badge

Followers

Showing posts with label கணபதி. Show all posts
Showing posts with label கணபதி. Show all posts

Thursday, 23 March 2017

வித்யாசமான பிள்ளையார்கள் - ஒரு ஸ்லைடு ஷோ



வித்யாசமான பிள்ளையார்கள் .... 
ஒரு ஸ்லைடு ஷோ

(படத்தை சொடுக்கி ஸ்லிட் ஷோவை காணவும் )

முழு முதல் கடவுளான விநாயகர்
ஒரு குழந்தை போல...
சிநேகிதர் போன்றவர்....
அதனால் தானோ என்னவோ
அவரை மஞ்சள்,களிமண் ,ஏன் ....சாணத்தில் கூட
பிடித்து வைத்து  சாதாரண அருகம் புல்லாலும் ,
எருக்கம் பூவாலும் அர்ச்சித்து வழிபட்டு  வருகிறோம்...
அது மட்டும் அல்ல...
அவரை மட்டுமே பல பல வடிவங்கள் கொடுத்து கொண்டாடுகிறோம்...

ஹாயாக  திண்டில் சாய்ந்து படுத்துக்கொண்ட பிள்ளையார்...
மூஞ்சூர் வரையும் ஓவியத்துக்கு மாடல் செய்யும் கணநாதர்...
பட்டம் விடும் பிள்ளையார்....
கனக்குப் பிள்ளை பிள்ளையார்...
பெட்டியுடன் பயணம் செல்லும் லம்போதரர்...
வீணையின் நாதமாய் இருக்கும் கணேசர்...
பிறை நிலவில் அமர்ந்தவர்...
மூஞ்சூருக்கு வைத்தியர்...
வாத்தியங்கள் இசைப்பவர்...
ஸ்கூட்டரில் பார்ப்பவர்...
லேப் டாப் இல் வேலை செய்பவர்...
இப்படி பக்தரின் இஷ்டப்படி
அவதாரம் செயது அனைவரையும் மகிழ்வித்து அருளுபவர்
இந்த விநாயகர்...
விநாயக சதுர்த்தியின் போது
அவர் எடுக்கும் பல பல நவீன அவதாரங்களில்
ஒரு சிலவற்றின் தொகுப்பே என்னுடைய
இந்த சிறு ஸ்லிட் ஷோ ...

Friday, 25 December 2015

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே.....


இதோ ஒரு புதிய கேரளா ம்யூரல் ஓவியம் ....




அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
ஆழிப் பை நாக பள்ளியானின் மூத்த மருமகன்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
அரளி அருகம் புல்லில் எழுந்து நிற்ப்பவன்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே


(பாடல் வரிகள்...நன்றி இணையம் )

Wednesday, 27 August 2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்






ப்ளாக் உலகத்தாருக்கு என் மனம் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...





கைத்தல நிறைகனி .....(பாடலைக் கேட்டு ரசிக்க...)





கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் ...... அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும் அப்புனம் அதனிடை ...... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் ...... பெருமாளே.



Saturday, 19 July 2014

கணபதி மடியில் கிருஷ்ணர்...என் தஞ்சை ஓவியம்...




குழந்தைக்கிருஷ்ணனை  ஆசையுடன் மடியில் 

அமர்த்தி கொஞ்சும் இந்த வித்தியாசமான கணபதி

நமக்கு தரிசனம் தருவது கேரள மாநிலத்தில்,

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 

ஸ்ரீ மல்லியூர் கணபதி கோவில்

 என்கிற திருத்தலத்தில்... 



பிள்ளையாரை எத்தனையோ வடிவங்களில் 

நாம் வடிவமைத்து வணங்கி மகிழ்கிறோம்...

கிரிகெட் ஆடும் பிள்ளையார்...

கம்ப்யூட்டர் பிள்ளையார்...

வாத்தியங்கள் வாசிக்கும் பிள்ளையார்...

படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் கணேசர்...

என்று இன்று எண்ணற்ற வடிவங்களில் 

நாம் கணநாதரை கொண்டாடுகிறோம்...



ஆனால்,பல நூறு ஆண்டுகளுக்கு முன் 

கட்டப்பட்ட இந்தத் திருத்தலத்தில் 

மாமன் கிருஷ்ணனை வாஞ்சையோடு 

தன் மடி மீது அமர வைத்துக் கொஞ்சும் 

அன்பான மருமகனாக கணபதி காட்சி தருகிறார்...



இவர்களை தஞ்சாவூர் பாணி ஓவியமாக வடித்து 

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...



Sunday, 15 June 2014

ஓய்வெடுக்கும் விநாயகர் -என் தஞ்சை பாணி ஓவியம்






பல பல வடிவங்களில் விநாயகரை ஓவியமாக 

(குறிப்பாக தஞ்சை பாணி ஓவியமாக)

வரைந்திருந்தாலும் ,இந்தப்  பிள்ளையார் என் 

மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்....


பொன் வேய்ந்த மண்டபத்தில் அமரவில்லை....

நவரத்தினங்கள் பதித்த பீடத்தில் அமரவில்லை...

ஏன் ,அபயஹஸ்தம்  கூட காட்டி  பக்தருக்கு 

அருளவில்லை...


ஆனால்,உங்களைபோல் ...என்னைப்போல்....

ஹாயாக மஞ்சத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு 

மனதுக்குப் பிடித்த புத்தகத்தை நிம்மதியாகப் 

படித்துக் கொண்டு "ரிலாக்ஸ் " செய்தபடி 

ஓய்வெடுக்கிறார்  இந்த கஜானனர்....


அல்லும் பகலும் அயராது பக்தகோடிகளை 

காத்து,துயர் துடைக்கும் இவர் நம்மைப் போல 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த படி 

ஓய்வெடுப்பதற்கும்  நேரம் ஒதுக்குகிறார் 

என்று நினைத்துப் பார்பதே அவருடன் நம்மை 

இன்னும் நெருக்கமாக்குகிறதோ?


Monday, 3 March 2014

பிள்ளையார் -ஒரு வித்தியாசமான ம்யூரல்












அளவாக வெட்டப்பட்ட 

மரத்துண்டின் மீது 

சிறிய கற்கள்  பாங்காக ஒட்டி 

எம் சீல் (mseal ) கொண்டு 

சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற 

வடிவங்கள்  செய்து 

பொருத்தி காயவிட்டு,

எம் சீலால்  வடிவமைத்த 

பிள்ளையாரின்  முகம்,
காது,கிரீடம் ,தந்தம் 

ஆகியவைகளை  செய்து 

ம் யூரல்லை  முழுமையாக்க 

ஆணைமுகத்தனின் தும்பிக்கையில் 

ஒரு சிறு மலரை  பொருத்தி 

வைத்தேன்....

தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள் 

பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )

மெருகு சேர்த்து சுவற்றில் 

மாட்டி  அறைக்கு  அழகு சேர்த்தேன்...



நீங்களும்  செய்து பாருங்களேன்....

Tuesday, 25 February 2014

மூங்கில் தட்டில் பிள்ளையார்




மூங்கில் தட்டில் பிள்ளையார் 







யார்  சொன்னது...

அழகிய அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு 

நிறைய நேரம்,பணம் எக்கச்சக்கமான பொறுமை 

எல்லாம் தேவை என்று?

இதோ....10 ருபாய் செலவில் ஒரு அழகான 

சுவர் அலங்காரம்....மிக குறைந்த நேரத்தில் செய்யலாம்...

ஒரு சாதாரண மூங்கில் தட்டை சுத்தமாகி ,

பிடித்த வர்ணங்களை பூசி பளிச் என்று ஆக்கி 

நன்றாக காய வைத்து  அதன் நடுவே ஒரு சிறிய 

பிள்ளையார்  பொம்மையை ஒட்டவும்...

பிள்ளையாருக்கு மெட்டாலிக் bronze கலர் 

(பித்தளை நிறம்))பூசி காய வைத்து ,

தட்டின் பின் பக்கம் ஒரு நூல் கோர்த்து 

அலங்காரமாக சுவற்றில் மாட்டலாம்...

so simple !!!

Wednesday, 7 November 2012

விநாயகனே வினை தீர்ப்பவனே...






ஒரு அழகான பீங்கன் தட்டில் glass colors + mseal  வைத்து இந்தப் பிள்ளையாரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...




விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே...

Friday, 13 July 2012

ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்






மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: 
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 


Monday, 2 July 2012

நர்த்தன கணபதி -தஞ்சாவூர் பாணி ஓவியம்





கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
(நன்றி -இணையம் )


ஆனந்த நடம் இடும் விக்ன ராஜனின்  திரு உருவத்தை தஞ்சை பாணி  ஓவியமாக வரைந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

Saturday, 16 June 2012

பஞ்ச முக கணபதி ...



இந்த பஞ்ச முக கணபதி தஞ்சை பாணி ஓவியமாக கண்ணாடியில் தீட்டப்பட்டது...

செய்முறை...

டிசைன் ஐ reverse செய்து கண்ணாடியின் பின் பக்கம் இந்தியன் இன்க்கால் வரைந்து கொள்ளவும்...
பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஆயில் பெயிண்ட் அல்லது எனாமல் பெயிண்ட் கொண்டு நிரப்பவும்...
கற்கள் வரும் இடத்தில Stone effect paint  போடவும்...பிறகு மண்டபம்,நகைகள்,பீடம் போன்ற இடங்களுக்கு 
தங்க நிற பெயிண்ட் பூசி காய விடவும்...