிடிக்க உதவுகிறது
83. நம்மை உணர்ந்துகொள்ள வழி செய்கிறது. (உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்….)
84. சகமனிதர்களிடம் கருணை காட்ட உதவுகிறது
85. ஞானத்தை அதிகரிக்கிறது
86. நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது
87. உடல், மனம், ஆன்மா மூன்றையும் மகிழ்ச்சியான சமனுக்கு கொண்டுவருகிறது.
88. ஆன்மீக ரீதியில் மனம் லயிக்க உதவுகிறது
89. நம்மை நாமே விரும்ப உதவுகிறது.
90. பிறரின் தவறுகளை மன்னிக்கும் /பாராட்டாத சுபாவத்தை வளர்க்கிறது
91. வாழ்க்கை குறித்த நமது மனப்பாங்கை மாற்றுகிறது
92. கடவுளுக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது
93. வாழ்விற்கு தேவையானவற்றை செய்ய உதவுகிறது. (Synchronization in your life)
94. மனசாட்சியை விழிப்புடன் வைத்திருந்து நாம் சரியான பாதையில் செல்ல n உதவுகிறது
95. நிகழ்காலத்தின் அருமையை h உணர்த்தி, நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது
96. பிறரால் நேசிக்கப்படுவதற்க்கான சாத்தியங்களை மேம்படுத்துகிறது.
97. ஈகோவை வெல்ல உதவுகிறது
98. நம் ஆழ்மனதின் ஆற்றலை அறிய உதவுகிறது
99. எல்லாம் அவன் செயல் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, இறைவனுடன் நமது பந்தத்தை அதிகரிக்கிறது.
100. ஞானோதயம் பெற வழி காட்டுகிறது.
மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDelete