badge

பின்பற்றுபவர்கள்

புதன், 12 மார்ச், 2014

என் ஐம்பதாவது பகிர்வு...பரிசு வென்றேன் .....

 
சில பகிர்வுகளில் என் கருத்துக்களை பகிர்வேன்...

சில பகிர்வுகளில் என் கைவண்ணத்தை பகிர்வேன்...

சில பகிர்வுகளில் என் கைமணத்தை பகிர்வேன்...

இதில் ,என் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்...

முதலில்,


இது என் 50ஆவது பகிர்வு...

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் நான் கவனிக்காமல் இருந்த இந்த வலைப்பூவை இரண்டு மாதத்துக்கு முன் தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பித்ததற்கு  ஒரு முக்கிய காரணம்- 

திரு .வை.கோபாலகிருஷ்ணனின்  வலைப்பூவில் அறிவிக்கப்பட்ட சிறுகதை விமரிசனப்போட்டிதான்.

அவர் அறிவித்த  சிறுகதை போட்டியின் முதல் சிறுகதையான 

"ஜாங்கிரி" க்கு விமரிசனம் எழுதிய எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது என்னை மீண்டும் எழுதத்தூண்டியது...    http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-03-03.html


இப்போது ,அவர் எழுதிய "உடம்பெல்லாம் உப்புசீடை ..." கதைக்கு நான் எழுதிய விமரிசனத்துக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்ற தகவல் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

"உடம்பெல்லாம் உப்புச்சீடை..." நெடுங்கதையையும் ,அதற்க்கு நான் எழுதிய விமரிசனத்தையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

உடம்பெல்லாம் உப்புச்சீடை... கதைக்கான லிங்க் ....

அதற்க்கு நான் எழுதிய விமரிசனம் இதோ...
முதல் பரிசினை வென்றுள்ள 
திருமதி உஷா ஸ்ரீகுமார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:
பயணங்கள்...அறிவையும், மனதையும், கண்ணோட்டத்தையும் விசாலப்படுத்தும்...

சாதாரண பயணங்களே இதை செய்யும் போது மிகப்புனிதப் பயணமான காசி யாத்திரை இன்னும் ஒரு படி மேலே போய் மன அழுக்கை எப்படி சலவை செய்து கதை நாயகன் பட்டாபியின் மன அழுக்கை கரைத்து சுத்தப் படுத்தியது என்பதை கையளவு கதாபாத்திரங்களை வைத்து தெளிவான நடையில் கூறி இருக்கிறார் கதாசிரியர்.

தந்தையின் அஸ்தியை கரைக்க குடும்பத்தோடு காசிக்கு ரயிலில் பயணிக்கும் போது சக பயணி -சரும நோயால்  "உடம்பெல்லாம் உப்புசீடை "காய்த்து பார்க்க முகம் சுளிக்க வைக்கும் தோற்றத்துடன்...

இயற்கை தான்... இப்படி ஒரு தோற்றத்தில் உள்ளவருடன் ரயில் சிநேகம் கொள்ள நம்மில் பலரும் தயங்குவர்... அப்படி ஒருவர் தான் நம் கதை நாயகர் பட்டாபியும்...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்ற பழமொழியை பலரும் கேள்வி கேட்காமல் நம்புவதால் புற அழகு இல்லாத பலர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.... அப்படிபட்டநிலையில் தான் குழந்தைகள் சட் என்று ஓட்டிகொள்ளும் அந்த "உப்புசீடை" மாமா இருக்கிறார்...

குழந்தைகளிடம் உள்ள தெய்வத்தன்மை அவர்கள் வளர வளர குறையும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் விகல்பமில்லாமல் உப்புசீடை மனிதருடன் பேசி ஸ்னேகமாகப்பழகுவதை அவர்கள் பெற்றோர் பொறுத்துக்கொள்ள  முடிவதில்லை...

காரணம்.... வயது தரும் விபரம் என்று கூட நியாயப்படுத்தலாம் - நோய் தொற்று பற்றிய பயம் / முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்  வாங்கி உண்பதை காவல் துறையே எச்சரிக்கிறதே... அதனால் அதை எல்லாம் பட்டாபி தம்பதியரின் மிகப்பெரிய தவறுகளாகப் பார்க்க தோன்றாவிட்டாலும்...கோபத்தில் பட்டாபி அந்த சக பயணியை  புண்படுத்துவது "உப்புசீடை" காரர் மீது நமக்கு கரிசனம் வர வைத்தாலும், பட்டாபியின் பக்குவமில்லாத மனநிலையை தான் காட்டுகிறதே ஒழிய, அவரை ஒரு மிக தப்பான ஆளாக காட்ட வில்லை .
.

தந்தையின், மரணம், பயணம், நடக்கும் காரியம் நன்கு நடக்க வேண்டுமே... என்ற பல பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளும் அவர் நடத்தையை  நமக்கு புரிய வைக்கிறது...

கடைசியில்,ஒரு திருப்பம் - உப்புசீடை மாமாவின் உதவியால் தான் இவர் தந்தையின் காரியம் நடைபெறப்போகிறது... என்பது கொஞ்சம் cinematic ஆக இருந்தாலும், 

அழகு புற தோற்றம் சம்பந்தப்பட்டதல்ல.... மனம் / குணம் சம்பந்தப்பட்டது என்பதை வாசகர் மனதில் ஆணி அடித்தால் போல இறங்க உதவுகிறது.

ஆனால் தந்தையின் அஸ்தியை அந்த மனிதர் தொடும் படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பட்டாபி நாயகன் ஸ்தானத்திலிருந்து ரொம்ப கீழே இறங்கி விடுகிறார்.

கதை முடிவு எதிர்பார்தார்ப்போவே  இருக்கிறது...

படங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன .

ஒரு நல்ல கருத்துள்ள கதையை ஆசிரியர் அழகுற எழுதியிருக்கிறார்...

இந்தக்கதைக்கு விமரிசனம் எழுதும் போது ஒரு நிஜத்தை சொல்லவா -

இதே போல ஒரு உப்புசீடை மனிதரை, 10-15  வருஷம் முன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது பார்த்தேன். இன்று வரை அந்த முகம் மறக்கவில்லை.

அப்போது எனக்கு மட்டும் அல்ல என் உடன் வந்தவர்கள், மற்றும்  மேஜை களில் உள்ளவர்கள் அனைவருக்கு  உள்ளேயும் உள்ள பட்டாபி குணம் கொஞ்சம் கொஞ்சம் தலை தூக்கி முகம் சுளிக்கவைத்தது நிஜம்.

அவர் எழுந்து போன பிறகு அங்கே ஒரு 10சதம் கலகலப்பு கூடியது என்பது உண்மை....

அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.

Regards,
Usha

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.இதை என் ஐம்பதாவது பதிவாக வெளி இடுவது மிகுந்த மகிழ்ச்சியை எனக்குத்தருகிறது...

என் வலைப்பூக்களுக்கு

தவறாமல் வந்து உடனடியாக பின்னூட்டம் அளித்து என்னை ஊக்குவித்து வரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்...10 கருத்துகள்:

 1. இரட்டிப்பு சந்தோசம்... வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 2. Respected Madam,

  வணக்கம்.

  இன்று காலை முதல் நான் என் பேரன்களுடன் [3 நாட்களே ஆன புதிய பேரன் + 3 வயது கூட முடியாத பழைய பேரன் இருவருடனும்] பிஸியாக இருந்ததால் பதிவுப்பக்கமே வர முடியாமல் போனது.

  இப்போது அகஸ்மாத்தாக இதைப்பார்த்தேன். பல நேரங்களில் என் டேஷ்-போர்டிலும் ஒன்றுமே தெரிவது இல்லை.

  தங்களின் 50வது பதிவுக்கு முதலில் என் நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தைப்பற்றியும் குறிப்பிட்டு எழுதியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

  முதல் பரிசும் 50வது பதிவும் சேர்ந்துள்ளது இரட்டிப்பு சந்தோஷமாகவே உள்ளன.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கு நன்றி,Sir

   நீக்கு
 3. வாழ்த்துக்கள், உஷா! வலைப்பூவை தூசி தட்டியது எத்தனை நல்லதாக ஆயிற்று, பாருங்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். உங்கள் கைவேலைத் திறன் மிகவும் அரியது. எல்லோருக்கும் இதைபோல செய்ய வராது. கடவுளின் பரிசு. தொடர்ந்து எல்லாவற்றையும் பதிவு செய்யுங்கள்.

  பாராட்டுக்கள் இரண்டு பரிசுகள் பெற்றதற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கு நன்றி

   நீக்கு
 4. 50ஆவது பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல்பரிசு வென்றதற்கு பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 5. பரிசுகளும் பதிவுகளும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கு நன்றி

   நீக்கு