badge

Followers

Wednesday 21 March 2012

கைவண்ணம்...அஷ்டலக்ஷ்மி பானை ...

ஒழுகும் பானையின் கதையை ப்ளாகில் எழுதினதுக்கு  பானைகள் எல்லாம் படை திரட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விட்டன...

சரி... சரி... ஒரு அட்டகாசமான பானையை பற்றி அடுத்தது எழுதுகிறேன் என்று சொல்லி பானைக்கூட்டதை ஒரு வழியாக சமாளித்து அனுப்பினேன்...

இதோ...

வருகிறேன் விஷயத்துக்கு...

மேலே உள்ள பானையை எப்படி இந்த உருவத்துக்கு கொண்டுவந்தேன் என்று சொல்லுகிறேன்...

சாதா ரோடு ஓரத்தில் விற்கும் தண்ணீர் வைக்கும் பானை தான் இது...

மினரல் வட்டார் காலத்தில் மண் பானைக்கு என்ன வேலை...

அதனால் ,அதில் என் கைவண்ணத்தை கொஞ்சம் காட்டினேன்...

முதலில் அஷ்டலக்ஷ்மி பொம்மை செட்டை எடுத்து பாந்தமாக பெவிகால் தடவி பானையில் ஒட்டிக்கொண்டேன்...

பிறகு MSEAL  ஆல் அதனை சுற்றியும்,பானையில் அங்கங்கேயும் டிசைன் செய்து ஒட்டி அதில் கோடுகள் பதித்தேன்...

மீதமுள்ள இடத்தை  சும்மா விடாமல் தண்ணீரில் கரைத்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சை  பரவலாக பூசினேன்...

ஒருநாள் காய விட்டு கருப்பு வர்ணம் பூசி அதன் மேல் காப்பர்  நிற வர்ணம் ஒற்றி எடுத்தேன்...

காய்ந்த பிறகு ஒரு கோட் வார்னிஷ் பூசி முடித்தால்....

அருமையான ஆண்டிக்  எபக்டில் ....

அழகான அஷ்டலக்ஷ்மி பானை அலங்காரமாக வைக்க ரெடி!!!

Tuesday 13 March 2012

ஒழுகும் பானையின் கதை


                                                                  

ஒரு துறவி தினமும் தன் குடிலுக்கு ஆற்றிலிருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் எடுத்து செல்வார்...


அதில் ஒன்று நல்ல பானை...ஒன்று விரிசல் விழுந்த பானை...


ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்பி குடிலுக்கு வரும் போது நல்ல பானையில் நீர் தளும்பும்...


விரிசல் விட்ட பானையில் பாதி அளவே தண்ணீர் இருக்கும்...


மீதி தண்ணீர் தான் வழியில் ஒழுகி விடுகிறதே...


நல்ல பானைக்கு இதனால் தன்னைபற்றி ஒரு கர்வம் ...தானே சிறந்த பானை என்று!!!


ஒழுகும் பானைக்கு ஒரு வித அவமானம்...வருத்தம்...தாழ்வு மனப்பான்மை...



ஒரு நாள் வேதனை தாங்காமல் ஒழுகும் பானை துறவியிடம் கேட்டது...

"என்னை எதற்காக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கி எரிந்து விடுங்கள்...
நான் உபயோகம் அற்றவன்...
என்னை நினைத்து எனக்கே அவமானமாக இருக்கிறது...ஒரு நாள் கூட என் கடமையை என்னால் ஒழுங்காக செய்ய முடியவில்லை...செய்யவும் முடியாது...நான் தான் ஓட்டை பானை ஆயிற்றே..."


என்று அழுதது...


"கொஞ்ச நாள் காத்திரு...உன்னைப்பற்றி நீயே புரிந்துகொள்ள்வாய்" என்றார் துறவி...

ஆறு மாதங்கள் கடந்தன...
ஓட்டை பானையின் அவமானமும்
நல்ல பானையின் கர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது...     
Shade Flower Bed

ஒரு நாள் துறவி இரண்டு பானைகளிடமும் சொன்னார்...

"தண்ணீர் கொண்டுவரும் போது என்ன பார்த்தீர்கள் என்பதை குடிலுக்கு வந்த பிறகு எனக்கு சொல்லுங்கள்..." என்றார்...

அன்று தண்ணீர் கொண்டு வந்த பிறகு இரண்டு பானைகளும் தாங்கள் பார்த்ததை சொல்ல ஆரம்பித்தன...

"கற்கள்...முட்கள்...தான் என் கண்ணில் பட்டன..."என்றது நல்ல பானை...


"பச்சை செடிகள்...பூக்கள்...கொடிகள்...என் பாதையில் பார்த்தேன் " என்றது ஒழுகும் பானை...


துறவி புன்னகைத்தார்...


"நீ ஒரு சொட்டு நீர் கூட வழியில் சிந்தாமல் வந்தாய்...உன் பக்கம் கல்லும் முள்ளுமே இருக்கிறது... ஆனால்,நீ வழி முழுவதும் பாதி நீரை சொட்டு சொட்டாக கசிந்து கொண்டு வந்தாய்...அந்த நீரினால் உன் பக்கம் செடிகள் முளைத்தன...பூக்கள் பூத்தன...."


"உன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொண்டால் வாழ்கை சோலைவனம் ஆகும்...
உன்னுடையதை பூட்டி வைத்தால் உன்னை சுற்றிலும் பாலைவனம் ஆகும்"

என்றார்...

இரண்டு பானைகளுக்கும் ஏதோ புரிந்தாற்போல இருந்தது...


குறையும் நிறையும் நாம் சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் தான்...என்பதை உணர்ந்தன பானைகள்...


Thursday 8 March 2012

மகளிர் தினம் ...இது மட்டும் போதாது...


மார்ச் 8 ...

அனைத்துலக மகளிர் தினம்...

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் ஆணுக்கு சமமான ஊதியம் கேட்டு பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்த நாள்...
                                                        
பல வருடங்கள் ...


அதை மறந்து விட்டோம்...


திடீர் என்று நம் நாட்டுக்கதவுகள் வெளிநாடுச்சந்தைகளுக்கு திறக்கப்பட்டன ...


பல multinational கள் இங்கு கடை விரிக்க ஆரம்பித்தனர்...


அவர்கள் பொருட்களை மேலும் அதிகமாக சந்தைபடுத்த இந்தமாதிரி பல


சாக்குகள் அவர்களுக்கு கைகொடுத்தன...

மகளிர் தினம்...காதலர் தினம்...அன்னையைர் தினம் ...என்று பல தினங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன...


இன்றைய தினசரிகளில் ...பெண்களை குறி வைத்து பல விளம்பரங்கள்...


மருத்துவமனைகள் இன்று மட்டும் பெண்கள் உடல் நல பரிசோதனைகளை
தள்ளுபடி விலையில் செய்கின்றன...

துணிக்கடை,நகைக்கடை,உயர்தர ஹோட்டல்கள்...அனைவரும் பெண்களுக்கு இன்று மட்டும் தனி சிறப்பு சலுகை தருகிறார்கள்...

ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கூட இன்று சிறப்பு சலுகையாக அரை சதம் வட்டி அதிகம் தருகிறார்கள்...

நல்லது தான்...மகளிருக்கும் சிறு லாபம்...வர்த்தகர்களுக்கும் நல்ல வருமானம்...

ஆனால், இதுவா உண்மையில் மகளிர் தினம்?

என்னைப்பொருதவரையில்...

#என்று ஒரு பெண் குழந்தை பிறப்பு ஆண் குழந்தையின் பிறப்புக்கு சமமாக எல்லா வீடுகளிலும் கொண்டாடப்படுகிறதோ .....

# என்று கணவனை இழந்த காரணத்தால் பெண் சமுதாயத்தால்  எந்த விதத்திலும் நோக அடிக்கப்படுவதில்லையோ...

#என்று கற்பழிக்கப்பட்டவள் எந்த விதத்தில் அந்த குற்றத்தை தூண்டும் விதத்தில் நடந்தாள் என்று ஆராய்ச்சி செய்யப்படுவது நிறுத்தபடுவதில்லையோ...

#என்று பெண்கள் பெயர்,உருவம் போன்றவைகளைக்கூட தங்கள் பொருட்களின்
வியாபாரத்தை பெருக்கும் கருவியாக பயன்படுத்தப்படுவது விடப்படுகிறதோ...

#என்று பெண்ணுக்கு குழந்தை பேரு இல்லாவிட்டால் அவளை அமிலப்பார்வை பார்ப்பது நிருத்தப்படுகிறதோ...


#என்று பெண்,விவாகரத்து கேட்பது...தனியாகவே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ முடிவு செய்வது... விமர்சிக்கப்படுவது நிருத்தப்படுகிறதோ...


#எந்த ஒரு பெண்ணாவது வன்முறைக்கு ஆளானாலும்-அது வீட்டுக்குள் நடந்தாலும் கூட-அது தவறு என்று தெரிந்தும் சமுதாயம் தட்டிகேட்க யோசிப்பதும்,"புருஷன் பொண்டாட்டி சண்டை தானே" என்று ஒதுங்கி இருப்பதும் மாறுகிறதோ...


#என்று பெண்ணியம் பேசுபவர் அடங்காபிடாரி என்ற கண்ணோட்டத்தில் பெண்ணை ஊடகங்கள் சித்தரிப்பது மாறுகிறதோ...


#என்று பெண்ணுக்கு எதிராக காலாகாலமாக சொல்லப்படும் பழமொழிகள் ஒழிகிறதோ...


அன்றே...உண்மையான மகளிர் தினம்!






                                                             
...



Tuesday 6 March 2012

அட....இப்படிக்கூட பழி வாங்கலாமா?




     

எல்லாம் முடிந்து விட்டது.

கோர்ட்டில் விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது...

நரேனுடன் வாழ்ந்த 8  வருட வாழ்கை முடிவுக்கு வந்து விட்டது...

இன்னும் ஒரே வாரம் ...வீட்டை விட்டுப்போக வேண்டும்...


பிறகு,நரேனும் அவளும் இங்கே குடியேறுவார்கள்...புது தம்பதிகளாக ....

முதல் நாள்...இரவு முழுவதும் அழுதாள்...

காதலுடன் வாழ்ந்த வாழ்கை...

ஆசையாக வாங்கிய வீடு...போட்ட தோட்டம்........

நினைத்து நினைத்து விசும்பினாள்...

கோபம்...கழிவிரக்கம்...துக்கம் ...ஒரு சேர அவளை வாட்டி வதைத்தது...



இரண்டாவது நாள்...

சின்னதாய் ஒரு வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாள்...

தன் துணி மணிகளை பாக் செய்ய ஆரம்பித்தாள்...

யோசித்தாள்...

சற்று தெளிவானாள்...

மார்க்கெட்டுக்கு சென்றாள்.


அவளுக்கு பிடித்த மீன்,இறைச்சி,முட்டை, காலிபிளவர், கேக்  வாங்கி வந்தாள்.


சமைத்தாள்.திருப்தியாக சாப்பிட்டாள்.


பிறகு...

மிச்சம்,மீதி இருந்த




அவித்த முட்டை,அரைவேக்காடு மீன்,இறைச்சி,பச்சை காலிபிளவர்

துண்டுகள் ஆகியவற்றை கர்ட்டன் ராட்ககுக்குள் மெதுவாகத் திணித்தாள்... .

கர்ட்டன் களை மாட்டினாள்.


false ceiling  ஐ பிரித்தாள்.அதற்குள் ஒரு  முட்டைகோஸை

தண்ணீரில் ஊறவைத்துப் போட்டாள்.


காலையில் அவன் வந்தான்.


வீட்டுசாவியை கொடுத்துவிட்டு துணிபெட்டியுடன் கிளம்பினாள்...

" நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம் " என்றவனைப்பார்த்து

புன்னகைத்தாள்.









நான்கு நாட்கள் நரேனும்  அவன் புதுக்காதலியும் அந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தனர்...

ஐந்தாம் நாள்...

"எங்கிருந்தோ எலி செத்த வாடை வீசுதே " மூக்கை சுளித்தனர்...

ஏழாம் நாள்.

"நாத்தம் குடலை பிடுங்குது..." அவளும் ,அவனும் வாந்தி எடுக்க...

"ஐயே நான் இந்த நாத்தம் புடிச்ச வீட்டில் வேலை செய்ய

மாட்டேன்"வேலைக்காரி நின்றுவிட்டாள்.


Pestcontrol  ஆட்கள் வந்து வீடு பூராவும் பாத்தனர் ...


ஒண்ணுமே தெரியலே... கிளம்பிவிட்டனர்.

சாக்கடையை சுத்தம் செய்து பார்த்தான்...நோ ப்ராபளம்...

அக்கம் பக்கம் சண்டைக்கு வந்தனர்...


"உங்கள் வீட்டில் இருந்து ஏதோ செத்த வாடை வருது..."

"உடனே செரி செய்யாவிட்டால் nuisance கேஸ் போடுவோம்!"

இவன் தலையை பிய்த்து கொண்டான்...


அவளுடன் ஹோட்டல் ரூமில் தங்கினான்...

ராத்திரி இந்த "நறுமணம் " அழைக்க தெரு நாய்கள் வீட்டை

சுற்றி ஊளை இட்டன...

"வீட்டில் பேய் இருக்கு...அதனால் நாய்,நரியெல்லாம் ஊளையிடுது!"

அவன் தலையில் கை வைத்துக்கொண்டான்...

வீட்டை விற்க விளம்பரம் தந்தான்...ப்ரோகர்களிடம் சொன்னான்.


பாதி விலை கிடைத்தாலும் போதும் என்றான்...


வந்தவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினார்கள்...


நாத்தவீடு புகழ் அந்த ஊரெல்லாம் பரவியது...

ஊரார் தந்த புகார் பெயரில் நகர்மன்றம் நடவடிக்கை எடுத்தது...


"2  நாளில் நாத்தம் போகவிட்டால் வீட்டை நகர்மன்றம் கைப்பற்றும்"


நோட்டீஸ் வந்தது...


நரேன் கவலையுடன் ஆபீசில் உட்கார்திருந்தான்...

முதல் மனைவி வந்தாள்...

"என்ன கவலையாக இருக்கிறாய்?"

நட்பாக விசாரித்தாள்...

விஷயத்தை முழுவதும் வெளியில் சொல்ல அவன் தன்மானம் இடம் தரவில்லை...

"கொஞ்சம் ப்ராபளம்...வீட்டை உடனடியாக விற்க வேணும்..."

"அடடா ...எனக்கு பிடித்த வீடு...வாங்க ஆசை தான்..."

"எவள்ளவு எதிர்பார்க்கிறாய்?"

"உனக்கு என்றால் இந்த விலை...ஆனால் இன்றே வாங்க வேண்டும்"

அதன் உண்மை விலையில் 25 % சொன்னான்..."

"இதோ.."செக் கொடுத்தாள்... உடனடியாக பத்திரம் பதிவானது...

"நாளைக்கு வீடு இடிக்கபட்டலும் கவலை இல்லை...தப்பிச்சோம்டா சாமி"

என்று நாத்தவிவகாரத்தை சொல்லாமல் மறைத்தான்...

நகரமன்ற நோட்டீஸ் விஷயத்தை அமுக்கினான்...


"ஒரே கண்டிஷன் ...எல்லா சாமானும் வீட்டில் இருந்து வெளியே உடனடியாக

போகவேண்டும்...டேபிள்,chair ,கர்டன் ,கர்டன் ராட்,false  ceiling உட்பட ..."


Swayam Curtains Small Red

கண்டிஷன் போட்டாள்...


அவைகளும் போனது...அவற்றுடனே நாற்றமும் ...

வீடும் அவளது ஆனது...


(நெட்டில் படித்த இங்கிலீஷ் ஜோக்கை வைத்து எழுதியது....)