புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
இந்த 3-D ம்யுரலில் பல அம்சங்களும் கண்ணனின் பிரதிபலிப்பாகவே உள்ளன...
யமுனை ஆற்றின் நீல நிறம் ....அந்த நீரின் அலைகள்....
பிருந்தாவன தோட்டங்களின் ..பசுமை...
நந்தக்ராமத்தின் மண்ணின் சிவப்பு....
Symbolic க்காக கண்ணனை நினைவு படுத்தும் புல்லாங்குழலும் மயில் இறகுகளும்
ஒன்று சேர்ந்து அந்த மாயவனை கண் முன் நிறுத்துவதாகவும் அவன் குழல் இசையை
உணருவதாகவும் எனக்கு தோன்றுகிறது....
Symbolic க்காக கண்ணனை நினைவு படுத்தும் புல்லாங்குழலும் மயில் இறகுகளும்
ReplyDeleteஒன்று சேர்ந்து அந்த மாயவனை கண் முன் நிறுத்துவதாகவும் அவன் குழல் இசையை
உணருவதாகவும்
very nice description....
மிகவும் அருமை அக்கா...... வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவண்ணமும் சின்னங்களும் கிருஷ்ணனை தான் நினைவு படுத்துகின்றன..
ReplyDelete//புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
ReplyDeleteபுருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)//
போன்ற அழகான அருமையான பாடல்களின் மூலம் தங்களின் கைவண்ணத்தில் வரைந்த அற்புதமான படங்கள் யாவும் இப்போது பேசும் படங்களாகவே மாறிவிட்டன.
அருமையான பகிர்வுகள். தொடரட்டும்.
ராஜராஜேஸ்வரி,விஜி,ராதா ராணி &VGK Sir,
ReplyDeleteபடத்தையும் ,பாடலையும் ரசித்து தாங்கள் தந்த
கனிவான பின்னூட்டங்களுக்கு மிக்க nandri:)))