டைம் மெஷினில் ஏறி எழுபதுகளுக்கு ஒரு விசிட் அடித்து விட்டு வருவோமா?
கொஞ்சம் பிளாஷ் பாக் ....
ரீவைண்ட் செய்வோமா????
அன்றைய பேஷன்- பெல் பாட்டம் ! ஊர் புழுதியெல்லாம் கூட்டிய படி நடந்தது மறக்க முடியுமா?
பால்கனி இல் சினிமா பார்க்கரூ . 2.90 டிக்கெட் எடுத்தது மறக்க முடியுமா?
ட்ரன்க் கால் போட்டு காத்திருந்து ஹல்லோ ஹல்லோ என்று போனில் கத்திய நாட்கள் மறக்க முடியுமா?
STD வசதியை எட்டாம் உலக அதிசயம் போல கொண்டாடிய நாட்களை மறக்க முடியுமா ?
10 ரூபாய்க்கு வாராந்திர கறிகாய் வாங்கிய நாட்களை மறக்க முடியுமா?
லீவ் விட்டால் போகும் ஒரே விடுமுறை ஸ்தலமான பாட்டி வீடு ...அதுவே சிம்லா...சிங்கப்பூர் ...மறக்க முடியுமா?
ஆராதனா படம் பாதி டைலாக் புரியாவிட்டாலும் ரசித்து அர்த்தம் புரியாத ஹிந்தி பாடல்கள் பாடிய நாட்கள்...மறக்க முடியுமா?
பேங்க் வேலை...கவர்மெண்ட் உத்யோகம்,இன்சூரன்ஸ் ஜாப் பெரிய லட்சியமாக இருந்த நாட்கள்....மறக்க முடியுமா?
இன்ஜினியரிங் என்றாலே சிவில் மற்றும் மெக்கானிகல் மட்டுமே பொதுமக்கள் அறிந்திருந்த நாட்களை மறக்க முடியுமா?
அடையாரில் ஒரு கிரௌண்ட் 20000/- அநியாயம்...என்ற அங்கலாய்ப்பு மறக்க முடியுமா?
பெசன்ட் நகரில் மனுஷ சஞ்சாரமே இருக்காது...திருவான்மியூர் ஊருக்கு வெளியே அத்துவானம்...என்ற நாட்கள் மறக்க முடியுமா?
வீடுகளில் மாடும் கன்றும் இருந்தனவே....மறக்க முடியுமா?
பிளாட் சிஸ்டம்,அபார்ட்மெண்ட் கெட்ட வார்த்தைகளாக இருந்த நாட்கள் மறக்க முடியுமா?
அண்ணன் படிக்கும் ஸ்கூலில் ஆட்டோமாடிக் ஆக தம்பிக்கு அட்மிஷன் கிடைத்த நாட்கள் மறக்க முடியுமா?
பர்சில் 1000/- இருந்தால்பெரும் பணக்காரன் என்ற நாட்கள் மறக்க முடியுமா?
வீட்டில் டிவி நுழையாத நாட்கள்...எல்லோரும் ரேடியோ சிலோன் கேட்ட நாட்கள்...மறக்க முடியுமா?
அக்கம் பக்க குழந்தைகளுடன் லீவேவெல்லாம் ..ஆட்டம்..summer camp ஆ ?அது என்ன ?என்று வாழ்ந்த நாட்கள்...மறக்க முடியுமா?
வீட்டில் டிவி நுழையாத நாட்கள்...எல்லோரும் ரேடியோ சிலோன் கேட்ட நாட்கள்...மறக்க முடியுமா?
அக்கம் பக்க குழந்தைகளுடன் லீவேவெல்லாம் ..ஆட்டம்..summer camp ஆ ?அது என்ன ?என்று வாழ்ந்த நாட்கள்...மறக்க முடியுமா?
எதுவுமே மறக்க முடியாது போங்க...
ReplyDeleteஅது ஒரு அழகிய நிலாக்காலம்...
கனவினில் தினம் தினம் உலா போகும்...
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே -
அது ஒரு பொற்காலம்...
உண்மை தான்...அவை ஆனந்தமான நாட்கள் ....பின்னூட்டதிற்கு நன்றி.
Deleteஆஹா, மிக அருமையாக வரிசையாக எல்லாவற்றையும் அடுக்கித்தந்து விட்டீர்கள். மிகவும் ரஸித்தேன். என்னால் இவற்றில் எதையுமே மறக்க முடியாது. உண்மை தான்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வரிசையை இன்னும் கூட நீட்டலாம் என்று உத்தேசம்....
Deleteநன்றி,தனபாலன்...கட்டாயம் பயன் படுத்திக்கொள்கிறேன்
ReplyDeleteஆமாம் ! இவற்றில் பலவற்றை எண்பதுகளிலும் நாங்கள் ரசித்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினர் பாவம் தான்.
ReplyDeleteநிஜம் தான்...உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...
Deleteஇம்....கடந்த காலம் எப்பொழுதுமே.. இனிமை தான்
ReplyDeleteVery true. Welcome to my blog...
Delete