badge

Followers

Friday 7 September 2018

எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???



எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன😚 🌸*        👇👇

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸

Monday 3 September 2018

வங்கி கணக்குகளும் நாமினேஷனும்




வங்கி கணக்குகளும் நாமினேஷனும்

நேற்று நாமினேஷன் பற்றி ஒரு பதிவைப் பார்க்க நேரிட்டது. அதில் வங்கி மட்டுமல்லாது பி.எப், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றிலும் நாமினேஷன் செய்வது எப்படி என்று விளக்கியிருந்தார்கள். எனஂனடா நம்ப சப்ஜெக்ட்டில் யாரோ கோல் அடிக்கிறார்களே என்று யோசித்து கொண்டிருந்தேன். ஏதோ திரும்பி வருகிற வழியில் என்னால் முடிந்த கமென்ட் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நிறைய பேருக்கு நாமினேஷன் பற்றிய தவறான புரிதல் உள்ளது. முப்பந்தைந்து வருடங்களாக வங்கியில் நாமினேஷன் போடாதவர்களுடைய கஷ்டங்களை கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அதைப் பற்றி தெளிவாக்கும் முயற்சியே இந்தப் பதிவு.
இது சட்ட விளக்கமல்ல. நடைமுறையில் இதனை ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும் அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதன் விளக்கமே.  நாமினேஷன் வங்கி மட்டுமல்லாது பல விஷயங்களுக்கும் உள்ளது. என்னைப் பொறுத்த மட்டில் வங்கி சேவையைப் பற்றி மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

நாமினேஷன் என்றால் என்ன.

நாமினேஷன் பற்றி பேச வேண்டுமென்றால் இறப்பு பற்றி பேசாமல் தொடங்க முடியாது. (இந்தக் கொடுமையை வங்கி பணியாளர்களும், காப்பீடு பணியாளர்களும் நன்கு அறிவார்கள். தன்னுடைய பிற்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வந்த வாடிக்கையாளரிடம் ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்று சொல்லும் போது அவர் முகம் போகும் போக்கை பார்க்க சகிக்காது. )

நாம் செய்துள்ள முதலீட்டினை நமக்கு பிற்காலம் வங்கி யாரிடம் கொடுத்தால் வங்கிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை வங்கிக்கு தெரிவிக்கும் ஒரு பதிவுதான் நாமினேஷன்.

அதாவது

1.  வாடிக்கையாளரின் இறப்புக்குப் பிறகே நாமினேஷன் என்பது நடைமுறைக்கு வருகிறது. அதுவரை நாமினேஷன் என்பது வெறும் ஒரு பதிவு அவ்வளவுதான்.  வாடிக்கையாளர் இறப்பதற்கு முன்னால் நாமினேஷன் செய்யப்பட்டவரால் தலை கீழாக நின்றாலும் பணத்தை எடுக்க முடியாது.

௨. இது வாடிக்கையாளருக்கு சௌகர்யம் என்பதை விட வங்கிக்கு சௌகர்யம் என்றே ஏற்படுத்தப்பட்டது. ஒருவரது பணத்தை அவர் இல்லாத நிலையில் மற்றொருவரிடம் கொடுப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் தரும்  ஆவணமே நாமினேஷன். அவ்வாறு நாமினேட் செய்யப்பட்டவரிடம் பணத்தை கொடுக்கும் பட்சத்தில் வங்கி தனது கடமையை சரியாக செய்ததாக கருதப்படும் (bank is absolved of its liabilities by disposing the assets to the nominee)

3.  நாமினி என்றால் வாரிசு என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரின் பணத்தை அவரது பிற்காலம் அவரது சட்டபூர்வ வாரிசுகாரர்களுக்கு பங்கிட்டு கொடுப்பது மட்டுமே அவரது வேலை. வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே நாமினேஷன்.

நாமினேஷன் எப்படி செய்ய வேண்டும்.

1. புதிதாக ஒரு முதலீடு அல்லது வங்கிக் கணக்கு செய்யும் பொழுது அந்த கணக்கு தொடங்கும் படிவத்திலேயே கண்டிப்பாக நாமினேஷன் படிவம் இருக்கும் (சட்டப்படி நாமினேஷன் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  யாருக்காவது வேண்டாமென்றால் அவர்கள் எங்களுக்கு நாமினேஷன் வேண்டாம் என்று டிக்ளேர் செய்ய வேண்டும்). அந்த படிவத்தில் நாமினியின் பெயர், வயது மற்றும் உறவு முறை குறிப்பிட வேண்டும் (நண்பர் என்றும் குறிப்பிடலாம்). அந்த நபர் 18 வயதுக்குட்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில் அவர் பதினெட்டு வயது எட்டும் வரை அந்தப் பொறுப்பை யார் வகிப்பார்கள் என்றும் குறிப்பிட வேண்டும்.

௨. பழைய கணக்குகளில் நாமினேஷன் இல்லையென்றால் தனியாக பாரம் இருக்கிறது. அவற்றை நிரப்பி வங்கியில் கொடுக்கலாம்.

3. உங்களது நாமினேஷன் கணக்கில் பதிந்த பிறகு வங்கி உங்களுக்கு ஒரு அத்தாட்சி தருவார்கள். (பல சமயங்களில் உங்களது கணக்கு புத்தகத்திலோ, டெப்பாசிட் ரசீதிலோ இந்த அத்தாட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் )

4. நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே நாமினியின் பெயர் தெரியும் விதமாக பதிவு செய்யப்படும். இல்லையென்றால் பதிவு எண் மட்டுமே வழங்கப்படும் (இந்த முறை எதற்காக என்பதை பின்னால் கூறுகிறேன்)

5.  பதிவு செய்யும் நேரத்தில் நாமினி உங்களுடன் வரவேண்டிய அவசியமில்லை, அவரது கையெழுத்து தேவையில்லை. அவரது போட்டோ, அடையாள அட்டை எதுவுமே தேவையில்லை.

6. நாமினேஷன் என்பது உங்களது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்

நாமினேஷன் செய்தால் வரும் நன்மை

நாமினேஷனால் வரும் நன்மை என்பதை சொல்ல வேண்டுமென்றால் நாமினேஷன் செய்யாமலிருந்தால் வரும் தீமையைச் சொல்ல வேண்டும். உங்களது கணக்கில் நாமினேட் செய்யப்படாமலிருந்தால் அதில் இருக்கும் தொகையைப் பொருத்து உங்களுடைய வாரிசுதாரர்கள் கீழ்க்கண்ட சர்ட்டிபிகேட்டுகளுக்காக பல இடங்களில் ஏறி இறங்க நேரிடும்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. வாரிசு சான்றிதழ் (குறைந்தது 45 நாட்கள் ஆகும். வில்லேஜ் ஆபிசிலிருந்து, தாசில்தார் அலுவலகம் வரை கண்டிப்பாக ஏறி இறங்க வேண்டும்)
    3. உங்கள் சார்பாக குடும்ப உறுப்பினரல்லாத ஒருவர் வாடிக்கையாளர் இறந்த விஷயத்தையும் யாரெல்லாம் வாரிசு என்பதையும் விளக்கி வங்கிக்கு உங்களது க்ளெய்மை தர வேண்டும். அந்தப்படிவத்தை படித்து பார்த்தாலே கையெழுத்திடுவதற்கு அவர்கள் அச்சப்படுவார்கள்.
    4. வாரிசு சான்றிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் சேர்ந்தோ அல்லது அவர்கள் அனைவரும் சிபாரிசு செய்யும் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாகவோ க்ளெய்ம் செய்யலாம்
    5. குடும்பத்தில் உறுப்பினரல்லாத ஒன்றோ இரண்டோ நபரது உத்தரவாதம். (மிகப் பெரிய சிக்கல். இந்தக் காலத்தில் யார் இதை தருவார்கள்). இவ்வாறு உத்தரவாதம் செய்யும் நபரது சொத்து வங்கி அதிகாரியால் மதிப்பிடப்படும். அவரது மதிப்பு க்ளெய்ம் மதிப்பை விட கண்டிப்பாக அதிகமாக இருத்தல் அவசியம். (சில சமயங்களில் அசையாத சொத்தின் நகல் வாங்கி, சொத்தின் மதிப்பீடு செய்வது வரை நடந்திருக்கிறது)
    6. உங்களது வங்கி மேலாளரின் க்ரேடைப் பொறுத்தும் உங்களது கணக்கிலிருக்கும் தொகையைப் பொறுத்தும் செட்டில்மென்ட் செய்ய ஆகும் காலம் மாறுபடும்.

இவையெல்லாம் எழுதுவதற்கு எளிது. ஆனால் நடைமுறையில் எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

சரி நாமினேஷன் செய்யப்பட்டிருந்தால் என்ன தேவையென்பதை இப்போது பார்ப்போம்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. நாமினியின் அடையாள அட்டை
    3. விண்ணப்பம்.

அனைத்து மேலாளர்களுக்கும் நாமினேஷன் செய்யப்பட்ட கணக்கில் உடனடியாக செட்டில்மென்ட் செய்ய அதிகாரமுள்ளது. அதிக பட்சமாக ஒரு நாள் மட்டுமே.

இப்போது புரிகிறதா ? ஏன் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்.

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்

    1. வங்கியிலுள்ள அனைத்து முதலீடுகளும்
    2. லாக்கர் (ஒரே சமயத்தில் இரண்டு பேரை நாமினேஷன் செய்யலாம்)

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட மாட்டாது

    1. வங்கியில் கடனுக்காக கொடுத்திருக்கும்  நகைகள் (கோல்ட் லோன்)
    2. அனைத்து வகையான கடன்களும்

பொதுவான கேள்விகள் மற்றும் தவறான புரிதல்கள்.

கேள்வி. நாங்கள் எங்களது டெப்பாசிட்டை ஜாயின்டாக வைத்திருக்கிறோம் எங்களுக்கு எதற்கு நாமினேஷன் ?

பதில். பொதுவாகவே கணவன் மனைவி பெயரிலோ குடும்ப உறுப்பினர் பெயரிலோ ஜாயின்டாக வைத்திருப்பீர்கள். இன்றைய அவசர உலகத்தில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பொதுவாகவே கணவன் மனைவி இருவருமே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாயின்ட் அக்கவுண்ட் உங்கள் வாரிசுகளுக்கு சென்றடைவதில் சிக்கல்களை அதிகமாக்குமே தவிர குறைக்காது. ( உதாரணமாக இந்து சட்டப்படி வாரிசு என்றால், இறந்த நபரது அப்பா, அம்மா, கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் இவர்களில் யாராவது ஏற்கனவே இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களது வாரிசுகள் ). ஜாயின்ட் அக்கவுன்டாக இருந்தாலும் நாமினேஷன் செய்வதே சிறந்தது.

கேள்வி. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. யாரை நாமினேட் செய்ய வேண்டும்.

பதில். யாரை வேண்டுமானலும் செய்யலாம். அந்த நபர் உங்களது சொத்தை நிர்வகிக்கும் ட்ரஸ்டியாகிறார்.

கேள்வி. நாங்கள்தான் எங்களது சேமிப்பு கணக்கில் நாமினேஷன் செய்து விட்டோமே

பதில். எல்லா கணக்கிற்கும் தனித்தனியாக நாமினேட் செய்யப்படுவது அவசியம்

கேள்வி. நாங்கள் 30 வருடத்திற்கு முன்பே கணக்கு வைத்திருக்கிறோம். கணக்கு தொடங்கும் போதே நாமினேஷன் செய்து விட்டோம். பிறகு எதற்காக இப்போது செய்ய வேண்டும்.
பதில்.  30 வருட இடைவெளியில் வங்கிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. கணிணி மயமாக்கப்ட்ட உடன் உங்கள் கணக்கு எண் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் நாமினேஷன் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் கணக்கு தொடங்கிய சமயத்தில் நீங்கள் திருமணமாகதவராக இருந்திருக்கலாம். அப்போது உங்களது பெற்றோரையோ சகோதரர்களைோ நீங்கள் நாமினேட் செய்திருக்கலாம். இப்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி அவற்றை சரி செய்து கொள்ளவும்.

கேள்வி. நான் நாமினேட் செய்யும் நபருக்கு என்னுடைய மறைவுக்கு பிறகு வங்கி தானாக பணம் கொடுத்து விடுமா ?

பதில். சினிமாவில் தான் அதெல்லாம் நடக்கும். க்ளெய்ம் என்பது முக்கியம் நாமினி க்ளெய்ம் செய்யாத வரை வங்கிக்கு பணத்தை கொடுக்கும் அதிகாரமில்லை

கேள்வி. எதற்காக நாமினியின் பெயர் தெரியப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

பதில். உங்களுக்கு பிறகு பணத்தை திரும்பப் பெறும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தால் என்னவாகும் ? (இந்த இடத்தில் தமிழ் சினிமாவை கற்பனை செய்து கொள்ளவும். அந்த நிலைமையை போக்கவே இந்த ஏற்பாடு)

கேள்வி. எங்களது தந்தை அவரது வங்கிக் கணக்கையெல்லாம் எனது சகோதரருக்கு நாமினேஷன் மூலம் கொடுத்து விட்டு இறந்து விட்டார். அதில் எனக்கு சட்டப்படி உரிமை உள்ளதா.

பதில். கண்டிப்பாக உரிமையுள்ளது. உங்களுக்கு நியாயமான பங்கு தருவதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லையென்றால்
    1. வங்கி பணத்தை அவரிடம் ஒப்படைக்குமுன் நீதி மன்றத்தில் தடையாணை பெறலாம். அதற்கு பின் நாமினேஷன் செல்லாக் காசாகிவிடும்.
    2. வங்கி அவரிடம் பணத்தை கொடுத்து விட்டது என்றால் நீங்கள் வழக்கு தொடரந்து சட்டப்படி உங்களது பங்கை திரும்பப் பெறலாம். ஆனால் வங்கியை இழுக்க முடியாது.

நாமினேஷன் செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன ?

நாமினேஷன் செய்யாததன் காரணமாக கஷ்டங்களை அனுபவித்தவர்களை நிறைய சந்தித்திருக்கிறேன்.   இவ்வளவு சொன்னாலும் ஏன் நாமினேஷன் செய்ய மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்த சில விளக்கங்கள்.

    1. வாரிசுகளிடம் நம்பிக்கையின்மை
    2. அசட்டு நம்பிக்கை (எனக்கு ஒன்றும் நேராது. எனக்கு முன்னாடி அவ போயிறுவா)
    3. அறியாமை ( ஜாயின்ட் அக்கவுண்ட் வைத்திருக்கேன். ஆட்டோமேட்டிக்கா அவளுக்குதான் போகும் )
    4. மனைவிகளுக்கு தெரியாமல் வைத்திருக்கும் பணம். (அவளுக்கு இதெல்லாம் புரியாது)

இதையெல்லாம் படித்துவிட்டு கண்டிப்பாக உங்களது கணக்கில் நாமினேஷன் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.