badge

Followers

Sunday, 5 July 2015

விளம்பரங்கள் என்ன சொல்ல வருகின்றன???




விளம்பரங்கள் என்ன சொல்ல வருகின்றன ???



புரியவிலையே.....


டைரி மில்க் சாக்லேட் விளம்பரம் என்ன சொல்ல வருகிறது ?

என்ன வயதானாலும் நாகரீகமான நங்கையாக இருந்தாலும் அவருக்கு "நீட் "டாக சாக்லேட் 
சாப்பிடத் தெரியாது...
எங்க வீட்டு மூணு வயசு வாண்டு கூட மூஞ்சியெல்லாம் பூசிக்கொள்ளாமல் நறுவிசாக சாக்லேட் டை  அழகாக சாப்பிடுகிறாளே ....அவளுக்கு இருக்கும் சுத்தம் கூடவா இந்த லட்சக்கணக்கான  சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகைக்கு  இல்லை?



#நல்ல செகண்ட் ஹான்ட் கார் வாங்கனுமா?

உஷார்...cartrade .com  பக்கம் போகாதேங்க.... அந்த விளம்பரமே சொல்லுதே....அதை பார்த்து மனுஷர்கள்  கார்  வாங்குவதில்லை....நாய்கள் தான் கார் வாங்குகின்றன.....



#குளிர் பானம் வேண்டுமானால் ,அதற்காக உயிரை  பணயம் வைத்து ஸ்டண்ட்  அடிக்க  தயங்க மாட்டார்கள் நம் சூப்பர் ஹீரோக்கள்....
எதுக்குங்க ,அப்பிடியெல்லாம் ரிஸ்க் எடுத்து ஒரு கோலா குடிக்கணும்?கடைக்குப் போயி ஒரு 20 ருபாய் குடுத்து வாங்கிக் குடிக்கலாமே...அதுதான் கோடிக் கணக்கில் சம்பாதிகிறார்களே .....



#டாய்லெட்  ரொம்ப அழுக்காக  இருக்கா ?

நோ ப்ராப்ளம் !

வாசல் கதவு மணி அடிக்கும்....

திறந்தால் ,நேற்றைய ஹீரோ நிற்பார் ....கையில் "ஹார்பிக் "உடன் ....

நீங்கள் சிரமம் படவே ....வேண்டாம்.

அவரே  உங்கள் வீட்டுக் கழிப்பறையை பளிச் என்று ஆக்குவார்!

நீங்கள் "வாவ் " என்று ஒரு ரியாக்க்ஷன்  தந்தால் போதும் .....






#வேலை உங்கள் திறமை,ஆளுமை ,கல்வித் தகுதிக்காக  தரப்படுவது இல்லை.....

உங்கள்  சருமத்தின் நிறமே அதை வாங்கித் தருகிறது....(கேவலம்) இதற்க்கு எந்தப் பெண்ணிய வாத இயக்கமும் எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லையோ?

#உப்பு இருப்பது  உங்கள் சமயலறையில் இல்லை ....உங்கள் டூத் பேஸ்டில்....

#உங்கள் பழரசத்தில் பழம் இருக்கோ இல்லையோ,உங்கள் ஷாம்பூவில் பழங்கள் இருக்கின்றன...

#அழுக்கு நல்லது...அது நட்பு ,உறவு ஆகியவற்றை பலப்படுத்தும்...அப்படினா சுத்தம் சண்டையை அதிகரிக்குமா?


# இளம் பெண்ணகளின் மிகப்பெரிய பிரச்சனை ....
முகப்பரு .....

#அம்மாவும் மகளும் அதிகம் பேசுவது....கூந்தலைப்பற்றி...

#சுத்தமான சூரியகாந்தி என்னை உபயோகித்து சமைக்கும் வீடுகளில் ஆரோகியம் வருவது சந்தேகம் தான்....

ஏனென்றால்,அந்த எண்ணையை உபயோகித்து தினமும் டைனிங் டேபிள்  வழிய ,வழிய  விதவிதமாய் பொரித்த ஐட்டம் கள்  செய்து குடும்பத்தார் அனைவரும் ஒரு கை பார்த்தால் ....ஓவர் வெயிட் ,அஜீரணம்,வயித்து வலி நிச்சயம்....

#பைக் வாங்குவது  நகர தெருக்களில் ஓட்டுவதற்கு அல்ல....மலை,காடு,கடற்கரை போன்ற இடங்களில் ஒட்டவே....

#"சென்னைக்கு மிக அருகில் "விற்கப்படும் வீட்டு மனை-நகரிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும்....அங்கிருந்து சென்னைக்கு 10 நிமிடத்தில் வரலாம்....

#தொலை காட்சி நடிகர்கள்  காரண்டீ  கொடுத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் வீட்டு மனை வாங்குவார்கள்...

#நடிகை/நடிகர் சொல்வதைக் கேட்டுத் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை காலேஜில் சேர் க்கிறார்கள் ....


இன்னும் பல பல...அவற்றை இன்னொரு பதிவில் சொல்கிறேன்...



4 comments:

  1. கொடுமை... வேற என்ன சொல்லுவது..?

    ReplyDelete
  2. இந்த விளம்பரங்கள் இருக்கே
    எல்லாமே இலக்குத் தவறியவையே
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  3. மிகவும் ஆராய்ந்து பொறுக்கி எடுத்துக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்பட விளக்கியுள்ளீர்கள். எல்லாமே உண்மைகளும், கொடுமைகளுமான மக்களை முட்டாளாக்கிடும் விளம்பரங்கள்தான்.

    ReplyDelete