ஓம் சாய்ராம் என்று நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் உங்களுடை நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமே இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்க்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன்.
ஷீர்டி சாய் பாபா ....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ..... ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்....
ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்:
1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது....
இதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ..... யூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...
என் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். "நானிருக்க பயமேன்" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.
நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன். இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்.
இதோ....ஸ்ரீ ஷீர்டிசாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடுஷோ......
உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்...
நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன்.
---சத்குரு ஷிர்டி சாய்பாபா
ஷீர்டி சாய்பாபா படங்களின் கோவையை ஒரு சிறிய யு ட்யூப் ஸ்லைடு ஷோவாக தொகுத்து சமர்ப்பித்து உள்ளேன்....
இதுவே என் முதல் முயற்சி...
தங்கள் மேலான கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...நன்றி....
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்.
36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.
அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது, அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக நிர்வாகம் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர்.
இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வசந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார்கள்.
அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டப்பட்டார். அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தை போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.
பின்னர் அந்தச் சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.
அன்று விஜயதசமி, அந்தச் சிலையை உண்மையான மனிதராக எண்ணி அதிகாலை வெந்நீர் ஸ்நானம் செய்து காலை, மதியம் , மாலை,இரவு என வேலையும் உடை மாற்றி தங்க க்ரிடம் சார்த்தி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு ஆரத்திக்குப்பின் கொசுவலை சார்த்தி சமாதி மீது பருத்தியினால் ஆன வெள்ளைத் துணியை போர்த்தி விடுவார்கள். சிலை வைப்பதற்கு முன்பு வழிபட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் சமாதியில் இருக்கிறது.
தற்போது உள்ள கோயில் கட்டிடம் முந்தைய கட்டிடத்தை விட இருமடங்கு பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.