badge

Followers

Monday, 4 August 2014

மனஅழுத்தம் குறைக்க ...ஆரோக்கியம் காக்க ... தண்ணீர் குடியுங்கள்...



1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.


2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணியால் துடைக்கக்கூடாது. கொஞ்ச நேரம் அப்படியே விட வேண்டும்.


3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.


4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.


5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம். இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.


6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.


7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.


குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.
நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.


8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.


1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.


எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.


அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.
உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம். உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.



ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?

இந்த கேள்விக்கு பொதுவான பதிலை யாரும் எளதில் கூற முடியாது. பெரும்பாலான மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் குடிக்கும் நீரின் அளவு ஒருவரின் உடல் ஆரோக்கியம், வியர்வையின் அளவு, வெயில் காலமா? மழைக்காலமா? வேலை பார்க்கும் இடச் சூழ்நிலை, எந்த பகுதியில் வசிக்கின்றோம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.

நாம் உடல் 60% நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.

சிறுநீர், வேர்வை,சுவாசம், மலம், மூலமாக நம் உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன.12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர் இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த பட்சம் 3 விட்டர் நீரும் பெண்கள் 2 1/2 லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. ஆனால் அது குளிர் தட்ப வெப்பம் உள்ள நாடுகளுக்குதான் பொருந்தும்.

சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம். அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற் சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்திலும் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக் நீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் சாதாரண அளவு நீர் போதுமானது. காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.

பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு அறிவுறித்தப்படுகின்றனர்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் இவைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.

நீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள்.

•உடல் எடை, சத்து குறையும்.
•சோர்வு.
•தாகம் வாய் உலர்தல்.
•மயக்கம், தலைவலி.
•சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், சிறுநீரகங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள்.

இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் இருப்பவர்கள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்

அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்....

(courtesy-internet)



4 comments:

  1. *நீர்* கொடுத்துள்ள இந்த நீர்ப்பதிவு மிகவும் பயனுள்ளது. ;)))))

    பகிர்வுக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.


    [ *நீர்* = நீங்கள் ]

    ReplyDelete
  2. கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேடம், இத்தனை தகவல்களையும் திரட்டி தந்து உதவியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. வருக தலைவி....பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete