வெஜிடபுள் கட்லெட் .....
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு -2-3
- வெங்காயம்-2
- காரட் -1
- பச்சை பட்டாணி -1/2 கப்
- ரொட்டி -3 ஸ்லிஸ்
- உடைத்த முந்திரி -1 டீஸ்பூன்
- சீரகம்-1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன்
- ரொட்டித்தூள் -தேவையான அளவு
- கார்ன் ப்ளோர் (வெள்ளை சோள மாவு)-2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணை -தேவையான அளவு
செய்முறை
- வெங்காயத்தை பொடியாக அறிந்துகொள்ளவும் .
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
- அரிந்த காரட் ,பச்சை பட்டாணி ,ஆகியவற்றை வேக வைத்து வடித்துக்கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணையை காய வைத்து அதில் சீரகத்தை பொரிக்கவும்.
- இதில் அறிந்த வேங்காயத்தை வதக்கவும்.
- இதில் வெந்த காய்கறிகள் ,முந்திரி ,மசாலா தூள்,உப்பு,காரம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
- இதில் ரொட்டியை சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு நன்றாக் கிளறி இறக்கி வைக்கவும்.
- சோள மாவை தண்ணீரில் கொஞ்சம் தளர்வான பதத்தில் கரைக்கவும்.(நீர்த தோசை மாவு பதம்)
- காய்கறிக் கலவையை வடைகள் போல தட்டிக் கொள்ளவும் .
- அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டியெடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
- தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
இந்தக்காய் களுடன் காலி பிளவர் ,பீன்ஸ் ,நூல்கோல் போன்றவைகளும் சேர்க்கலாம்
இதுவரை செய்ததில்லை... இனிமேல் பார்ப்போம்... நன்றி...
ReplyDeleteஆஹா ... வெஜிடபுள் கட்லெட் ... பார்க்கவே சூப்பராக உள்ளது. பசியைக் கிளப்புது. செய்முறைக் குறிப்புகளும் அருமை. மிக்க நன்றி.
ReplyDelete