badge

Followers

Thursday, 30 November 2017

விதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி




விதவிதமாய்  ஜிமிக்கிகள் ...

லோலாக்குகள்...

பெண்களுக்குப் பிடித்தமான 

இந்த வகை காதணிகள் 

புகழின் உச்சத்துக்குச் 

சென்றது என்னமோ 

"எண்டம்மேட  ஜிமிக்கி கம்மல் "
மலையாளப் பாடல் 

வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவி \
புகழக் கோடி நாட்டிய பிறகு தானோ....


(படத்தை சொடுக்கி ஸ்லைடு ஷோ வை  பார்க்கவும்...)

Sunday, 26 November 2017

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*


வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்...

Wednesday, 22 November 2017

கண்ணா உன்னைத் தேடுகிறேன்

கண்ணா உன்னைத் தேடுகிறேன்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம்
பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை?

நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன்
திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.

எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது! யாரிடம் போய்ச் சொல்வது இதை! பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே! யார் உள்ளே வந்து இப்படி
செய்கிறார்கள்?

அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே ""கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா? கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே! அதையும் வீட்டில் என்
தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன். அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது?

உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன். காலையில் வந்துபார்த்தால் உன்காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்! ஏன் இப்படி?'' என்று அரற்றினார்.

அபிஷேகத்தை முடித்து, கண்ணனுக்கு அலங்காரம் செய்தார். மக்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினார்கள். அதன்பின் அர்ச்சனை, ஆராதனை என வழக்கமான நடவடிக்கைகளில் பொழுது சென்றது.

இரவு கோயிலைப் பூட்டும்போதுதான் பார்த்தார். நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள். தளர்ந்த தேகம். வயோதிகம் தன் கடந்த காலக் கதையை, அவளது முகத்தில் சுருக்கங்களால் எழுதியிருந்தது

கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பரவசம். அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.

பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர்பிரியத்தோடு கேட்டார்:
 ""பாட்டி! இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?''

""நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். கண்ணன் அருளால் அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார். ""அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''

""எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது? போகப் போகிற கட்டை. என் பிள்ளைகண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா! ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலது கை வலிக்காதோ! இவர்கள் தங்களுக்கான வேண்டுதலைக் கொஞ்சமாவது நிறுத்தினால் தானே அவன் தன் கைக்குச் சற்று ஓய்வு கொடுக்க முடியும்! ஏற்கனவே பாஞ்சாலிக்குப் புடவை வழங்கியும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியும்அவன் கை வலித்திருக்கும். புல்லாங்குழல் அதிக கனமில்லாததுதான்.
என்றாலும், ஓயாமல் அதைக் கையில் பிடித்து உதட்டருகே வைத்து ஊதிக்கொண்டிருந்தால் அந்தக் கரம் என்னாவது? இதையெல்லாம் யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை. நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம்
கொண்டாடிக் கேட்கிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன். எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!''

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள்.படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி. ஆனால் எத்தனை பக்தி!
நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி
பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும். அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.

மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு, தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.

அன்றிரவு, அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.  பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.
கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.

""அர்ச்சகரே! உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை. என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.  அதன்மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.
மூதாட்டியின் இல்லத்திற்குச்சென்று நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!

மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது. மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.

அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள். அதற்குமுன் தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.

மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது. "சர்வம்
கிருஷ்ணார்ப்பணம்!' என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள் சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.

என்ன ஆச்சரியம்! அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாணம்
பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.

நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள். ""கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகம். போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?'' என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.

வாய் கொப்பளித்து, முகத்தைத் தூய்மை செய்துகொண்டுவந்தாள். ""தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உடம்புக்கு ஆகாது. நீவெதுவெதுப்பான நீரில் முகம்
கழுவிக்கொள். இன்று உனக்காகபுள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,'' என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள். ஒவ்வொரு புள்ளிவைக்கும்போதும் "கிருஷ்ணா! முகுந்தா! முராரே!' என்றுகண்ணன் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே புள்ளிவைத்தாள்.

பின் கண்ணனைப் பற்றியதோத்திரங்களைச் சொல்லியவாறே இழையிழுத்துக்கோலம் போட்டாள். தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.நடந்ததெல்லாம் கனவா நனவா?
அன்றும் கோயிலுக்குப் போனார்.கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப்பார்த்ததும் அவரது மனம் பக்தியில் தழதழத்தது.

அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார். அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவள் வரவில்லை. அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:

""அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது''.

ஏன்?- வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

""நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது. இன்று அவளுக்கு உடல் நலமில்லை. அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.

நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக நீங்கள் அவள்
இல்லம் செல்லுங்கள். அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.

மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி,
தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள் பக்தியின் பெருமையை நாளை
முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்!''

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.

அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை. மறுநாள் காலை மூதாட்டியின்
இல்லத்திற்கு விரைந்தார். கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.
பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.
""இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு? என்
பிள்ளை கண்ணனை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அதுபோதும் எனக்கு!''

மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன் நிற்க வெட்கப்பட்டதுபோல் புஷ்பக விமானம் கண்ணன் ஆலயச் சுவரில் மோதி தூள்தூளாகியது.

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான். ""என் தாய் அல்லவா நீ! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?'' என்ற கண்ணன் அந்த ஆன்மாவை இரு குண்டலங்களாக்கித் தன் செவிகளில் அணிந்துகொண்டான்.

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார். கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ அந்த இடத்தில் இப்போது இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன.

சுயநலமற்ற ஏழைக்கிழவியின் பக்தியை அங்கீகரித்த கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.


Courtesy-net

Tuesday, 7 November 2017

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....



  தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார். 
அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார். 
பாபாவை நேசிக்கும் ஒருவன், உண்மையில் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.
 எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.








Sunday, 5 November 2017

16 வகை லட்சுமியின் பலன்களை பெற....




1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும்இ நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லைஇ ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்...
Courtesy-Net

Friday, 3 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா....








 பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார்.

 நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.

 பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். 

வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே.

 பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

-ஓம் சாய்ராம்.



Wednesday, 1 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...






தைரியமாய் இரு -
நானே சுமக்கிறேன்.....
கர்மங்களை
குறைத்துக்கொள்ள வழி,
அதை தைரியமாக
அனுபவிப்பதே...

நீங்கள் எப்போதும்
என்னை
நினைத்துக்கொண்டிருந்தால்
என்பால்
நம்பிக்கைக் கொண்டிருந்தால்
அதை அனுபவிக்கும்
சக்தியை
நான் கொடுக்கிறேன்.
அது துன்பம் என்ற
எண்ணம் உங்களில்
ஏற்படாமல்
நான் செய்கிறேன்.
உன்னில் இருக்கும்
நானே அதை சுமக்கிறேன்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா






கண் பேசும் மொழிகள் புரிகிறதா.....



கண்  பேசும் மொழிகள் புரிகிறதா.....

1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.

5. கண்கள் விரிந்தால் ஆச்சியர்படுகிறது,ஆசைப்படுகிறது.

6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.

7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது

11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.

16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.

20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.

21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.

24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.

27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.....