#எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
#எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
#மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
#உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
#உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
#உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
#உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
#அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
#உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
#ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்
(நன்றி -இணையம் )
எல்லாமே கேட்க மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. கோபமுள்ள இடத்திலும் குணம் இருக்கக்கூடும். இதுபோன்று திட்டமிட்டு அமைதியாக செயல்படும் மனிதரிடம் சகிப்புத்தன்மையுடன் எவ்வளவோ மர்மங்களும் சேர்ந்தே இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றுகிறது. எனினும் இதுபோல யாராவது ஒரு கணவர் இருந்தாலும் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
ReplyDelete.உண்மைதான்..ஆனால் இந்த forwardஐ படித்தபோது இப்படிக் கூட ஒரு ஆதர்ஷ கணவன் இருந்தால் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் பல பெண்களுக்கும் வருகிறது என்னவோ நிஜம்...
Deleteஇரண்டை தவிர மற்ற எல்லா விதங்களிலும் நான் தங்கமானவன் தான் போல் இருக்கிறது. அந்த இரண்டையும் மாற்ற முயற்ச்சிக்கிறேன்.
ReplyDeleteஇதுவே ரொம்பப் பெரிய விஷயம்
Deleteஆக, பிறவியிலேயே நல்ல நடிகர்தான் "தங்கமான கணவர்"னு சொல்றீங்களா ங்க, உஷா ஸ்ரீகுமார்? :) வாழ்க!
ReplyDeleteஏன் இப்படி நினைக்க வேண்டும்...ஒருவருக்கு நடிப்பு என்று தோன்றுவது இன்னோவருக்கு இயல்பு என்று தோன்றலாம்...வேறொருவர் முயற்சி செய்வோம் என்று நினைக்கலாமே...
Deleteஅப்படி ஒரு தங்கமான புருஷன் இருந்தா ஜி.ஆர்.டி க்கோ, உம்முடியார்ஸ்க்கோ நாமளே கொடுத்திடுவோம்ன்னு பயந்துதான் அவங்க அப்படியிருக்கிறதில்ல. ஆஸ்க் மை ஹஸ்பெண்ட் அவர். ”இந்த மாதிரி தங்கமான பொண்டாட்டியோட லஷனங்கள் லிஸ்ட் இருக்கான்னு” உங்களை திருப்பி கேட்ப்பார். :)
ReplyDeleteஹஹஹஹஹஹா .... தானைத்தலைவி....இதை அறிந்துகொண்டு தான் யாரும் தங்கமாக இருக்க ரெடி இல்லையோ!
Delete//”இந்த மாதிரி தங்கமான பொண்டாட்டியோட லஷனங்கள் லிஸ்ட் இருக்கான்னு” உங்களை திருப்பி கேட்ப்பார். :)//
இங்கேயும் இதே கதை தான்!!!