மார்ச் 8 ...
அனைத்துலக மகளிர் தினம்...
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் ஆணுக்கு சமமான ஊதியம் கேட்டு பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்த நாள்...
பல வருடங்கள் ...
அதை மறந்து விட்டோம்...
திடீர் என்று நம் நாட்டுக்கதவுகள் வெளிநாடுச்சந்தைகளுக்கு திறக்கப்பட்டன ...
பல multinational கள் இங்கு கடை விரிக்க ஆரம்பித்தனர்...
அவர்கள் பொருட்களை மேலும் அதிகமாக சந்தைபடுத்த இந்தமாதிரி பல
சாக்குகள் அவர்களுக்கு கைகொடுத்தன...
மகளிர் தினம்...காதலர் தினம்...அன்னையைர் தினம் ...என்று பல தினங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன...
இன்றைய தினசரிகளில் ...பெண்களை குறி வைத்து பல விளம்பரங்கள்...
மருத்துவமனைகள் இன்று மட்டும் பெண்கள் உடல் நல பரிசோதனைகளை
தள்ளுபடி விலையில் செய்கின்றன...
துணிக்கடை,நகைக்கடை,உயர்தர ஹோட்டல்கள்...அனைவரும் பெண்களுக்கு இன்று மட்டும் தனி சிறப்பு சலுகை தருகிறார்கள்...
ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கூட இன்று சிறப்பு சலுகையாக அரை சதம் வட்டி அதிகம் தருகிறார்கள்...
நல்லது தான்...மகளிருக்கும் சிறு லாபம்...வர்த்தகர்களுக்கும் நல்ல வருமானம்...
ஆனால், இதுவா உண்மையில் மகளிர் தினம்?
என்னைப்பொருதவரையில்...
#என்று ஒரு பெண் குழந்தை பிறப்பு ஆண் குழந்தையின் பிறப்புக்கு சமமாக எல்லா வீடுகளிலும் கொண்டாடப்படுகிறதோ .....
# என்று கணவனை இழந்த காரணத்தால் பெண் சமுதாயத்தால் எந்த விதத்திலும் நோக அடிக்கப்படுவதில்லையோ...
#என்று கற்பழிக்கப்பட்டவள் எந்த விதத்தில் அந்த குற்றத்தை தூண்டும் விதத்தில் நடந்தாள் என்று ஆராய்ச்சி செய்யப்படுவது நிறுத்தபடுவதில்லையோ...
#என்று பெண்கள் பெயர்,உருவம் போன்றவைகளைக்கூட தங்கள் பொருட்களின்
வியாபாரத்தை பெருக்கும் கருவியாக பயன்படுத்தப்படுவது விடப்படுகிறதோ...
#என்று பெண்ணுக்கு குழந்தை பேரு இல்லாவிட்டால் அவளை அமிலப்பார்வை பார்ப்பது நிருத்தப்படுகிறதோ...
#என்று பெண்,விவாகரத்து கேட்பது...தனியாகவே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ முடிவு செய்வது... விமர்சிக்கப்படுவது நிருத்தப்படுகிறதோ...
#எந்த ஒரு பெண்ணாவது வன்முறைக்கு ஆளானாலும்-அது வீட்டுக்குள் நடந்தாலும் கூட-அது தவறு என்று தெரிந்தும் சமுதாயம் தட்டிகேட்க யோசிப்பதும்,"புருஷன் பொண்டாட்டி சண்டை தானே" என்று ஒதுங்கி இருப்பதும் மாறுகிறதோ...
#என்று பெண்ணியம் பேசுபவர் அடங்காபிடாரி என்ற கண்ணோட்டத்தில் பெண்ணை ஊடகங்கள் சித்தரிப்பது மாறுகிறதோ...
#என்று பெண்ணுக்கு எதிராக காலாகாலமாக சொல்லப்படும் பழமொழிகள் ஒழிகிறதோ...
அன்றே...உண்மையான மகளிர் தினம்!
...
மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteதாங்கள் சொல்லும் எதையுமே மறுக்க முடியாது.
தாங்கள் எதிர்பார்க்கும் அந்த நல்ல இனிய மகளிர் தினம் விரைவில் வர வேண்டும் என நானும் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
அடுத்த 100 ஆண்டுகள் கழித்தாவது நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.நம் சமுதாயத்தில் பல பல மாறுதல்கள் வந்தால் தான் அந்த உண்மையான மகளிர் தினம் வரும்.அது நம் கைகளில் தான் உள்ளது.
ReplyDeleteVery well said Mam.
ReplyDeleteI asked my maid whether she know anything about this day?
She is blinking.
I explained her.
I presented a saree to her.
She was very very happy.
I had seen the womens day in her happy smile.
Mam pl. not to publish this.
I want a working woman happy and seeing the happiness i was happy on that day thats all.
I like your views.
By the by pl. help me in removing ward verification from my comment bar.
My mail Id is vijayalakshmi52@gmail.com
Of course vijiscraft blogspot is mine.
viji
Welcome Viji.
ReplyDeleteWorse still here...y maid had attended a Women's day meeting yesterday!
b'coz she was given some cash...
this is how they collect crowd...
and she doesnt know what the meeting was all abt!
.உண்மையான மகளிர் தினம் விரைவில் மலரட்டும்!..
ReplyDeleteஅதுவே நம் மனமார்ந்த ஆசை,ராஜராஜேஸ்வரி ...
ReplyDelete