badge

Followers

Sunday, 26 February 2012

இப்படி ஒரு புனைப்பெயர் ...

                                              File:George Eliot at 30 by François D'Albert Durade.jpg
                                                              ஜார்ஜ் எலியட்

படத்தில் உள்ள இந்தப்பெண்மணி தான் புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியை

ஜார்ஜ் எலியட்....


19 ம் நூற்றாண்டை  சேர்ந்த  மிகச்சிறந்த  நாவலாசிரியை...மொழிபெயர்ப்பாளர்...

Mill on the Floss ,Silas Marner , Middlemarch  போன்ற பல பிரபல ,இன்றளவும்


ஆங்கில   இலக்கியத்தில்  பேசப்படும்  நாவல் களை எழுதியவர்...


இதில் என்ன அதிசயம்? என்கிறீர்களா?


மேரி ஆன் இவான்ஸ்   என்கிற இயற்பெயரை மறைத்து ஜார்ஜ் எலியட்


என்ற ஆணின் பெயரை புனைப்பெயர் ஆகக் கொண்டார்...

காரணம்- ஒரு பெண் எழுதினால்...அதுவும் -இலக்கியம் படைய்தால் அதை


மக்கள் ஏற்க மாட்டார்கள்..என்று அவரது பதிப்பாளர்கள் நம்பினார்கள்!


அதனால் ,அவர் பெண் என்பது ஆண் போர்வையில் மறைக்கப்பட்டது...


ஆண்கள் எல்லாம் பெண்ணின் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டு


 எழுதும் இன்று இது ஆச்சிரியப்பட வைக்கும் செய்தி தானே...

4 comments:

  1. மிகவும் ஆச்சர்யமான செய்தியாகவே உள்ளது. பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவது தான் நான் அறிந்துள்ளேன்.

    நேர்மாறாக உள்ளதே !

    ReplyDelete
  2. பின்னூடத்துக்கு நன்றி.
    அது 19 ம் நூற்றாண்டில் உள்ள பெண்களின் நிலை...

    ReplyDelete
  3. ஆண்கள் எல்லாம் பெண்ணின் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டு


    எழுதும் இன்று இது ஆச்சிரியப்பட வைக்கும் செய்தி தானே...

    வியப்பான செய்திப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான உண்மை தான்.
    வருகைக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி

    ReplyDelete