1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டிபோடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6. வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச்செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடிவந்த கடைசிதலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.பென்சில் கூர்மையாக்க பிளேடு பயன்படுத்திய கடைசி தலைமுறை நாம்தான்..
11.கூட்டஞ்சோரு செய்து சாப்பிட்ட கடைசி தலைமுறை நாம்தான்
12.டைனமோ வைத்து சைக்கிள் ஓட்டிய கடைசிதலைமுறையும் நாம்தான்
13.கில்லி, கோலி, பம்பரம், ஐஸ் நம்பர், உயிர் குடுத்தல், பாண்டி, ஆடுபுலி ஆட்டம், தாயம் போன்றவற்றை விளையாடிய கடைசி தலைமுறையும் நாம்தான்
14.வீடுகட்ட குவித்திருக்கும் மணலில் மணல்வீடு கட்டிய கடைசி தலைமுறையும் நாம்தான்..
15.கரை புரண்டோடும் ஆற்றில் நீந்தி விளையாடிய கடைசி தலைமுறையும் நாம்தான்
16.சுகப்பிரசவத்தில் பிறந்த கடைசி தலைமுறையும் நாம்தான்..
17.படிக்கும்போது உணவுநேரத்தில் மாங்காய்கீற்று, அண்ணாச்சிபழம், 1 ரூபாய் ஐஸ் ,எலந்தபழம், நாவல் பழம், சாப்பிட்ட கடைசிதலைமுறையும் நாம்தான்..