badge

Followers

Wednesday, 4 July 2012

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...






மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
(நன்றி- இணையம் )

செராமிக்  பௌடர் +பெவிகால்  சேர்த்து பிசைந்து செய்த
பூக்கள் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட  இந்த போட்டோ
frame ஐ  செய்து  லேசான  பளபளப்பு தரக்கூடிய Pearl colours  பூக்களுக்கு
பூசி,,இலைகளை பச்சை வர்ணம் கொடுத்து காயவிட்டேன்..(போட்டோ frame base  ரெடியாக  கிடைக்கிறது )
அதில் அரவிந்த அன்னையின் படத்தை வைத்தேன்...
மலர் விரும்பியான அன்னைக்கு மலர்கள் நிறைந்த போட்டோ frame !

இந்த அருமையான பாட்டை கேட்டு மகிழ்ந்து அன்னை அருள் பெறுவோம்...
malar pola malarkinra

7 comments:

  1. போட்டோ பிரேம் பூக்கள் வெகு அழகு...எதையும் பொருத்தமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் செய்கிறீர்கள்..நானும் செய்து பார்க்கிறேன்..

    ReplyDelete
  2. romba nandraga irukkirathu! vazhthukkal!

    ReplyDelete
  3. //மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
    பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே//

    மிகவும் அருமையான பாடல் பகிர்வு.

    பாடலுக்கு ஏற்றாற்போல மலர்களுடன் கூடிய அழகான வண்ணப்படம் தீட்டியுள்ளீர்கள்.

    அந்த ஃப்ரேமில் உள்ள ஒவ்வொரு பூக்களும், இதழ்களும், இலைகளும் உங்களின் உழைப்பைப் புகழ்வதாகவே உள்ளன.

    //அதில் அரவிந்த அன்னையின் படத்தை வைத்தேன்...
    மலர் விரும்பியான அன்னைக்கு மலர்கள் நிறைந்த போட்டோ ஃப்ரேம்! //

    மிகவும் பொருத்தமே! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மிகவும் அருமை அக்கா... அழகான இழைகளின் தொகுப்பில் பூக்கள் .... அற்புதம் ... செய்முறை இன்னும் அருமை அக்கா....

    ReplyDelete
  5. விஜி,ராதா ராணி ,Thaanaithalaivi &VGK Sir,
    Photo frame ஐ ரசித்து தாங்கள் தந்த கனிவான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி .
    Glad you like the song too...:)))

    ReplyDelete
  6. https://www.youtube.com/watch?v=AtrXlQBJJ6A

    ReplyDelete
    Replies
    1. Thanks for the wonderful link,Rajesh.Welcome to my blog

      Delete