தேவையான பொருட்கள்:-
பாஸ்மதி அரிசி -------------------------2 கப்
தண்ணீர் -----------------------------------4 கப்
வெங்காயம் ------------------------------2
பச்சை மிளகாய் ----------------2
பச்சை பட்டாணி ---------------3 டேபிள் ஸ்பூன்
சிறிய கேரட்----------------------1
பீன்ஸ் ------------------------------4
காலிப்ளவர் ----------------------4-5 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -----------1 டீஸ்பூன்
பட்டை ----------------------------சிறிய துண்டு
கிராம்பு ----------------------------4
ஏலக்காய் --------------------------2
முந்திரி பருப்பு --------------------சிறிதளவு.
பிரிஞ்சி இலை --------------------1
நெய் --------------------------------4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -------------------------2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு .
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு
செய்முறை:-
- முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கீறி வைக்கவும் .கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , பிரிஞ்சி இலை,முந்திரி பருப்பு போட்டு வறுத்து ,அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும் .
- தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப் ளவர் ,பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.
- நடுநடுவில் அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.
- 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென சுவையான புலாவ் பரிமாறத்தயார்.
- நிதானமாக கீழிருந்து மேலாக சாதத்தை திருப்பிவிட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
- இந்த நெய் சாதத்துடன் எல்லாவிதமான மசாலா கிரேவிகளும், தயிர் பச்சடியும்,சிப்ஸ்ஸும் நன்றாக பொருந்தும்.
இதே வெஜிடபிள் புலாவை இன்னும் எளிதாக குக்கர் அல்லது ப்ரெஷர் பான்னில் செய்ய...
- ப்ரெஷர் பான் அல்லது குக்கரில் நேரடியாக மசாலா பொருட்கள் ,காய் கரி,அரிசி ஆகியவற்றை வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து 3 வ்ஹிச்ட்லே வரும் வரை வேக விட்டால் இன்னும் சுலபமாக இதே புலாவை செய்துவிடலாம்.
;))))) அருமை. ;))))) ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்
Deleteநன்றாக உள்ளது.....
ReplyDeleteThank you,Anuradha:)
ReplyDelete