badge

Followers

Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Thursday, 22 February 2018

அம்மா...ஒரு பார்வை

அம்மாவைப் பற்றி ஓராயிரம் விஷயங்கள் கூறலாம்....

அதில் என் மனதைத் தொட்ட சில...



அம்மா...ஒரு பார்வை...

Monday, 30 October 2017

கருவுக்கும் கடவுளுக்கும் ஒரு உரையாடல்...




கருவுக்கும் கடவுளுக்கும் ஒரு உரையாடல்


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,

வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை :
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் :
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் :
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் :
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.

குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் :
(மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் :
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை:
(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் :
(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை :
(மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் :
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை
நீ
அம்மா
என்று
அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….



  நன்றி 
-இணையம் 

Thursday, 21 January 2016

ஒரு தாயின் கவிதை...






ஒரு தாயின் கவிதை,,,,,,,,,,,,

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
( ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை...)
இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
நமது தாய், தந்தையை பேனி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேனிக்காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.




(நன்றி -facebook )

Sunday, 13 May 2012

அம்மா என்ற...




அன்னையர் தினத்தில் அம்மாவை பற்றிய பாடல்கள்,புகழாரங்கள் ,மனதைதொடும் எழுத்துக்கள்...பேச்சுக்கள்...எல்லாம் கட்டாயம் ஆகிவிட்டது....

இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் அம்மாவை சிருஷ்டிதான்...
ஆண்டவன் கூட just தசாவதாரம் தான் எடுத்தார்...

ஆனால்....
அம்மா...அவள் ,அவளுக்கே தெரியாமல் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை ,எத்தனை....

குழநதையை கருவாய் ௧௦ மாதங்கள் சுமக்கும் சுமைதாங்கி...
குழந்தையின் அழுகையை வைத்தே அது பசி அழுகையா...வலி அழுகையா...அல்லது சும்மா அழும் செல்ல அழுகையா என்று கண்டுகொள்ளும் சங்கேத மொழி நிபுணி!
குழநதை நெற்றியை தொட்டுபார்த்தே குழந்தையின் காய்ச்சல் அளவை சரியாகச்சொல்லும் நடமாடும் தெர்மோமீட்டர்...
குழந்தையை கன்னல் பார்த்தே வயிறு பசிக்கிறது என்று கரெக்டாக சொல்லும் உயிருள்ள xray  machine!!!
தாலாட்டுப்பாடும்  பாடகி...
பாடம் சொல்லித்தரும் ஆசிரியை...
பாராட்டும் ரசிகை...
பொய் சொன்னால் முகம் பார்க்காமலே கண்டு பிடிக்கும் LIE DETECTOR ...
குழந்தைகளுக்காக அப்பாவிடம் தூது போகும் சமாதான தூதுவர்...
குழந்தைகளை யார்  என்ன  தவறாக  சொன்னாலும் சம்மன் இல்லாமல்  ஆஜார் ஆகும் வக்கீல்...
காலம் முழுவதும் குழந்தைக்காக சம்பளம் வாங்காமல் முழு நேரமும் உழைக்கும் சமயல்க்காரி...ஆயா...காவல்க்காரி...நர்ஸ்...கதைசொல்லி...அழகுக்கலை நிபுணி...ஆடை வடிவமைபாளினி...ஆலோசகர்.... மனோதத்துவ நிபுணர்...
குழந்தைகள் வளர்ச்சியை காலமெல்லாம் உலக அதிசயம் போல ஆச்சரியப்பட்டு ரசித்து வியக்கும் வெகுளி...
குழந்தைகளின் வெற்றி தோல்விகளை தன்னுடையதாக நினைத்து உருகும் முகம் காட்டும் கண்ணாடி...
குழந்தைகளுக்காக எதையும் கூசாமல் த்யாகம் செய்யும் த்யாகி...
இவள் காலமெல்லாம் சுமந்த குழநதை இவளை பாரமாக நினைத்து ஒதுக்கினாலும் 
"அவனுக்கு என்ன கஷ்ட்டமோ? "என்று சொல்லும் பைத்தியக்காரி...