ஒழுகும் பானையின் கதையை ப்ளாகில் எழுதினதுக்கு பானைகள் எல்லாம் படை திரட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விட்டன...
சரி... சரி... ஒரு அட்டகாசமான பானையை பற்றி அடுத்தது எழுதுகிறேன் என்று சொல்லி பானைக்கூட்டதை ஒரு வழியாக சமாளித்து அனுப்பினேன்...
இதோ...
வருகிறேன் விஷயத்துக்கு...
மேலே உள்ள பானையை எப்படி இந்த உருவத்துக்கு கொண்டுவந்தேன் என்று சொல்லுகிறேன்...
சாதா ரோடு ஓரத்தில் விற்கும் தண்ணீர் வைக்கும் பானை தான் இது...
மினரல் வட்டார் காலத்தில் மண் பானைக்கு என்ன வேலை...
அதனால் ,அதில் என் கைவண்ணத்தை கொஞ்சம் காட்டினேன்...
முதலில் அஷ்டலக்ஷ்மி பொம்மை செட்டை எடுத்து பாந்தமாக பெவிகால் தடவி பானையில் ஒட்டிக்கொண்டேன்...
பிறகு MSEAL ஆல் அதனை சுற்றியும்,பானையில் அங்கங்கேயும் டிசைன் செய்து ஒட்டி அதில் கோடுகள் பதித்தேன்...
மீதமுள்ள இடத்தை சும்மா விடாமல் தண்ணீரில் கரைத்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சை பரவலாக பூசினேன்...
ஒருநாள் காய விட்டு கருப்பு வர்ணம் பூசி அதன் மேல் காப்பர் நிற வர்ணம் ஒற்றி எடுத்தேன்...
காய்ந்த பிறகு ஒரு கோட் வார்னிஷ் பூசி முடித்தால்....
அருமையான ஆண்டிக் எபக்டில் ....
அழகான அஷ்டலக்ஷ்மி பானை அலங்காரமாக வைக்க ரெடி!!!
உங்களிடம் மாட்டிய பானை மிகவும் அதிர்ஷ்டக்கார பானை தான்.
ReplyDeleteஅதில் அப்படியே அஷ்டலக்ஷ்மிகளையும் அனைத்து ஐஸ்வர்யங்களையும் சேர்த்து அனைவரும் கைகூப்பி வணங்கிடும் பானையாக அல்லவா மாற்றி விட்டீர்கள்! சபாஷ் மேடம் ;)))))
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
உங்கள் கை பட்ட ஒரு பானையில் இன்று எட்டு லக்ஷ்மிகள், பதமாக+இதமாக+இன்பம் ஊட்டுவதாக.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk
அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி...
ReplyDeleteகை வண்ணம் மிக அழகு!
ReplyDeleteAhaaaaaaaa
ReplyDeleteReally very pretty. Nice creation.
viji
தங்கள் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ,மனோ சுவாமிநாதன்
ReplyDeleteThank you,Viji
ReplyDeleteஅருமையான ஆண்டிக் எபக்டில் ....
ReplyDeleteஅழகான அஷ்டலக்ஷ்மி பானை அலங்காரமாக கருத்தைக் கவர்ந்தது.
படைப்புத் திறமைக்குப் பாராட்டுக்கள்...
அந்தப்பானைக்கு
ReplyDeleteஇந்தப்பானை சரியான போட்டிதான்..
ஓட்டைப்பனை ஒரு மாற்று
ReplyDeleteமதிப்பில் அதிகம்தான்..
தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி,ராஜராஜேஸ்வரி...நீங்கள் சொல்வது போல உதவும் பானையின் அழகே தனி அழகு...
ReplyDeletenice creation
ReplyDeleteThanx for the comment,Kasthuri
ReplyDeletegood idea
ReplyDelete