badge

Followers

Tuesday, 28 July 2015

வேலூர்-தெரிந்த ,தெரியாத தகவல்கள்

வேலூர்...தெரிந்த ,தெரியாத தகவல்கள் 
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு. ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள். பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி. பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம். இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.
வேலூர்க் கோட்டை :
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது. தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர். இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு. எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை. புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம். ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.
இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது. இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது. பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.
மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன. ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன. கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.
அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது. மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது. ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது. நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.

Monday, 20 July 2015

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!!
ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது  தெரியுமா?
விட்டமின்-A சத்துக்கள் 210% உள்ளது.
விட்டமின் கே 10% உள்ளது.
விட்டமின் சி 6% உள்ளது.
கால்சியம் 2% உள்ளது.


- கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!:
- கண் பார்வையை மேம்படுத்தும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
- உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
- தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
- நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
- இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
- சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
- வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.

- என்ன.. கேரட்ட தேடி கிச்சனுக்கு போறீங்களா.. வாழ்த்துக்கள்!

Tuesday, 14 July 2015

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான / அவசியமான தொடர்பு எண்கள்


நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

Monday, 13 July 2015

வெஜிடபுள் கட்லெட்
வெஜிடபுள் கட்லெட் .....

தேவையான பொருட்கள் 


 • உருளைக்கிழங்கு -2-3
 • வெங்காயம்-2
 • காரட் -1
 • பச்சை பட்டாணி -1/2 கப் 
 • ரொட்டி -3 ஸ்லிஸ் 
 • உடைத்த முந்திரி -1 டீஸ்பூன் 
 • சீரகம்-1/2 டீஸ்பூன் 
 • மிளகாய் தூள் -2 டீஸ்பூன் 
 • கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன் 
 • ரொட்டித்தூள் -தேவையான அளவு 
 • கார்ன் ப்ளோர் (வெள்ளை சோள மாவு)-2 டேபிள் ஸ்பூன் 
 • உப்பு - தேவையான அளவு 
 • எண்ணை -தேவையான அளவு 
செய்முறை 

 • வெங்காயத்தை பொடியாக அறிந்துகொள்ளவும் .
 • உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
 • அரிந்த காரட் ,பச்சை பட்டாணி ,ஆகியவற்றை வேக வைத்து வடித்துக்கொள்ளவும்.
 • வாணலியில் சிறிது எண்ணையை காய வைத்து அதில் சீரகத்தை பொரிக்கவும்.
 • இதில் அறிந்த வேங்காயத்தை  வதக்கவும்.
 • இதில் வெந்த காய்கறிகள் ,முந்திரி ,மசாலா தூள்,உப்பு,காரம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
 • இதில் ரொட்டியை சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு நன்றாக் கிளறி இறக்கி வைக்கவும்.
 • சோள மாவை தண்ணீரில் கொஞ்சம் தளர்வான பதத்தில் கரைக்கவும்.(நீர்த தோசை மாவு பதம்)
 • காய்கறிக் கலவையை வடைகள் போல தட்டிக் கொள்ளவும் .
 • அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டியெடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
 • தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

இந்தக்காய் களுடன்  காலி பிளவர் ,பீன்ஸ் ,நூல்கோல் போன்றவைகளும் சேர்க்கலாம் 

Monday, 6 July 2015

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது?

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.


ஒப்பணக்கார வீதி :
விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புரம் :
1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:
பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:
கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.
டவுன்ஹால் :
விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.


கோட்டை மேடு :
டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1792ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.


ராஜா வீதி :
ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.


காட்டூர் :
அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.
இன்றைய Brookfields mall  இருக்கும் தெரு ஒரு காலத்தில் பனங்காட்டு  ரோடு  என்று அழைக்கப்பட்டது...


Sunday, 5 July 2015

விளம்பரங்கள் என்ன சொல்ல வருகின்றன???
விளம்பரங்கள் என்ன சொல்ல வருகின்றன ???புரியவிலையே.....


டைரி மில்க் சாக்லேட் விளம்பரம் என்ன சொல்ல வருகிறது ?

என்ன வயதானாலும் நாகரீகமான நங்கையாக இருந்தாலும் அவருக்கு "நீட் "டாக சாக்லேட் 
சாப்பிடத் தெரியாது...
எங்க வீட்டு மூணு வயசு வாண்டு கூட மூஞ்சியெல்லாம் பூசிக்கொள்ளாமல் நறுவிசாக சாக்லேட் டை  அழகாக சாப்பிடுகிறாளே ....அவளுக்கு இருக்கும் சுத்தம் கூடவா இந்த லட்சக்கணக்கான  சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகைக்கு  இல்லை?#நல்ல செகண்ட் ஹான்ட் கார் வாங்கனுமா?

உஷார்...cartrade .com  பக்கம் போகாதேங்க.... அந்த விளம்பரமே சொல்லுதே....அதை பார்த்து மனுஷர்கள்  கார்  வாங்குவதில்லை....நாய்கள் தான் கார் வாங்குகின்றன.....#குளிர் பானம் வேண்டுமானால் ,அதற்காக உயிரை  பணயம் வைத்து ஸ்டண்ட்  அடிக்க  தயங்க மாட்டார்கள் நம் சூப்பர் ஹீரோக்கள்....
எதுக்குங்க ,அப்பிடியெல்லாம் ரிஸ்க் எடுத்து ஒரு கோலா குடிக்கணும்?கடைக்குப் போயி ஒரு 20 ருபாய் குடுத்து வாங்கிக் குடிக்கலாமே...அதுதான் கோடிக் கணக்கில் சம்பாதிகிறார்களே .....#டாய்லெட்  ரொம்ப அழுக்காக  இருக்கா ?

நோ ப்ராப்ளம் !

வாசல் கதவு மணி அடிக்கும்....

திறந்தால் ,நேற்றைய ஹீரோ நிற்பார் ....கையில் "ஹார்பிக் "உடன் ....

நீங்கள் சிரமம் படவே ....வேண்டாம்.

அவரே  உங்கள் வீட்டுக் கழிப்பறையை பளிச் என்று ஆக்குவார்!

நீங்கள் "வாவ் " என்று ஒரு ரியாக்க்ஷன்  தந்தால் போதும் .....


#வேலை உங்கள் திறமை,ஆளுமை ,கல்வித் தகுதிக்காக  தரப்படுவது இல்லை.....

உங்கள்  சருமத்தின் நிறமே அதை வாங்கித் தருகிறது....(கேவலம்) இதற்க்கு எந்தப் பெண்ணிய வாத இயக்கமும் எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லையோ?

#உப்பு இருப்பது  உங்கள் சமயலறையில் இல்லை ....உங்கள் டூத் பேஸ்டில்....

#உங்கள் பழரசத்தில் பழம் இருக்கோ இல்லையோ,உங்கள் ஷாம்பூவில் பழங்கள் இருக்கின்றன...

#அழுக்கு நல்லது...அது நட்பு ,உறவு ஆகியவற்றை பலப்படுத்தும்...அப்படினா சுத்தம் சண்டையை அதிகரிக்குமா?


# இளம் பெண்ணகளின் மிகப்பெரிய பிரச்சனை ....
முகப்பரு .....

#அம்மாவும் மகளும் அதிகம் பேசுவது....கூந்தலைப்பற்றி...

#சுத்தமான சூரியகாந்தி என்னை உபயோகித்து சமைக்கும் வீடுகளில் ஆரோகியம் வருவது சந்தேகம் தான்....

ஏனென்றால்,அந்த எண்ணையை உபயோகித்து தினமும் டைனிங் டேபிள்  வழிய ,வழிய  விதவிதமாய் பொரித்த ஐட்டம் கள்  செய்து குடும்பத்தார் அனைவரும் ஒரு கை பார்த்தால் ....ஓவர் வெயிட் ,அஜீரணம்,வயித்து வலி நிச்சயம்....

#பைக் வாங்குவது  நகர தெருக்களில் ஓட்டுவதற்கு அல்ல....மலை,காடு,கடற்கரை போன்ற இடங்களில் ஒட்டவே....

#"சென்னைக்கு மிக அருகில் "விற்கப்படும் வீட்டு மனை-நகரிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும்....அங்கிருந்து சென்னைக்கு 10 நிமிடத்தில் வரலாம்....

#தொலை காட்சி நடிகர்கள்  காரண்டீ  கொடுத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் வீட்டு மனை வாங்குவார்கள்...

#நடிகை/நடிகர் சொல்வதைக் கேட்டுத் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை காலேஜில் சேர் க்கிறார்கள் ....


இன்னும் பல பல...அவற்றை இன்னொரு பதிவில் சொல்கிறேன்...Saturday, 4 July 2015

நிகழ்காலத்தை தொலைத்து விடாதீர்கள்...அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. 


பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்
கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... 


குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. .....


இந்தச் சிந்தனையினூடே அவன் வலது கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.


பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். 


பிரமித்துவிட்டான்.


 காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.


யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் .