badge

Followers

Wednesday, 29 February 2012

பாப்பாவின் பார்வையில்           


   


ரோஜா மலரே ராஜகுமாரி...
 


பால் குடி கண்ணு...கொஞ்சம் கலாட்டா பண்ணு...

 

அம்மாவோடு அட்டகாசமாக அரட்டை ...ஹப்பா!!!  கரண்ட் கட் ஆகலை!!!

 

கொச்சடயான் ஷூட்டிங் எப்போ ஆரம்பிக்குது?
கனவு காணுங்க..நம்ம கலாம் அங்கிளே சொல்லி இருக்காரு!!!அஹா...கேளம்பிடாயா கெளம்பிட்ட...

 

அய்யய்யோ...மறுபடியும் நம்ம கிரிக்கெட் வீரர்கள் சொதப்பிடாங்களே !!!!!
  
டாக்டர் ...தினமும்  மூணு வேளையும் ஐஸ்கிரீம் சாபிடக்குடுக்கனும்னு அம்மா கிட்டே ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க...O .k!!!


                     

 


இப்போவே Pre K .G என்ட்ரன்ஸ்  எக்சாம்முக்கு படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணாதேமா ... 

இப்போ இந்த கிரீடம்...நாளைக்கி மிஸ் யூனிவர்ஸ் கிரீடம்!!! (படங்கள்-நெட்டிலிருந்து)

Monday, 27 February 2012

ஜூரோங் பறவைகள் பூங்கா -சிங்கபூர்

சிங்கபூர் -ஜூரோங் பர்ட் பார்க்கில் காணப்பட்ட சில பறவைகள்... இதோ...                                 
                                    ஒய்யார நடை போடும் அழகிய பறவைகள்...

                             

               உங்க சிறகுகளுக்கு வர்ணம் அடித்தது யார்...சொல்லுங்களேன்...

                                                   பஞ்சவர்ணகிளிகள் அணிவகுப்பு...
                                              நீங்க    ரெண்டு   பெரும் " டூ "வா?
                                       
                            என்ன பரபரப்பு? ரக்கையை இப்படி அடித்து கொள்கிறாயே...                                       


                                          நெருப்பு இருக்கா? என்று எட்டிப்பார்கிறாயா?


                                           
                                       என்ன யோசனை?  பவர் கட் பற்றியா?                               அட...நீ தானா அந்த மஞ்சகாட்டு மைனா?
                                                    கும்பலே கொண்டாட்டம்...

                                     
                                      கொக்கே கொக்கே பூவை போடு...

                                     
                                  நல்ல வேளை...இங்கே தண்ணிக்கஷ்டம் இல்லை...
                                  ஹாய்யா நீஞ்சி ரிலாக்ஸ் பண்ணுவோமா?Sunday, 26 February 2012

இப்படி ஒரு புனைப்பெயர் ...

                                              File:George Eliot at 30 by François D'Albert Durade.jpg
                                                              ஜார்ஜ் எலியட்

படத்தில் உள்ள இந்தப்பெண்மணி தான் புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியை

ஜார்ஜ் எலியட்....


19 ம் நூற்றாண்டை  சேர்ந்த  மிகச்சிறந்த  நாவலாசிரியை...மொழிபெயர்ப்பாளர்...

Mill on the Floss ,Silas Marner , Middlemarch  போன்ற பல பிரபல ,இன்றளவும்


ஆங்கில   இலக்கியத்தில்  பேசப்படும்  நாவல் களை எழுதியவர்...


இதில் என்ன அதிசயம்? என்கிறீர்களா?


மேரி ஆன் இவான்ஸ்   என்கிற இயற்பெயரை மறைத்து ஜார்ஜ் எலியட்


என்ற ஆணின் பெயரை புனைப்பெயர் ஆகக் கொண்டார்...

காரணம்- ஒரு பெண் எழுதினால்...அதுவும் -இலக்கியம் படைய்தால் அதை


மக்கள் ஏற்க மாட்டார்கள்..என்று அவரது பதிப்பாளர்கள் நம்பினார்கள்!


அதனால் ,அவர் பெண் என்பது ஆண் போர்வையில் மறைக்கப்பட்டது...


ஆண்கள் எல்லாம் பெண்ணின் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டு


 எழுதும் இன்று இது ஆச்சிரியப்பட வைக்கும் செய்தி தானே...

Tuesday, 21 February 2012

சொர்க்கம் என்பது நமக்கு...                                                       இறந்த பின் ஒருவர் மேல் லோகம் சென்றார்...

அங்கே அவருடைய பாப புண்ய  கணக்குகள் சரி பார்க்கப்பட்டன...

இவர் செய்த நன்மைகள் கொஞ்சம் அதிகமாகவே  இருந்தன...

இவர் சொர்கத்துக்கு அனுப்பப்பட்டார்...


சொர்கதுக்குப்போகும்  வழியில் இவருக்கு ஒரு அற்ப ஆசை!


"நரகம்  எப்படி இருக்கிறது  என்று ஒரே ஒரு முறை பார்த்து விட்டு சொர்க்கம் போகலாமே"
அழைத்துச்செல்பவர் சம்மதித்து அவரை நரகத்துக்கு  அழைத்துச் சென்றார்...
அங்கே...
அழகான தோட்டங்கள்...பூத்துகுலுங்கும் மலர் வனங்கள்...மாளிகைகள்...


அதன் உள்ளே பெரிய உணவுகூடங்கள்...உணவு மேஜையின் மீது

வித விதமாய் அறுசுவை விருந்துகள் காத்துக்கிடந்தன..."அட ...பரவாயில்லையே...நரகமே இப்படி இருந்தால்..

.சொர்க்கம் எப்படி இருக்கும்?"அடுத்தது சொர்க்கம் சென்றார்...

துணுக்குற்றார்...
அங்கே...

அழகான தோட்டங்கள்...பூத்துகுலுங்கும் மலர் வனங்கள்...மாளிகைகள்...

அதன் உள்ளே பெரிய உணவுகூடங்கள்...உணவு மேஜையின் மீது

வித விதமாய் அறுசுவை விருந்துகள் காத்துக்கிடந்தன...

அவருக்கு கோபமும் ஆச்சர்யமும் ஒருசேர  வந்தது...

"ஒரு வித்யாசமும் இல்லை.ஒரே மாதிரி இருக்கிறது...

பூமியில் இத்தனை ஒழுக்கசீலனாக வாழ்ந்து சொர்க்கம் சென்று என்ன பயன்?

பாபிகள் செல்லும் நரகத்துக்கும் அதற்க்கும் ஒரு வித்யாசமும் இல்லையே..."

புலம்பினார்...

"ஒருமணி நேரம் பொறுத்து வந்து பாருங்கள்...வித்யாசம் தெரியும் ..."

என்றார் அழைத்து வந்தவர்...

ஒரு மணி நேரம் சென்றது...

உணவு நேரம் வந்தது...

முதலில் ,நரக்கத்து dining ஹால் பக்கம் சென்று எட்டிபார்த்தார்கள்...


நரகவாசிகள் அனைவரும் அறுசுவை உணவுகள் நிரம்பிய உணவு

 மேஜைமுன் அமர்ந்திருந்தனர்...


அனைவர் கரங்களிலும் 5  அடி நீளமுள்ள கரண்டிகள் கட்டப்பட்டு இருந்தன...

அதனால் எப்படி எடுத்தாலும் உணவை தங்கள் வாயில் போட

முடியவில்லை...

எடுத்த உணவு கொட்டியது...எதிராளி இதைப் பார்த்து சிரிக்க கோபம் வந்து


கரண்டியாலேயே  அவன் தலையில் ஒன்று போட்டன் ஒருவன்...


மற்றொருவன் எரிச்சலில் ஒரு குண்டான் பாயசத்தை தன கையில்


உள்ள கரண்டியால் தட்டி விட்டான்


சண்டையும் கூச்சலும் குழப்பமும் வலுத்தது...


உணவு நேரம் முடிந்தது...


அனைவரும் சாப்பிடாமலே வெளியே சென்றனர்..
.


"இது தான் நரகம்"


அடுத்தது....சொர்கத்து உணவுக்கூடம்...

அங்கு அனைவரும் உணவு உண்ணததயார்.இங்கும்...

அனைவர்  கைகளிலும் 5  அடி கரண்டி கட்டபட்டிருன்தது...


ஆனால்...

ஒரு சத்தமில்லை...குழப்பமில்லை....


அழகாக ஒவ்வொருவரும்  தங்கள் கைக் கரண்டியால் உணவை எடுத்தனர்...


அதை சிந்தாமல் சிதறாமல் எதிர் வரிசையில் அமர்ந்திருப்பவர்  வாயில் ஊட்டி


விட்டனர்..

அனைவைர்  வயிறும்  நிரம்பின...அனைவரும் திருப்தியுடன்

 உண்டு மகிழ்ந்தனர்...

"இவர் புரிந்து கொண்டார்...சொர்கமும் நரகமும் நம் கையிலே

 தான் இருக்கிறது..." என்பதை

அடுத்தவருடன் பகிர்தல்...உதவுதல்...யோசித்து செயல் படுதல்

 எந்த இடத்தையும் சொர்க்கம் ஆகிவிடும் என்று...


(ஒரு மேடையில் கேட்ட கதை)


Sunday, 12 February 2012

டி.வி. சீரியலில் பெண்கள்
பார்த்தாலே போதும்...மனுஷன்/மனுஷி தலையை பிய்த்துக்கொண்டு பாயை பிராண்ட ஆரம்பித்து விடுவோம்!

அதிலும்,இந்த சீரியல் பெண்கள் இருக்கிறார்களே!!! அவர்களைப்போல இந்த கிரகத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் தெரியவில்லை!!!

நான் பார்த்தவரையில், டி வீ  பெண்களின் பிம்பம் நிஜப்பெண்ணின் பிரதிபலிப்பில்  இருந்துரொம்பவே  மாறுபட்டது.

# டி வீ  ஹீரோயின்  எப்போதுமே...நல்லவள்...வல்லவள்...நாலும் தெரிந்தவள்.

#எப்போதுமே  கூட்டுக்குடும்பதையே விரும்புவாள்...என்ன இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக சகித்துக்கொண்டு  குடும்பத்தை அனுசரித்துக்கொண்டு வாழ்வாள்.

#கதாநாயகி -நல்லவள்-எப்போதுமே  சிம்பிள் ஆக உடை உடுத்துவாள்.அளவாக நகை அணிவாள்...

வில்லி உடை அலங்காரம்,மேக் அப் ,நகைகள்..எல்லாமே ஓவராகத்தான் இருக்கும்.


#மாமியார்/ நாத்தநார்  வில்லிகளாக இருந்தால் (வேற யாரு இன்னும் suitable !!!) விதவிதமாக ரூம் போட்டு  யோசிக்காமலே கொடுமைகள் செய்வார்கள்! அவர்கள் கொடுமைகள் செய்யச் செய்ய டி.ஆர்.பீ. rating எகிறும்!!!!!
நல்ல ஹீரோயினோ அத்தனையும் தாங்கிக்கொள்வாள்.(அப்போதும் டி ஆர் பீ எகிறும்!!!!!)

#டிவீ  பெண்கள் எல்லோருமே உச்சஸ்தாயியில் தான் பேசுவார்கள்...அழுவார்கள்...

#அவர்கள் வாழ்கை ஒரு roller coaster  சவாரி போல...
திடீர் என்று கோடீஸ்வரர்கள் ஆவார்கள்..
திடீர் என்று நடுதெருவுக்கு வருவார்கள்...அடுத்த எபிசொடிலேயே பெரிய பிசினஸ் ஆரம்பிப்பார்கள்...
பென்ஸ் காரில் வலம் வருவார்கள்...(ஏனோ மாத சம்பள வேலையில் அதிகம் ஹீரோயின்கள் இருக்கமாட்டார்கள்...)

#டி.வீ.பெண்கள் வீட்டில் அரிசி,பருப்பு,ஷெல்பில்  'விஷம்' என்ற பெயர் எழுதிய விஷ பாட்டில் வைத்திருப்பார்கள்!!!!

# போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஜெயில் எல்லாம்  டி.வீ.ஹீரோயின்   சென்று வரும் பிக்னிக் ஸ்பாட்கள் !!!!!

#கடைசி எபிசோட்களில் ஹீரோயின்  பொங்கி எழுவாள்...வில்லி  திருந்துவாள்...ஹீரோயின்  மன்னித்துவிடுவாள்..அவள் ரொம்ப...நல்லவள் ஆச்சே!!!!!!

# டி வீ ஹீரோயின்கள்  எப்பேர்பட்ட குடும்ப பாரத்தையும் அலேக்காக சுமப்பாள்!

#ராட்ஷசி மாமியார்...உதவாக்கரை உறவுகள்...பூச்சி போன்ற புருஷன்...பிசினஸ்  போட்டிகள்...வழக்குகள்...
குழந்தை...சமையல்..என்று எல்லாமே ' ஜஸ்ட் லைக் தட்'  handle  செய்வாள்.

#ஹீரோயனே குடும்பத்தின் முக்கிய சம்பாத்தியம் செய்வாள்.

#ஆனால் ஒன்று...நம்  பெண்கள் நாள் முழுவதும் சீரியல் பார்பார்கள்...
டி வீ பெண்கள்...சீரியல் பார்ப்பதாக எந்த சீரியலிலும் நாம் பார்ப்பது இல்லை !!!!!!

முதல் பதிவு...வணக்கம்...

இதோ வந்துவிட்டேன் நம் தாய் மொழியில் தங்கள் அனைவருடனும்
என் மனதில் பட்டவைகளை...என் ஆர்வங்களை 
பகிர்ந்துகொள்ள.....

இன்று ஆரம்பிதே விட்டேன்...பல மாதங்கலாகத்தொடங்க  நினைத்த 
வலைப்பூவை...உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள் ... என்று பெயரிடப்பட்ட 
இந்த புதிய ப்ளாக்கை...

இந்த வலைப்பூவின் மூலம் உங்களைப்போன்ற பலருடன் என் எண்ணங்களையும்
திறமைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...