நம்ம வீட்டில் தினமும் சாம்பார் சாதம் செய்து சாப்பிட்டாலும் கர்நாடக ஸ்பெஷல் பிசி பேளே பாத் சுவையும் மனமும் தனி தான்!
செய்து பாருங்களேன்!!!
தேவையானவை :
- பச்சரிசி – 1 கப்
- துவரம்பருப்பு – 1/2 கப்
- உருளைக்கிழங்கு – 1
- பீன்ஸ் – 6
- சின்ன வெங்காயம் – 15
- சௌசௌ – 1/2 காய்
- குடமிளகாய் – 1
- பச்சைப் பட்டாணி – 50 கிராம்
- காரட் – 1
- மேலும், விருப்பமுள்ள சில கறிகாய்கள்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு (சுமார் 1 1/2 டீஸ்பூன் )
- புளி – எலுமிச்சம்பழ அளவு
- பெருங்காயம்-சிறிதளவு
- எண்ணை – 3 டீஸ்பூன்
அரைக்க :
- கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- லவங்கப்பட்டை – 1 துண்டு
- கிராம்பு – 2
- வர மிளகாய் – 6
- தேங்காய்துருவல் – 6 டீஸ்பூன்
செய்முறை :
- சாதம், பருப்பு இரண்டையும் நல்ல குழைவாக வேக வைத்துக் கொள்ளவும்.
- சாதத்தோடு, உருளைக்கிழங்கையும் வேக வைத்துத் தோல் உரித்து, சின்ன square களாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, தேங்காய் துருவலைத் தவிர, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில், எண்ணை விட்டு, கடுகு வெடித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு, சிட்டிகை உப்புப் போட்டு, (அப்போதுதான்,சீக்கிரமாக நன்றாக வதங்கும்), வதக்கி, மற்ற கறிகாய்களைப் போட்டு, ஒரு பிரட்டு பிரட்டி, இப்போது, வடிகட்டிய புளித்தண்ணீரை அதில் விடவும்.
- மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விடவும்.
- அதில், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயம், நறுக்கி வைத்த உருளைக்கிழங்கையும் போட்டு, கொதிக்க விடவும்.
- கறிகாய்கள் வெந்த வுடன், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் கலக்கவும்.
- தேங்காய் கலந்த பண்டங்களை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அதனால், ஒரு 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
- இப்போது, இதில், சாதம், பருப்பு இரண்டையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- அங்கங்கே கட்டிகள் இல்லாமல், கலக்கவும்.
- கத்தரியால் கட் செய்த, புதினா, கொத்தமல்லியை, மேலே தூவவும்.
- சுவையான, சூடான, பிசிபெளேபாத் அல்லது பிசி பேளே ஹுள்ளி அன்னா (கன்னடத்தில், சூடான, பருப்பு ,புளி கலந்த சாதம் என்று பொருள்) தயார்.
# பொறித்த அப்பளாம் ,வடாம் ,தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
#விருப்பப்பட்டால் 1 டேபிள்ஸ்பூன் கொப்பரைத்துருவலலை வறுத்து சேர்க்கலாம்.சுவையும் மணமும் கூடும்.
படத்தைப்பார்க்கவே பசியைக்கிளப்புது.
ReplyDeleteஇதில் வக்கணையான செய்முறைக் குறிப்புகள் வேறு.
எனினும் [பசியுடன்] பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,சார்
Deleteஅடேங்கப்பா... இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? நான் என்னமோ ... போன வார சம்ம்பார், முந்தாநேத்து ரசம், நேத்து மீந்த சோறு மூணையும் கலந்து கொழகொழன்னு வேக வைச்சா "பிசி பேளே பாத்" வரும்ன்னு இல்ல நினைச்சேன். பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவிசுAWESOME சார்...
Deleteதங்கள் பின்னூடத்துக்கும் வருகைக்கும் நன்றி...
நீங்கள் சொன்ன சமையல் குறிப்பு குப்பைத் தொட்டியில் போடவேண்டிய லிஸ்ட் அல்லவா....அதை தெரு நாய் தின்றாலே செத்துப் போயிடுமே...சரியான குறிப்புப்படி செய்து பாருங்க சார்...:)))
பார்க்கவே சுவையாக இருக்கிறது. உங்கள் பிசிபேளா மணம் இங்கு வரை வீசுகிறது.
ReplyDeleteராஜலட்சுமி ...தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி...
Delete