badge

Followers

Tuesday, 25 February 2014

மூங்கில் தட்டில் பிள்ளையார்
மூங்கில் தட்டில் பிள்ளையார் யார்  சொன்னது...

அழகிய அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு 

நிறைய நேரம்,பணம் எக்கச்சக்கமான பொறுமை 

எல்லாம் தேவை என்று?

இதோ....10 ருபாய் செலவில் ஒரு அழகான 

சுவர் அலங்காரம்....மிக குறைந்த நேரத்தில் செய்யலாம்...

ஒரு சாதாரண மூங்கில் தட்டை சுத்தமாகி ,

பிடித்த வர்ணங்களை பூசி பளிச் என்று ஆக்கி 

நன்றாக காய வைத்து  அதன் நடுவே ஒரு சிறிய 

பிள்ளையார்  பொம்மையை ஒட்டவும்...

பிள்ளையாருக்கு மெட்டாலிக் bronze கலர் 

(பித்தளை நிறம்))பூசி காய வைத்து ,

தட்டின் பின் பக்கம் ஒரு நூல் கோர்த்து 

அலங்காரமாக சுவற்றில் மாட்டலாம்...

so simple !!!

Monday, 24 February 2014

காரட் கொத்துமல்லி சப்பாத்தி


கொஞ்சம் காரட் ,கொஞ்சம் பச்சை கொத்துமல்லி ,சுறுக் என்ற காரத்துக்கு பச்சைமிளகாய்...
சேர்த்து இந்த சப்பாத்தி செய்து பார்ப்போமா ....
தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

காரட்-2

கொத்துமல்லி தழை-1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 3-4

உப்பு - ருசிக்கு தேவையான அளவு

கோதுமை மாவு -1/4 கப்
(மேல் மாவு)

நெய்/எண்ணை  -தேவையான

தண்ணீர் - சிறிது அளவு
செய்முறை


  1. தோல் சீவி நறுக்கிய காரட்,சுட்தபடுத்திய மல்லித்தழை ,பச்சை மிளகாய் ,உப்பு,சேர்த்து மிக்ஸ்ஸியில்  கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம் )
  2. அரைத்த காய் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.சிறிது என்னை/நெய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாக இருக்கும்.
  3. தேவை பட்டால்  சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.காய்களிலேயே தண்ணீர் பசை இருப்பதால் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்...


  1. மேல் மாவு தூவி மாவு உருண்டைகளை சப்பாத்திகளாக இடவும்.சூடான தோசைக்கலில் இரண்டு பக்கங்களும் வேகும் வரை நெய் விட்டு சுட்டு

எடுக்கவும்.,


காரட் டின்  நிறம் இந்த சப்பாத்திக்கு ஒரு நல்ல மஞ்சள் நிறத்தை தரும்.

இந்த சப்பாத்தியில் காய்கள்  இருப்பதால் இதற்க்கு சைடு டிஷ் ஊறுகாய் +தயிர் பச்சிடி போதும்.Saturday, 22 February 2014

இந்த ஸ்ட்ரா பெர்ரி மில்க் ஷேக் குடிப்பதற்கல்ல !!!!!


இந்த ஸ்ட்ரா பெர்ரி  மில்க் ஷேக் குடிப்பதற்கல்ல !!!

ஏனென்றால்  இது மெழுகால் செய்யப்பட்டது!இதை செய்ய தேவையான பொருட்கள்...

பாரபின் மெழுகு
ஒரு கண்ணாடி கோப்பை./(tumbler )
சிவப்பு நிற wax  crayon
straw
பாத்திரம்
மத்து

செய்முறை


பாத்திரத்தில் மெழுகை போட்டு  சூடாக்கி தண்ணீர் போல உருக விடவும்...

இதில் சிறிது  வாக்ஸ் crayon சேர்த்து  இளம் பிங்க் நிறம் வரும் வரை கலக்கவும்.

(ஜாக்கிருதை ! மெழுகு ரொம்ப சூடு ஆகி விட்டால் தீ பிடித்து விடும்...)
அதனால் இளம் சூட்டில் வைத்து உருக்கவும்.

இதை அடுப்பில் இறக்கி வைத்து தயிர் கடையும் மத்தால் கடையவும்.

நன்றாக நுரைத்து வரும்.

இதை சிறிது சிறிதாக கண்ணாடி கோப்பை யில் நிரப்பவும்...

நுரையை மேலாக ஸ்பூனில் எடுத்து  கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்...

சிறிது கெட்டியான பிறகு straw வை சாய்வாக சொறுகி வைக்கவும்...சீக்கிரமே  அலங்காரமாக ஷோ கேசில்  வைத்து விடுங்கள் ....

இல்லாவிட்டால்...யாராவது

"அஹா ! ஸ்ட்ரா பெர்ரி  மிலக் ஷேக்கா ? "என்று
அதை குடிக்கப் போய் விடுவார்கள்!


(மெழுகு உருக்கிய பாத்திரம் ,மத்து  ஆகியவற்றை தண்ணீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சுத்தம் ஆகிவிடும்...)

Tuesday, 18 February 2014

மயில் போல பொண்ணு ஒண்ணுகருப்பு நிற வெல்வெட் துணியில் இதற்காகவே வடிவமைக்கப்பட்ட நிப்கள் 

(nib) கொண்டு ,ஆயில் பெயிண்ட்ஆல் வரையப்பட்ட இந்த மயிலை

 பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வரும் பாட்டு இது தான்  .....


மயில்  போல  பொண்ணு  ஒன்னு

கிளி  போல பேச்சு  ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில்  போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு  மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 


வண்டியில  வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா  என் மனசு சுத்துதடி

மனதார  மல்லி  மரிகொழுந்து  செம்பகமே

முன  முறியாப்  பூவே  என முரிச்சதேனடியோ 

தங்க முகம்  பார்க்க  தெனம்  சூரியனும்  வரலாம்

சங்கு  கழுத்துக்கே  பிறை  சந்திரனைத்  தரலாம்

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 


வெள்ளி நிலா மேகத்துல  வாரதுபோல்

மல்லிகப்  பூ பந்தளோட  வந்தது யாரு

சிறு ஓலையில  உன் நெனப்பா  எழுதி வெச்சேன்

ஒரு எழுத்தரியாத   காத்தும்  வந்து இழுப்பதும்  என்ன

குத்து  விளக்கொளியே  சிறு குட்டி  நிலா  ஒளியே

முத்துச்  சுடர்  ஒளியே ஒரு  முத்தம்  நீ தருவாயா

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல


மயில் போல பொண்ணு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம்  எனக்கு  இன்னும் தெளியல 

மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 

தீராத விளையாட்டுப் பிள்ளை.....
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத) 


1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத) 


3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) 


4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) 


5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத) 


6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)


7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத) 


8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)


9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)