badge

Followers

Sunday, 21 June 2015

நான் ஹிநதுவாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்
நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத் அத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு இந்துகளுக்கு.
8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும்
கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும் கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன், நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள் , பெண் ஆசையை ஒழிக்க இராமாயணம், மண் ஆசையை ஒழிக்க
மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த
சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா, ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல் நன்மைக்கு யோகா சாஸ்த்திரம், கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம், விண்ணியலுக்கு கோள்கணிதம்.
11. வாளால் பரப்பப் படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்றுதொடங்கிய ஆதி மனித உணவு முறையிலிருந்து "கொல்லாமை ""புலால் மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்

Friday, 19 June 2015

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு."ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன்
நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள்
நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்
அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று
அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில்
அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம்
உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து
அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை
கண்டு
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று
கேட்டார்.
அதற்கு இவர் " எனது தொழில்
நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து
போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால்
அவர்.
" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.
" அப்படியா, நான் யார் தெரியுமா ?
" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல
செல்வேந்தரின் பெயரை
சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி
விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம்
எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக்
புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம்
நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ
கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக
கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும்
சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த
பணத்தை எனக்கு திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம்
இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் "
என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார்
அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக
அலுவலகத்திற்கு சென்றார். தன்
அறைக்குள் சென்று அந்த செக்கை
தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார்.
பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து
ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில்
அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச
ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது
நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய்
உள்ளது ஆனால் அந்த பணத்தை
தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி
ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ?
என்று ஆராய்ந்து அதை களைந்து நமது
நிறுவனத்தை வெற்றிகரமாக
செயல்படுத்த நீங்கள் அனைவரும்
ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக்
கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன.
தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிக சரியாக அனைத்து ஊழியர்களையும்
ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச
செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய
தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள்
அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி
ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய
நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த
செல்வேந்த கொடுத்த 500
கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு
விரைந்தார்.
சென்ற வருடம் அமர்ந்த அதே
சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
காலை நெரம் ஆதலால் பனி
மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்
கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும்
அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக்
கொண்டு ஒரு பெண்மணியும்
வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.
சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த
பெண்மணி மட்டும் வருகிறார் அந்த
செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த
பெண்மணியிடம் " எங்கே அம்மா
உங்கள் கூட வந்தவர் ? " என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "
உங்களுக்கு அவர் ஏதாவது
தொந்தரவு கொடுத்து
விட்டாரா? " என்றார்
இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"
என்றார்.
அந்த பெண்மணி " இல்லை அய்யா
அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி
இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று
சொல்லி இங்கு இருப்பவர்களிடம்
தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு
கொடுத்து விடுவார் " என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு
பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று
நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை
காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.
அன்பு நண்பர்களை ..
- இதிலிருந்து நாம் தெரிந்து
கொள்ள வேண்டியது
என்வென்றால் எந்த ஒரு விசயமும்
நம்மால் முடியும் என்று முதலில் நம்
நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது
வாழ்வில் முன்னேற முடியும்.
" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு."
Wednesday, 17 June 2015

பசியை தூண்டி ருசியை கொடுக்கும் புதினா
புதினா கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது . வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் . மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம் .வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும் இது சிறந்த மருந்தாகும் .
புதினா இலையை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
புதினாவுடன் இஞ்சியையும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம் ,பித்தமும் அகலும்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.
புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர் உபத்திரம் நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது

Tuesday, 16 June 2015

ஆரோக்கியம் தரும் தயிர்...
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்துக் குளித்தால்  தூக்கம் நன்றாக வரும்.

 பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. . இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 2 -3 நாட்கள் வரை புளிக்காது.
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Sunday, 14 June 2015

எனக்குத் தெரிந்த டிமாண்டி காலனி ....
பல ஆண்டுகளாக சென்னையின் மிக முக்கியமான இடத்தில இருக்கும் ஒரு காலனி (குடியிருப்புப்பகுதி) சமீபத்தில் V .I .P. அந்தஸ்து பெற்று விட்டது...

அது தான் டிமண்டி காலனி....

பார்க் ஷெரட்டன் ஹோடேலில் இருந்து கூப்பிடு தூரம்...

TTK ரோடு அருகே ,,,நகரின் V V I P  ஏரியா வான போட் கிளப் ரோடுக்கு பக்கம்....
அபிராமபுரம்,ஆள்வார்பேட்டுக்கு பக்கம் இருக்கும் இந்த ஏரியா இப்போ டூரிஸ்ட் அட்ட்ராக்ஷன் ....

எல்லாம்...டிமாண்டி காலனி திரைப்படம் வெளிவந்த பிறகு ....

எனக்கு நினைத்தால் சிரிப்புதான் வருகிறது...

ஏன் என்றால்,கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அந்த ஏரியா வழியே தான் நான் காலை நடை ப்பயிற்சி செய்வேன்...

சில நாட்கள் மாலையில்,சுமார் 6 மணி வாக்கில் ஒரு வாக் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தேன்...

அபிராமபுரத்தில் குடியிருந்த என்னைப்போன்ற பலரும் அந்த அமைதியான தெருவை வாகிங் பாதையாக வைத்து இருக்கக் காரணம்....அதன் அமைதியான ,மரங்கள் நிறைந்த சாலைகள்...தனிதனி வீடுகள்...ட்ராபிக் இல்லாத சூழ்நிலை....

கிட்டத்தட்ட 2005ஆம் ஆண்டு வரை வாரம் 3-4 முறையாவது அந்ததெருக்களில் நான் நிச்சிந்தையாக ,அமைதியை ரசித்தபடி,காலையில் நடக்கும் போது என் கண்ணில் படுவது,அங்கங்கே வாசல் தெளிக்கும் வேலைக்காரப் பெண்கள் ...பேப்பரை தூக்கி எறிந்துவிட்டுப்பறக்கும் சிறுவர்கள்...கார்...பைக் துடைக்கும் ஆட்கள்...தான்.....சுகர், bp ,அதிக எடை குறைக்க முயல்பவர்கள் தான்   ......

மருந்துக்குக்கூட ஒரு பேய் கண்களில் தட்டுப்பட்டது கிடையாது...

யாருமே அங்கு பேய்கள் குடியிருப்பதாக் சொன்னதும் கிடையாது...

அந்த இடம் யாரோ வெள்ளைக்காரர் சர்ச்சுக்கு தானமாகக் கொடுத்தது....அதில் சர்ச் 60 வருடங்களுக்கு முன்பே வீடுகள் கட்டி வாடகைக்கு ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு விட்டது...அந்த சொத்து இன்று பலபல கோடிகள் பெரும்  ...வழக்கில் இருப்பதால் அதை யார்ய்க்கு விரற்க முடியாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்...

2004இல்  அபிரமபுரதிலிருந்து  நான் இடம் மாறிய பிறகு  டிமண்டி காலனி யை மறந்து போனேன்....

அவ்வப்போது அந்த வழியில் போகும் போது வீடுகள் காலியாக கவனிப்பாறற்று  பரிதாபமாகக்காட்சி அளிக்கும்...இன்னும் சில வீடுகள் தரை மட்டமாக ஆக்கப்பட்டு பார்கிங் லாட் களாக மாறி  உள்ளன (சிவில் கேசில்  மாட்டிக்கொள்ளும்  சொத்துக்களின் தலை எழுத்து  நம் நாட்டில் அது தானே!)

ஆனால்,திடீர் என்று 3-4 ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகை ஒரு "திகில் சிறப்பிதழ்" வெளியிட்டது...அதில் சென்னையில் பேய்,பிசாசு வசிக்கும் இடங்களில் இந்தக்காலனியும் முக்கியமான இடமாக சொல்லப்பட்டது....

படித்துவிட்டு சிரித்தேன்....

"ஒரு பேய் கூட என் கண்ணில் படலையே.... "பொய்யாக  அங்கலாய்த்தேன் ....

":உன் கிட்டே மாட்டிண்டு அவஸ்த்தை பட பயம் தான்" உடனே பதில் வந்தது....

(கேட்டு வாங்கிக்கிறது என்பது இதுதானோ?)

இப்போது  நடக்கும் "பேய்"சீசனில் இந்தக்காலனியே ஹீரோவாக்கி வந்த படம் சக்கை போடு போட...

வந்தது இந்தக்காலனிக்கு vip அந்தஸ்து...

ஜனங்கள் கூட்டம்  கூட்டமாக இந்தக் காலனியை இரவில் காண வர ஆரம்பித்தனர்....இரவிலும் பகலிலும் இந்த ஏரியாவை விடியோ ,போட்டோ எடுத்து சுடசுட you tube இலும் ,facebook இலும் போட்டு லைக் வாங்க ஆரம்பித்தனர்...

சிலர் கஷ்டப்பட்டு PHOTOSHOP  செய்து உருவங்களை  பாழ் வீடுகளின் முன் ஒட்டி   பேய்களில் போடோக்களை வெளியிட்டனர்...

இன்று அதனை வீடுகளும் காலியாக இருக்கும் இந்தக்காலனியில் பேய் இருக்கோ இல்லையோ....இக்காலி  வீடுகள் சமூக விரோதிகளுக்கு நல்ல தங்குமிடமாகி விட்டது என்பதே உண்மை...

இதற்க்கு சாட்சி-அந்த வீடுகளில் கிடக்கும் காலி  டாஸ்மாக் பாட்டில்களும்,வாட்டர் பாகேட்களும்....

இன்று ,காலனிக்குள் நுழைய முடியாமல் தடுப்புகள் ....

இதே ரேட் இல்  போனால் ,சீக்கிரமே,டிமண்டி காலனி -மெரினா பீச் ,வண்டலூர் ஜூ  ,போல சென்னையின் ஒரு டூரிஸ்ட் அட்ட்ராக் ஷானாக மாறிவிடும...

"பேய்களை நம்பாதே....
பிஞ்சிலே வெம்பாதே..."

என்று போதித்த திரை உலகம் இன்று போகும் பாதையை நினைக்க கவலை வருகிறது...

தமிழன் பகுத்து அறியும் குணத்தை இவை மெல்ல மெல்ல மழுங்கடிதுவிடுமோ?

Friday, 12 June 2015

முருங்கையின் பயன்கள்முருங்கைக் கீரையின் பயன்கள்!
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%