badge

Followers

Showing posts with label ganesha. Show all posts
Showing posts with label ganesha. Show all posts

Saturday, 19 July 2014

கணபதி மடியில் கிருஷ்ணர்...என் தஞ்சை ஓவியம்...




குழந்தைக்கிருஷ்ணனை  ஆசையுடன் மடியில் 

அமர்த்தி கொஞ்சும் இந்த வித்தியாசமான கணபதி

நமக்கு தரிசனம் தருவது கேரள மாநிலத்தில்,

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 

ஸ்ரீ மல்லியூர் கணபதி கோவில்

 என்கிற திருத்தலத்தில்... 



பிள்ளையாரை எத்தனையோ வடிவங்களில் 

நாம் வடிவமைத்து வணங்கி மகிழ்கிறோம்...

கிரிகெட் ஆடும் பிள்ளையார்...

கம்ப்யூட்டர் பிள்ளையார்...

வாத்தியங்கள் வாசிக்கும் பிள்ளையார்...

படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் கணேசர்...

என்று இன்று எண்ணற்ற வடிவங்களில் 

நாம் கணநாதரை கொண்டாடுகிறோம்...



ஆனால்,பல நூறு ஆண்டுகளுக்கு முன் 

கட்டப்பட்ட இந்தத் திருத்தலத்தில் 

மாமன் கிருஷ்ணனை வாஞ்சையோடு 

தன் மடி மீது அமர வைத்துக் கொஞ்சும் 

அன்பான மருமகனாக கணபதி காட்சி தருகிறார்...



இவர்களை தஞ்சாவூர் பாணி ஓவியமாக வடித்து 

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...



Sunday, 15 June 2014

ஓய்வெடுக்கும் விநாயகர் -என் தஞ்சை பாணி ஓவியம்






பல பல வடிவங்களில் விநாயகரை ஓவியமாக 

(குறிப்பாக தஞ்சை பாணி ஓவியமாக)

வரைந்திருந்தாலும் ,இந்தப்  பிள்ளையார் என் 

மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்....


பொன் வேய்ந்த மண்டபத்தில் அமரவில்லை....

நவரத்தினங்கள் பதித்த பீடத்தில் அமரவில்லை...

ஏன் ,அபயஹஸ்தம்  கூட காட்டி  பக்தருக்கு 

அருளவில்லை...


ஆனால்,உங்களைபோல் ...என்னைப்போல்....

ஹாயாக மஞ்சத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு 

மனதுக்குப் பிடித்த புத்தகத்தை நிம்மதியாகப் 

படித்துக் கொண்டு "ரிலாக்ஸ் " செய்தபடி 

ஓய்வெடுக்கிறார்  இந்த கஜானனர்....


அல்லும் பகலும் அயராது பக்தகோடிகளை 

காத்து,துயர் துடைக்கும் இவர் நம்மைப் போல 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த படி 

ஓய்வெடுப்பதற்கும்  நேரம் ஒதுக்குகிறார் 

என்று நினைத்துப் பார்பதே அவருடன் நம்மை 

இன்னும் நெருக்கமாக்குகிறதோ?


Monday, 3 March 2014

பிள்ளையார் -ஒரு வித்தியாசமான ம்யூரல்












அளவாக வெட்டப்பட்ட 

மரத்துண்டின் மீது 

சிறிய கற்கள்  பாங்காக ஒட்டி 

எம் சீல் (mseal ) கொண்டு 

சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற 

வடிவங்கள்  செய்து 

பொருத்தி காயவிட்டு,

எம் சீலால்  வடிவமைத்த 

பிள்ளையாரின்  முகம்,
காது,கிரீடம் ,தந்தம் 

ஆகியவைகளை  செய்து 

ம் யூரல்லை  முழுமையாக்க 

ஆணைமுகத்தனின் தும்பிக்கையில் 

ஒரு சிறு மலரை  பொருத்தி 

வைத்தேன்....

தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள் 

பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )

மெருகு சேர்த்து சுவற்றில் 

மாட்டி  அறைக்கு  அழகு சேர்த்தேன்...



நீங்களும்  செய்து பாருங்களேன்....

Friday, 13 July 2012

ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்






மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: 
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 


Saturday, 16 June 2012

பஞ்ச முக கணபதி ...



இந்த பஞ்ச முக கணபதி தஞ்சை பாணி ஓவியமாக கண்ணாடியில் தீட்டப்பட்டது...

செய்முறை...

டிசைன் ஐ reverse செய்து கண்ணாடியின் பின் பக்கம் இந்தியன் இன்க்கால் வரைந்து கொள்ளவும்...
பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஆயில் பெயிண்ட் அல்லது எனாமல் பெயிண்ட் கொண்டு நிரப்பவும்...
கற்கள் வரும் இடத்தில Stone effect paint  போடவும்...பிறகு மண்டபம்,நகைகள்,பீடம் போன்ற இடங்களுக்கு 
தங்க நிற பெயிண்ட் பூசி காய விடவும்...