badge

Followers

Showing posts with label கைமணம். Show all posts
Showing posts with label கைமணம். Show all posts

Friday, 11 November 2016

கார அப்பம்





கார அப்பம் ....
சுடச்சுட.....கர கர ...முர முர....
உப்பு ,காரம்,லேசான புளிப்புடன்....
இந்தக் குளிர் கால மாலை நேரத்துக்கு ஏற்ற ...
சுவையான டிபன் .....




தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு -3 கப் 
  • அரிந்த வெங்காயம் -1 கப் 
  • இஞ்சி துண்டுகள்-1/2 டீ ஸ்பூன் 
  • அரிந்த பச்சை மிளகாய் -4
  • கறிவேப்பிலை -சிறிதளவு 
  • பெருங்காயத்தூள் -3 சிட்டிகை 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -தேவையான அளவு 






செய்முறை


  • தோசை மாவில் (சிறிது புளித்தது ) உப்பு,அரிந்த இஞ்சி ,மிளகாய் ,வெங்காயம் ,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக்கலக்கவும்.
  • ஒரு அப்பக்காரலை (குழிப்பணியார கல்லை )அடுப்பில் வைக்கவும்.
  • அதில் எண்ணை  விட்டுக் காயவைக்கவும்.
  • காய்ந்த எண்ணையில் குழிகளில் பாதி அளவு மாவுக்கலவையை ஊற்றி ஒரு பக்கம் சிவக்கும் வரை வேக விடவும் 
  • பிறகு ஒரு நீண்ட கம்பியால் அதை திருப்பி அந்தக் குழியிலே எண்ணையில் வேகவிடவும்.
  • நன்கு சிவந்தவுடன் அதை எண்ணெயில் இருந்து கம்பியால் குத்தி எடுத்து எண்ணையை வடிய விடவும்.
  • சூடாகப் பரிமாறவும்.
  • சட்னி இதற்க்கு சிறந்த சைடு டிஷ். 
  • (அப்படியேவும் சாப்பிடலாம்! அருமையாக இருக்கும்!)


Friday, 14 August 2015

ப்ரூட் வெஜி நட்டி சாலட்




ப்ரூட் வெஜி  நட்டி சாலட் 

ஜில்லென்ற ,இனிப்பான ப்ரூட் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்...

காரட்,வெள்ளரி  தக்காளி போட்ட வெஜிடபிள் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்....

இந்த ப்ரூட் வெஜி  நட்டி சாலட்  ஒரு  முறை செய்து ,சாப்பிட்டு பாருங்களேன்...விடமாடீர்கள்....

சாதாரணமாக,வெஜிடபிள் சாலட் என்றாலே டயட்டில் இருப்பவர்களுக்கான "போர் " டிஷ் என்று பலரும் ஒதுக்கி விடுவார்கள்...

மேலும் சிலர்,"நான் என்ன ஆடா ,மாடா .....எல்லாத்தயும்  பச்சையா திங்கணுமா" என்று கடுப்பாவார்கள்...

குழந்தைகள் சலட் என்றாலே காத தூரம் ஓடுவார்கள்...

இவர்கள் அனைவரையும் மயக்க 
ஒரு சுவையான ,ஆரோகியமான  சாலட் ......

தேவையான பொருட்கள் 
வெள்ளரிக்காய்,காரட் ,குடமிளகாய்,தக்காளி.....(தலா ஒன்று )

ஆப்பிள் -1
பச்சை சீட் லெஸ்  திராட்சை -1 கப் 
பேரிச்சை -2

வறுத்து ,தோல் நீக்கிய கடலை -1/2 கப் 
வெள்ளரி விதை (காய்ந்தது )-1 டீஸ்பூன் 
வறுத்த வெள்ளை எள் -1 டீஸ்பூன் 


பச்சை மிளகாய் - 1-2
எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன் 
 உப்பு -தேவையான அளவு 


செய்முறை 


  • காய்,பழங்களை தண்ணீரில் நன்றாக கழுவவும்.
  • காரட்,வெள்ளரிக்காய் ,அப்பிள்  முதலியவற்றை தோல் சீவவும்.
  • பச்சை மிளகாயை  பொடியாக நறுக்கவும்....(இதற்க்கு  கத்தியை விட கத்திரிக் கோல்  கை கொடுக்கும்.)
  • காய் களை பொடிப் பொடியாக அறியவும்.
  • ஆப்பிள் ,பேரிச்சை முதலியவைகளை பொடியாக அறியவும்.
  • நறுக்கிய பொருட்களுடன் ,எலுமிச்சை சாறு ,உப்பு,கடலை,எள் ,வெள்ளரி விதை,திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இதை ஒரு சூப் பௌல்  நிறைய சாப்பிட்டு வர ஒரு நாளின் காய்/பழ தேவையை கணிசமாக ஈடு செய்யும்...
  • உங்கள் இஷ்டம் போல இதில், சிறிது கோஸ் , கொஞ்சம் முள்ளங்கி,ஒரு உதிர்த்த மாதுளை,அல்லது சிறிது வால் நட் ,கிஸ்மிஸ்  என்று கலந்து மாறுதல் செய்யலாம்.
  • சாதாரணமாக  இதை காலை உணவுடன் சாப்பிடலாம்.மாலை டிப்பன் வேளையில்  முழு ஆகாரமாக உண்ணலாம்.
  • கடலை,எள்ளு முதலியவைகள் சேருவதால் புரதச்சத்து மிகுந்த சாலடும் கூட....
  • மதிய ,இரவு உணவுடனும் பரிமாறலாம்.


  • கூடிய வரை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யப்படும் சாலட்  இது....

Monday, 13 July 2015

வெஜிடபுள் கட்லெட்




வெஜிடபுள் கட்லெட் .....

தேவையான பொருட்கள் 


  • உருளைக்கிழங்கு -2-3
  • வெங்காயம்-2
  • காரட் -1
  • பச்சை பட்டாணி -1/2 கப் 
  • ரொட்டி -3 ஸ்லிஸ் 
  • உடைத்த முந்திரி -1 டீஸ்பூன் 
  • சீரகம்-1/2 டீஸ்பூன் 
  • மிளகாய் தூள் -2 டீஸ்பூன் 
  • கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன் 
  • ரொட்டித்தூள் -தேவையான அளவு 
  • கார்ன் ப்ளோர் (வெள்ளை சோள மாவு)-2 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணை -தேவையான அளவு 
செய்முறை 

  • வெங்காயத்தை பொடியாக அறிந்துகொள்ளவும் .
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
  • அரிந்த காரட் ,பச்சை பட்டாணி ,ஆகியவற்றை வேக வைத்து வடித்துக்கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணையை காய வைத்து அதில் சீரகத்தை பொரிக்கவும்.
  • இதில் அறிந்த வேங்காயத்தை  வதக்கவும்.
  • இதில் வெந்த காய்கறிகள் ,முந்திரி ,மசாலா தூள்,உப்பு,காரம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
  • இதில் ரொட்டியை சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு நன்றாக் கிளறி இறக்கி வைக்கவும்.
  • சோள மாவை தண்ணீரில் கொஞ்சம் தளர்வான பதத்தில் கரைக்கவும்.(நீர்த தோசை மாவு பதம்)
  • காய்கறிக் கலவையை வடைகள் போல தட்டிக் கொள்ளவும் .
  • அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டியெடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

இந்தக்காய் களுடன்  காலி பிளவர் ,பீன்ஸ் ,நூல்கோல் போன்றவைகளும் சேர்க்கலாம் 

Monday, 11 August 2014

வெஜிடபிள் புலாவ்










தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி -------------------------2 கப்

தண்ணீர் -----------------------------------4 கப் 
வெங்காயம் ------------------------------2 
பச்சை மிளகாய் ----------------2
பச்சை பட்டாணி ---------------3 டேபிள் ஸ்பூன் 
சிறிய கேரட்----------------------1
பீன்ஸ் ------------------------------4
காலிப்ளவர் ----------------------4-5 துண்டுகள் 
இஞ்சி பூண்டு விழுது -----------1 டீஸ்பூன் 
பட்டை ----------------------------சிறிய துண்டு 
கிராம்பு ----------------------------4
ஏலக்காய் --------------------------2
முந்திரி பருப்பு --------------------சிறிதளவு.
பிரிஞ்சி இலை --------------------1
நெய் --------------------------------4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -------------------------2 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு . 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு 

செய்முறை:- 



  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும். 
  • பச்சை மிளகாயை கீறி வைக்கவும் .கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 

  • ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , பிரிஞ்சி இலை,முந்திரி பருப்பு போட்டு வறுத்து ,அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது  இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப்  தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும் . 
  •                    
  • தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப் ளவர் ,பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.
  • நடுநடுவில் அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.
  • 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென  சுவையான  புலாவ்  பரிமாறத்தயார்.
  • நிதானமாக கீழிருந்து மேலாக சாதத்தை திருப்பிவிட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
  • இந்த நெய் சாதத்துடன் எல்லாவிதமான மசாலா கிரேவிகளும், தயிர் பச்சடியும்,சிப்ஸ்ஸும்  நன்றாக பொருந்தும்.

இதே வெஜிடபிள் புலாவை இன்னும் எளிதாக குக்கர்  அல்லது ப்ரெஷர் பான்னில் செய்ய...

  • ப்ரெஷர் பான் அல்லது குக்கரில் நேரடியாக மசாலா பொருட்கள் ,காய் கரி,அரிசி ஆகியவற்றை வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து 3 வ்ஹிச்ட்லே வரும் வரை வேக விட்டால் இன்னும் சுலபமாக இதே புலாவை செய்துவிடலாம்.


Monday, 4 August 2014

பிசி பேளே பாத் /பிசி பேளே ஹுளி அன்னா





நம்ம வீட்டில் தினமும் சாம்பார் சாதம் செய்து சாப்பிட்டாலும் கர்நாடக ஸ்பெஷல் பிசி பேளே பாத் சுவையும் மனமும் தனி தான்!

செய்து பாருங்களேன்!!!

தேவையானவை :
  • பச்சரிசி – 1 கப் 
  • துவரம்பருப்பு – 1/2 கப் 
  • உருளைக்கிழங்கு – 1
  • பீன்ஸ் – 6
  • சின்ன வெங்காயம் – 15
  • சௌசௌ – 1/2 காய்
  • குடமிளகாய் – 1
  • பச்சைப் பட்டாணி – 50 கிராம்
  • காரட் – 1
  • மேலும், விருப்பமுள்ள சில கறிகாய்கள்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு (சுமார் 1 1/2 டீஸ்பூன் )
  • புளி – எலுமிச்சம்பழ அளவு
  • பெருங்காயம்-சிறிதளவு 
  • எண்ணை – 3 டீஸ்பூன்
அரைக்க :
  • கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • தனியா – 2 டீஸ்பூன்
  • லவங்கப்பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 2
  • வர மிளகாய் – 6
  • தேங்காய்துருவல் – 6 டீஸ்பூன்
செய்முறை :
  1. சாதம், பருப்பு இரண்டையும் நல்ல குழைவாக வேக வைத்துக் கொள்ளவும்.
  2. சாதத்தோடு, உருளைக்கிழங்கையும் வேக வைத்துத் தோல் உரித்து, சின்ன square களாக வெட்டிக் கொள்ளவும்.
  3. ஒரு  கடாயில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, தேங்காய் துருவலைத் தவிர, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில், எண்ணை விட்டு, கடுகு வெடித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு, சிட்டிகை உப்புப் போட்டு, (அப்போதுதான்,சீக்கிரமாக  நன்றாக வதங்கும்), வதக்கி, மற்ற கறிகாய்களைப் போட்டு, ஒரு பிரட்டு பிரட்டி, இப்போது, வடிகட்டிய புளித்தண்ணீரை அதில் விடவும்.
  5. மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விடவும்.
  6. அதில், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயம், நறுக்கி வைத்த உருளைக்கிழங்கையும் போட்டு, கொதிக்க விடவும்.
  7. கறிகாய்கள் வெந்த வுடன், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் கலக்கவும்.
  8. தேங்காய் கலந்த பண்டங்களை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அதனால், ஒரு 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
  9. இப்போது, இதில், சாதம், பருப்பு இரண்டையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
  10. அங்கங்கே கட்டிகள் இல்லாமல், கலக்கவும்.
  11. கத்தரியால் கட் செய்த, புதினா, கொத்தமல்லியை, மேலே தூவவும்.
  12. சுவையான, சூடான, பிசிபெளேபாத் அல்லது பிசி பேளே  ஹுள்ளி அன்னா (கன்னடத்தில், சூடான, பருப்பு ,புளி கலந்த சாதம் என்று பொருள்) தயார்.
# பொறித்த அப்பளாம் ,வடாம்  ,தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
#விருப்பப்பட்டால் 1 டேபிள்ஸ்பூன் கொப்பரைத்துருவலலை வறுத்து சேர்க்கலாம்.சுவையும் மணமும்  கூடும்.

Thursday, 6 March 2014

முந்திரிப் பருப்பு பக்கோடா







தேவையான பொருட்கள்




  • கடலை மாவு-1 கப் 
  • அரிசி மாவு-1 கப் 
  • அரிந்த  வெங்காயம் -1 
  • உடைத்த முந்திரிபருப்பு -1 கப் 
  • மிளகாய்த்தூள்-1-2 டீஸ்பூன் 
  • சமையல் சோடா -1/4 டீஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -பொரிக்கதேவையான அளவு 




செய்முறை 
  1. மாவுகளுடன்  சமையல் சோடா,உப்பு ,மிளகாய் தூள் ,சிறிது எண்ணை  சேர்த்து நன்கு பிசறவும்.
  2. இத்துடன் வெங்காயம் ,முந்திரிபருப்பு சேர்த்து பிசறவும்.
  3. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
  4. சூடான எண்ணையில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு வடித்து எடுக்கவும்.

Sunday, 2 March 2014

ரெயின்போ சாலட்

ரெயின்போ சாலட் 







தேவையான  பொருட்கள் 

வெள்ளரிக்காய்  -1-2
தக்காளி -2
காரட் -1
ஊதா நிற கோஸ் -1 துண்டு 
வெங்காயம் -1
பச்சை மிளகாய்-1
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன் 
ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை மிளகு தூள் - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு


செய்முறை 


  • ஊதா  நிற கோசை பொடியாக அறியவும்.
  • வெங்காயம்,தக்காளி,காரட்,வெள்ளரிக்காய் ,பச்சை  மிளகாய்  ஆகியவற்றையும் பொடியாக அறிந்து கல்லவும்.
  • அனைத்தையும்  ஒரு பெரிய பௌல்/பேஸின் இல் போடவும்.
  • இதில் உப்பு ,மிளகு தூள்,எலுமிச்சை சாறு,ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

      # இது ஒரு சத்தான,ஆரோக்யமான பச்சை காய்கறி உணவு .

       #நார்சத்து மிகுந்த ,எடை குறைப்புக்கு உதவக்கூடிய  உணவு.சுவையானதும் கூட!
        
        
       


Monday, 24 February 2014

காரட் கொத்துமல்லி சப்பாத்தி


கொஞ்சம் காரட் ,கொஞ்சம் பச்சை கொத்துமல்லி ,சுறுக் என்ற காரத்துக்கு பச்சைமிளகாய்...
சேர்த்து இந்த சப்பாத்தி செய்து பார்ப்போமா ....








தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

காரட்-2

கொத்துமல்லி தழை-1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 3-4

உப்பு - ருசிக்கு தேவையான அளவு

கோதுமை மாவு -1/4 கப்
(மேல் மாவு)

நெய்/எண்ணை  -தேவையான

தண்ணீர் - சிறிது அளவு




செய்முறை


  1. தோல் சீவி நறுக்கிய காரட்,சுட்தபடுத்திய மல்லித்தழை ,பச்சை மிளகாய் ,உப்பு,சேர்த்து மிக்ஸ்ஸியில்  கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம் )
  2. அரைத்த காய் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.சிறிது என்னை/நெய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாக இருக்கும்.
  3. தேவை பட்டால்  சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.காய்களிலேயே தண்ணீர் பசை இருப்பதால் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்...






  1. மேல் மாவு தூவி மாவு உருண்டைகளை சப்பாத்திகளாக இடவும்.



சூடான தோசைக்கலில் இரண்டு பக்கங்களும் வேகும் வரை நெய் விட்டு சுட்டு

எடுக்கவும்.,


காரட் டின்  நிறம் இந்த சப்பாத்திக்கு ஒரு நல்ல மஞ்சள் நிறத்தை தரும்.

இந்த சப்பாத்தியில் காய்கள்  இருப்பதால் இதற்க்கு சைடு டிஷ் ஊறுகாய் +தயிர் பச்சிடி போதும்.