badge

Followers

Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. Show all posts

Thursday, 14 June 2018

ஓம் சாய்...ஸ்ரீ சாய்...



அன்பு குழந்தையே... உன் வாழ்க்கையில் எத்தனை ஏற்றமும் சறுக்கமும் ,அவற்றில் நீ பெற்றது இழந்தது என ஒரு நாள் பட்டியலிட்டு பார்த்துள்ளாய். அவற்றில் பார் நீ  பெற்றது தான் அதிகம் இருக்கும் நீ இழந்ததை காட்டிலும். ஆனால் நீயே நான் இழந்துவிட்டடேன் என்றே புலம்பிக் கொள்கிறாய். வாழ்க்கையில் உனக்கான எல்லாம் உன்னிடத்தில் வந்து சேர்ந்தன சேர்ந்தது சேரும். முதலில் வாழ்க்கையின்் மகிமையை புரிந்தக் கொள். பிறகு அதனை நன்றியுடன் ரட்சித்து பார் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் தேடி வரும். ஒன்றை சொல்கிறேன் நன்றாக புரிந்துக் கொள் ஒரு பூவை பறிப்பவர்க்கு தான் அதனை எதற்கு பறிக்கிறோம் என்று தெரியும் கப்பலை ஓட்டி செல்வோர்க்கு தான் போகும் பாதையின் புதிரான வழிகள் தெளிவாக விளங்கும். அதை போலவே தான் உன்னை படைத்தவரான எனக்கு தான் தெரியும் உன் நற்பண்புகள் என்ன உனது மனம் எல்லாம். அதனால் புதிரான வழியில் கப்பலோட்டியாய் உன்னை கூட்டி அரவணைத்து செல்வேன். அப்படி என்னுடன் வரும் போது பொங்கி வரும் எல்லாம் நதியின் சங்கமத்தை பார்ப்பது கோடி புண்ணியம் அதனை உனக்கு பார்வைக்கு பாக்கியமளிப்பேன். உனது வாழ்க்கை என் பொறுப்பு. அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. நீ ஜெயமாக நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...   

Monday, 18 December 2017

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்...

 ஓம் சாய் ராம்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்






எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:



1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .


5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.

9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது

Tuesday, 7 November 2017

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....



  தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார். 
அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார். 
பாபாவை நேசிக்கும் ஒருவன், உண்மையில் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.
 எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.








Friday, 3 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா....








 பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார்.

 நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.

 பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். 

வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே.

 பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

-ஓம் சாய்ராம்.



Wednesday, 1 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...






தைரியமாய் இரு -
நானே சுமக்கிறேன்.....
கர்மங்களை
குறைத்துக்கொள்ள வழி,
அதை தைரியமாக
அனுபவிப்பதே...

நீங்கள் எப்போதும்
என்னை
நினைத்துக்கொண்டிருந்தால்
என்பால்
நம்பிக்கைக் கொண்டிருந்தால்
அதை அனுபவிக்கும்
சக்தியை
நான் கொடுக்கிறேன்.
அது துன்பம் என்ற
எண்ணம் உங்களில்
ஏற்படாமல்
நான் செய்கிறேன்.
உன்னில் இருக்கும்
நானே அதை சுமக்கிறேன்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா






Thursday, 16 March 2017

சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள்








சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள் : SHIRDI SAI BABA TEMPLE - IMPORTANT INFORMATIONS !



ஸ்தல வரலாறு :

மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.

அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.

அதிசய வேம்பு :

பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அற்புத கல் :

பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.

பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.

இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிசய நந்தா தீபம் :

இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.

ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சத்ய நாராயண பூஜை :

இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.

உண்டியல் காணிக்கை :

கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.

திருவிழா :

குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.

பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.

எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.

பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :

குவியும் பக்தர்கள் :

இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தங்கும் அறைகள் :

இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

ரெயில் டிக்கெட் முன்பதிவு :

வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய உணவுக்கூடம் :

திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.