badge

Followers

Wednesday, 16 March 2016

பசலைக்கீரை - மருத்துவ குணங்கள்

காய்கறி உணவில் கீரையை விட சத்தும், மருத்துவ குணமும் உள்ள காய்கறிகள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கீரையிலும் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் உள்ளன. சில வகை கீரைகளில், நோய்களை தீர்க்கும் அபூர்வமான மருத்துவ குணங்கள் உள்ளன. 
குறிப்பாக, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகள் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ள கீரையாகும். இந்த வரிசையில் பசலைக்கீரையும், மிக முக்கியமான கீரையாக விளங்குகிறது. 

பசலை ஒரு கொடிவகை தாவரம். 

இந்த கீரையை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம். 

கொடிப்பசலைக் கீரையின் இலைகளை, நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இதில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள், இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், வெப்ப நோய்கள் வராது. இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும்.

இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால், குடல் நோய் கோளாறுகள் சீராகும். கொஞ்சம் பசலை இலையோடு, மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், சீதபேதி குணமாகும்.

இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து, வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும்; குரல் வளம் பெறும். இக்கீரையில் "வைட்டமின் சி' சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும்.

இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும். சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும். இக்கீரையின் மகத்துவம் தெரியாததால், பலர் இக்கீரை வாங்கி சமைப்பதில்லை. அதனால் கீரை வியாபாரிகள் பசலைக்கீரையை வாங்கி விற்பதில்லை. காய்கறி மார்கெட்டில் கூட, இக்கீரை அரிதாகவே கிடைக்கிறது.

Monday, 7 March 2016

பெண்!!!

பெண்!!!
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார

Friday, 4 March 2016

தயிர் ...பயன்கள் + நன்மைகள்

* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.
* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.
* செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.
* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.
* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.
* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.
* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.
* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.
* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.
* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

பிலாஸ்டிக் பாட்டில்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.....
பிலாஸ்டிக் பாட்டில்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.....
1. பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோண வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும்.
("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.
2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 - 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.
3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).
4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.
பிளாஸ்டிக்கில் கவனம் தேவை !!!

Thursday, 3 March 2016

அன்னாசி பழம்....சத்துக்களின் பெட்டகம்இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாசி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.