Followers
Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய் பாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய் பாபா. Show all posts
Saturday, 11 August 2018
Sunday, 1 July 2018
ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா....
யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு, நான்,விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்.
இதன் விளைவாக,அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Thursday, 14 June 2018
ஓம் சாய்...ஸ்ரீ சாய்...
Saturday, 10 February 2018
ஶ்ரீ ஷீரடி சாய் பாபா அருள் வாக்கு...
குழந்தாய் நீ பட்ட கஷ்டங்கள் மறையும்நேரம் நெருங்கி விட்டது.நீ ஓடி ஒளிந்தது போதும் .நிம்மதி இல்லாமல்
பசி இல்லாமல்,தூக்கம் இல்லாமல்,அவதிபட்டது போதும்
இனி உன் கண்ணீர் வீனாக கூடாது.நான் உன் அருகில் இருந்து உன்னை கண்காணித்து உன் கர்மவினைகள் போக்கி உனக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறேன்.இனி வரும் காலம் இனிதாகும்.
- ஷீரடி சாய்பாபா

Monday, 18 December 2017
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்...
ஓம் சாய் ராம்
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்
எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில் , ஒரு ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும். .
4. ஏதாவது ஒரு கோயிலில், தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால், குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல, மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும் , அவருக்கு பாபா மேல் உள்ள நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின் தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம். .
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால் கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்
எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில் , ஒரு ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும். .
4. ஏதாவது ஒரு கோயிலில், தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால், குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல, மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும் , அவருக்கு பாபா மேல் உள்ள நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால் கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது
Tuesday, 7 November 2017
Friday, 3 November 2017
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா....
நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.
பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள்.
வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே.
பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
-ஓம் சாய்ராம்.
Friday, 27 October 2017
ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...
ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...
பாபாவின் உதியானது...
1, பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வை தருகிறது.
2, நோயிலிருந்து நிவாரணம் தருகிறது.
3, படிப்பு வராதவர்களுக்கு படிப்பைத் தருகிறது.
4, வேலையில்லாதவர்களுக்கு வேலை தருகிறது.
5, திருமணம் தடைப்பட்டால்,அதை நிவர்த்தி செய்து நல்ல வாழ்க்கை தருகிறது.
6, பிள்ளைப் பேறு இல்லாமல் போனால்,பிள்ளை வரம் தருகிறது.
7, காணாமல் போனவர்களை கண்டுப்பிடித்துத் தருகிறது.
8, இருந்து உபத்திரவம் தருகிறவர்களக விலக்கி வைக்கிறது.
9, பிரிந்தவர்களை சேர்க்கிறது, சேரக்கூடதவர்கள் சேர்ந்து இருந்தால் அவர்களைப் பிரிக்கிறது.
10, போகும் வழிகளில் ஆபத்து நேராமல் காக்கிறது.ஆபத்து வந்துவிட்டால் உதவி செய்கிறது.
11, வறுமை தரும் வெறுமையை மாற்றுகிறது,வளத்தைக் கொண்டுவந்து நம் காலடியில் கொட்டுகிறது.
12, மனதை மாற்றி நம்மை நல்லவராக மாற்றுகிறது. தீய நடத்தைகளைத் தேய்த்துவிடுகிறது.
உதியால் நடக்காதது ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லாவற்றையும் செய்கிறது.
உடலையும்,மனதையும் ஒரு சேர மாற்றுவதில் இந்த உதிக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதால் தான் பாபாவின் உதிக்கு அவ்வளவு மகத்துவம்.இந்த மகத்துவத்தை அனுபவித்த சாய் பக்தர்கள் ஏராளமானவர்கள்.அந்த அனுபவத்தை அவர்கள் பிறருக்கு உதியைத் தந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி உதியைத் தருபவர்களே நாளடைவில் அடியார்கள் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்கிறார்கள்.
ஓம் சாய் ராம்.
Thursday, 2 March 2017
சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...
கவலைகள் விலகும்...
சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போன்று ஸ்ரீ சாய் பாபாவே அவரின் ஆதீனத்திற்கு உங்களை இழுத்து கொண்டார். உடலாலும் வாக்காலும் மனதாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும், பணிவுடனும், பாபாவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்..இவ்வாறு பாபாவிடம் சரணடைந்த பிறகு எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுடைய கவலைகள் விலகும்...
சாயி ஸ்த்சரித்திரம்
Thursday, 16 February 2017
ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
(ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும் )
பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார்.
பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும்.
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார்.
Friday, 3 February 2017
ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ
ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ
ஸ்ரீ ஷீர்டி சாய் நாதருக்கு
அபிஷேகம் ....
கண்களுக்கு,மனதிற்கும்
நிறைவு தரும் ஒரு சிறிய வீடியோ ....
காணொளியைக்காண படத்தை சொடுக்கவும்...
Friday, 27 January 2017
சாய் லீலை .. சிறிய ஸ்லைடு ஷோ
"ஓம் நமோ பகவதே சாயி நாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜீதாய
சர்வ தோஷ நிவாரணாயா
ஷீரடி வாசாய
சாயி நாதாயதே நமஹ....."
Monday, 23 January 2017
ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்...ஷீர்டி சாய்...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
ஷீர்டி சாய் பாபா ....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்....
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்....
ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்:
1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது....
Tuesday, 17 January 2017
சாயியின் அமிர்த வார்த்தைகள் ....
1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.
Friday, 23 December 2016
ஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...
ஓம் சாய் நமஹா .....
ஜெய் சாய் ராம் ...
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...
Thursday, 15 December 2016
சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்
சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான் ....
இதோ ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
என் YouTube Channel இல் இருந்து...
Sunday, 11 December 2016
ஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....
ஓம் சாய் நமஹா .....
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....
சதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான
வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும்.
சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும்
நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா
தனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம்
இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா
சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே
பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக்
கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது
வாக்குறுதி.
-சாய் ராம் -
Friday, 9 December 2016
ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...
ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ......
எங்கே உண்மையான ஆர்வமும் , ஏக்கமும்
இருக்கின்றதோ, பாபா தம்மைத்தாமே
அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்
- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, 6 December 2016
ஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
இதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய
ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
யூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...
YouTube ...
" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும்,
காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும்,
வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும்
எங்கும் இருக்கிறேன்.
நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும்
உட்பட்டவன் அல்லன்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."
Monday, 5 December 2016
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா- ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
உன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்?
என் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். "நானிருக்க பயமேன்" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.
Subscribe to:
Posts (Atom)