badge

Followers

Showing posts with label kerala mural. Show all posts
Showing posts with label kerala mural. Show all posts

Friday, 4 July 2014

"கதலி வன ஹனுமார் "-என் கேரளா ம்யூரல்




கேரள சுவர் சித்திரம் பாணியில்

தீட்டப்பட்ட இந்த  கேரளா ம்யூரல் ஓவியத்தில்

நான் சித்தரித்திருப்பது  பகவான்  ஸ்ரீ ஆஞ்சநேயரை....


வாழை வனத்தில் அமைதியாக அமர்ந்து ஸ்ரீ ராம ஜபம்  செய்யும்

இந்த ஆஞ்சநேயர்  படத்தை  கான்வாஸ்ஸில்  அக்ரிலிக் பெயிண்ட்

உபயோகித்து வரைந்துள்ளேன்.....



" புத்திர் பலம்  யசோத் தைரியம் 
   நிர்பயத்வம்  அரோகதா 
   அஜாட்யம் வாக்படுத்வம்ச்ச
   ஹனுமத்  ஸ்மரணாத்  பவேத்..."


-ஹனுமனுக்கு சமர்ப்பணம் ....










Wednesday, 7 November 2012

ராதா மாதவம்-கேரளா மயுரல்





ராதா மாதவம் ...இது தான் இந்த ஓவியத்தின் பெயர்..

கேரளத்து சுவர் சித்திரம் எனப்படும்  kerala mural பாணியில் நான் வரைந்த இந்த ஓவியத்தை பார்க்கும் போது இந்தப்பாட்டு தான் எனக்கு நினைவுக்கு வந்தது...


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட….
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ…
பாவம் ராதா…
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட....

Wednesday, 15 August 2012

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா...




குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...
(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்
(குழந்தை கண்ணன்..) 


அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.
(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...


மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலம் ...




தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
 (தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
 (தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
 (தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்


அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
 (தாயே)





Friday, 13 July 2012

ராதா கிருஷ்ணா -கேரளா ம்யுரல்




அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை 
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு 

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென 
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)

Wednesday, 11 July 2012

மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல்




மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம்...




இதோ  ....வாக்தேவி சரஸ்வதியை கேரளா ம்யுரல்  பாணியில் நான் வரைந்துள்ள ஓவியத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


Visit my other blog ...
http://ushasrikumar.blogspot.in/2012/02/saraswathi-varadhe-kaama-rubinee.html

Friday, 6 July 2012

நர்த்தன கணபதி-கேரளா ம்யுரல்


                                                           விநாயகர் அகவல்
                                                          ---------------------------



சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும்  
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரியமெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் 
பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென 
வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து 

தலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழ பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
 உடற்சக் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்ஷமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றான் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற்  கொன்றிட மென்ன 
அருள் தரும் ஆனந்த மளித்து என்செவியில் 

எல்லை இல்லா ஆனந்தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச் 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக விரைகழல் சரணே
                                                                                      -ஒளவையார்


(நன்றி--இணையம்)




தொந்தி குலுங்க செந்தாமரை மீது நடனம் இடும் இந்த ஆனந்த கணபதி,

கேரளா (kerala mural ) பாணியில் நான் வரைந்த .ஓவியம்...

இவ்வகை mural  ஓவியங்களை சாதாரணமாக

கேரள  கோவில் சுவர்களின் .காணலாம்...

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை சுவர் சித்திரங்கள்

இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டன....

இலை ,,பூக்கள்,,,மண் ,,கால்,கரி,கிளிஞ்சல் சுண்ணாம்பு

  போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்ட

ஐந்து வர்ணங்களால் மட்டுமே இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டன....

மஞ்சள்சிவப்பு,பச்சை,நீளம்,பழுப்பு ,+(கருப்பு ,வெள்ளை )ஆகிய நிறங்கள்

மட்டுமே இந்த ஓவியங்களில் உபயோக படுத்தப்படுகின்றன...

இன்று ,இவ்வகை ஓவியங்களை கான்வாஸ்ஸில்  acrylic colors

  உபயோகப்படுத்தி இந்த கணபதியை வரைந்தேன்....