badge

Followers

Tuesday, 6 September 2016

பாம்பும் குரங்குக்குட்டியும்.... சிந்திக்க ஒரு கதை
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.புதிய உதயத்தை நோக்கி நகருங்கள்...மகிழ்ச்சியாக இருங்கள்...

கிட்டத்தட்ட அந்தக் குட்டியின் நிலையில் இன்று நாம்...பிரச்சனைகள் தான் நாம் பிடித்த பாம்புகள்...

சுற்றி நின்று எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அந்தக் குரங்குக்கு கூட்டம் நம்மில் அனைவருக்குமே பழக்கமான ஒன்று....

சிக்கலை சமாளிக்கும் வலிவு நம் கைகளில் தான் உள்ளது...நமக்கு நாமே தான் உதவி....அதுவும் பிரச்சனை வந்தபோது...

பிரச்சனையின் தாக்கம் நகர்ந்தது கூடப் புரியாமல் நாம் எத்தனை நாட்கள் உறைந்த நிலையில் இருந்துள்ளோம்.....

நம் கண்களை திறக்கும் ஞானம் வெளியில் இருந்து வருவது இல்லை...அது உன்னுள்ளில் தான் இருக்கிறது....அறிந்துகொள்....

Saturday, 3 September 2016

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
ெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
 ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
🔷 டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
🔯 நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.

Thursday, 1 September 2016

இதுதாங்க நம்ம கோயம்புத்தூரு !!!
இதுதாங்க நம்ம கோயம்புத்தூரு 
வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும் கூடவே நாசூக்கான விஷயங்களையும் கற்றுத் தரும் கோவை..
குளிர்ச்சிக்கு கோவை குற்றாலம்.
தேங்காய்க்கு பொள்ளாச்சி,
கறிவேப்பிலை, காய்கறி மேட்டுப்பாளையம்,
தடதட தறிநெசவுக்கு சோமனூர்.
தொழிற்சாலைக்கு கணபதி,


ஆடை ஆபரணம் காந்திபுரம், டவுன்ஹால்,
மின்சாதனப் பொருட்கள் ஒப்பணக்கார வீதி
பாத்திரத்திற்கு அனுப்பர்பாளையம்..
கரும்பு,வெல்லம், சர்க்கரைக்கு உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்,
சிற்பங்களுக்கு திருமுருகன்பூண்டி,
முருகனுக்கு மருதமலை,
சிவனுக்கு திருமூர்த்திமலை,
அரங்கனுக்கு காரமடை,
பெருமாளுக்கு திருப்பூர் திருப்பதி,சின்ன திருப்பதி, விநாயகனுக்கு ஈச்சனாரி, புலியகுளம்.
பாசனத்துக்கு அமராவதி,
தாகத்துக்கு சிறுவாணி,
பொழுது போக்கு பிளாக் தண்டர்,
ஆடிப்பாட திருமூர்த்தி அருவி, குரங்கு சேட்டைக்கு குரங்கு அருவி,
மலைகளின் ராணி ஊட்டியாம்,
மலைகளின் இளவரசி வால்பாறையாம்..
வடக்கே பத்ரகாளி, தெற்கே மாசாணி, மேற்கே மீன்குளத்தி, கிழக்கே செல்லாண்டி.
சிமெண்டுக்கு மதுக்கரை..
சீலைத்துணிக்கு நெகமம்
மஞ்சத்தாலிக்கு உடுமலை முருங்கப்பட்டி,,
வெண்ணெய்க்கு ஊத்துக்குளி,
ஆத்துக்கு அம்பராம்பாளையம்,
பாலத்துக்குப் பெரியபட்டி,
காலேஜூக்குக் பொள்ளாச்சி ரோடு, சக்தி ரோடு, அவினாசி ரோடு.
தேருக்கு அவிநாசி
கள்ளுக்கு கொழிஞ்சாம்பாறை
வைத்தியத்துக்கு தெலுங்குபாளையம்.
பஸ்ஸூக்குக் காந்திபுரம்
மார்க்கெட்டுக்கு உக்கடம்
காருக்கு M.t.p சாலை
சோருக்கு சாந்தி கீயர்.
மனஅமைதிக்கு சாய்பாபா கோவில்
மலைக்கு, யானைக்கு ஆனைக்கட்டி
மாலைக்கு பூமார்க்கெட்
ஏழைகளுக்கு ஊட்டி உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை.
முதலைக்கு அமராவதி .
யானைக்குச் சின்னாறு
ரயிலுக்கு ரயில்வே ஸ்டேசன் போத்தனூரு
திருமண மண்டபத்திற்க்கு போத்தனுரு,குனியமுத்துரு
ஆபத்து, அவசர சிகிச்சைக்கு நகர் முழுவதும் மருத்துவமனைகள்
காவலுக்கு City police.
சேவைக்கு தொண்டு நிறுவனம், அறக்கட்டளைகள்
இது எல்லாம் ஒருதுளி
இருக்கு  ஒரு சிறு துளி.......