badge

Followers

Wednesday 14 December 2016

வர்தா புயல் ...என் பார்வையில்...



வருதா ,வராதா என்று எல்லோரும் பட்டிமன்றம் 
நடத்திக்கொண்டு இருக்கும் போதே சொன்ன டைமுக்கு கரெக்ட்டாக வந்து சென்னையை ஒரு கலக்கு கலக்கி,பிரட்டி,உருட்டி,கிழித்துப் போட்டுவிட்டு தன்  வழியே போய்விட்டது...

வர்தா  புயல் 


சென்னையின் மழையின்மை ,நல்ல குளிர் போன்றவைகளுக்கு இடையே வர்தா  என்ற பெயர் சூடிய புயல் வரப்போகிறது என்று டீ வி கூவினாலும் முழு நம்பிக்கை இல்லை தான்.

ஏனென்றால் ,புயல்கள் சாதாரணமாக சென்னையை மிரட்டிவிட்டு மழையாய் கொட்டி தீர்த்துவிட்டு ஆந்திராவை ,அல்லது ஒரிஸ்ஸாவை அடிக்கும்...இதுவே அதற்க்கு ஒரு பிழைப்பு....என்று சென்னைவாசிகள் கிண்டல் செய்தது கேட்டு விட்டதோ என்னவோ...வந்தது வர்தா ....

ஞாயிறு மாலை...மிக  இதமான தூறல் மழை...சில்லென்ற குளிர்....சென்னையில் ஷால் போர்த்திக்கொள்ள  வேண்டிய சீதோஷணம்.

எதற்கும் டீ வீ காரர் சொன்னதைக் கேட்டு வைப்போம் என்று ஒரு ப்ரெட்டும் ,கொஞ்சம் பிஸ்கெட்டும் வாங்கி வைத்தேன்...


நடு இரவில் தூறல் கொஞ்சம் கனத்தது...

விடியக்காலை  நோ கரண்ட் ......

தூறல் இன்னும் பலத்து...

சென்னை ஊட்டி குளிர் அனுபவித்தது...

மதியம் 11 மணிக்கு மழை ,காற்றோடு பலத்து....

12 மணிக்கு எங்கள் காம்ப்ஸ்ஸில்  உள்ள மரங்கள் பயங்கரமாக சாமியாட ஆரம்பித்தன....
ஊஊஊஒ ...... ஓஓஓஓஓஓஓ ..........ஷ்ஷ்ஷ்ஹ்ஷ் ....என்ற பாக்கிரௌண்ட் ம்யூஸிக்குடன்....

வீடெல்லாம் இருட்டு....
சார்த்தி வைய்த்த கண்ணாடி ஜன்னல்கள் படபடக்க....
சுமார் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள மிக பிரம்மாண்ட ஷெட் ஒன்றின் கூரை ஷீட்கள் ஒன்றொன்றாய் பறந்தன....ஒரு மணி வாக்கில் ஷெட் வெறும் எலும்புக்கூடு...

வீட்டை சுற்றி உள்ள மரக்கிளைகள் பெரிய சத்தத்துடன் முறிந்தன....

என் வீட்டு ஜன்னலுக்கு ஜஸ்ட் 10அடிக்கு அப்பால் ஒரு நெடிய கிளை முறிந்து விழுந்தது...

என் அதிருஷ்டம் கிளையின் நுனி என் AC யை தொடவில்லை...

கிளைகளுக்கு அடியில் கார்கள் பாவமாய் நசுங்கி....
பைக்குகள் விழுந்து...
மொபைல் சார்ஜ் இல்லை...
டீ வீ  இல்லாததே தனிமையில் தள்ளியது போல இருந்தது...

கணவர் இந்த
மருத்துவக்கல்லூரி +மருத்துவமனை 
வளாகத்திலேயே வேலை என்பதால் பெரிய கவலை இல்லை.

மாலை ...
இவர் வீடு வந்தபின் ....
"வேற என்ன நியூஸ்..."

"புயல் தான்...பயங்கரம்...இங்கே மட்டும் 300 மரங்களுக்கு மேல விழுந்திருக்கு...நிறைய கார்கள்,அவுட் ..."
"ஒரு பையன் ...வீட்டை விட்டு அப்போதான் வெளியே வந்திருக்கான். மரக்கிளை மேல விழுந்திடுத்து...இங்கே emergency க்கு தூக்கி வந்தால்...கதை அப்பவே முடிந்தாச்சு...அந்த பையன் இங்கே வேலை பார்க்கும் ஒரு செக்யூரிட்டி யின்  மகன்.....கதறுகிறான் பெத்தவன்...தாங்க முடியவில்லை..."
அடி வயிற்றில் நரம்புகள் இழுத்தன...

கார்த்திகை   தீபங்கள்....வீட்டுக்குள்ளே ஒளி வீசி இதமளித்தன...அப்பம் ,பொரி  இல்லாத கார்த்திகை....பயம் சூழ்நத கார்த்திகை....

கார்த்திகை விளக்கு ஒளியில் தோசை டின்னர் ....

இடைவிடாத காற்றின் ஓலம்...

இருட்டு...

பயமுறுத்தத்தான் செய்தது....

விடிய விடிய  ..தொடர்ந்தது...

காலை....புயலுக்குப்பின் அமைதி...

கரண்ட் இல்லை....மொபைல்  இல்லை....

டோட்டல்  கம்யூனிகேஷன் கட்...



புயல் எனக்கு சொன்ன செய்திகள்...


போன டிசம்பரில் சென்னை மிதந்தது ....

இந்த டிசம்பரில் சென்னை பறந்தது....

ஆனால், போன வருஷத்தை விட இது சற்று பெட்டர் தான்....

புயலுக்கு மக்களும்,அரசாங்க இயந்திரமும் இன்னமும் தயார் நிலையில் இருந்தனர்...

எச்சரிக்கை படி வீட்டுக்குள் இருந்தவர்கள் பத்திரமாக இருந்தனர்...
ஆடும் மரம் முன் செல்பீ  எடுக்க சென்றவர்கள் அதிகம் அடி பட்டனர்...
வீடுகள் ,வாகனங்கள் சேதப்பட்டாலும் இன்சூரன்ஸ் செய்தவர்கள் கொஞ்சம் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்...

ஒரு தெருவில் ஓரிருவர்  பாதிக்கப்பட்டனர்....ஆனால் வெள்ளத்தின் போது இன்னும் பலபல மக்கள் எதிர்பாராமல் பாதிக்கப்பட்டனர்....ஏரியாவே மொத்தமாக மூழ்கியது...

வெள்ளம் man made  disaster ...இது இயற்கையின் வெறியாட்டம் ....

விழுந்த மரங்களும் மீண்டும் வளர 10 - 20  வருடங்கள் ஆகும்...

மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல விபத்துகள் தவிர்க்கப்பட்டன...

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாவிட்டால் இன்வெர்ட்டர் ,மொபைல் போன் பிளாஷ் லைட் எல்லாம் வேலைக்கு ஆகாது....அந்தக்கால டார்ச் லைட் ,மெழுகு வர்த்தி தான் பெஸ்ட் .

மின்சாரம்,நெட்ஒர்க் , போனால் paytm ,debit ,credit card ,ஆன்லைன் transfer எல்லாம் எட்டு சுரைக்காய் தான்...

கையில் இருக்கும் காசே கடவுள்...

அதிலும் 2000/- வேலைக்கு ஆகவில்லை .

"கேஷ் லெஸ் "விட  "லெஸ் கேஷ் " உத்தமம்....

கையில் கோடாலியுடன் மரம் வெட்டிய போலீஸ் காரர்களுக்கும் ,மாநகராட்சி ஊழியர்களுக்கும்,  சேவகர்களுக்கும் என் வணக்கங்கள்....

4 comments:

  1. புயல் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றையும் புயல் வேகத்தில் வெகு அழகாகவும் நியாயமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //"கேஷ் லெஸ் "விட "லெஸ் கேஷ் " உத்தமம்....//

    சூப்பர் ! :)

    ReplyDelete
  2. அனுபவ பதிவு மிக நன்று, ஒரு முறை என் வலைத்தளம் பக்கம் வாருங்களேன்

    ReplyDelete
  3. சூழலை நன்கு உணருமபடியான
    வித்தியாசமாகச் சொல்லிப் போனவிதம் அருமை
    ஒரு சாவுத் தகவல் மிக வேதனை அளித்தது
    இந்த முறை புயலின் வேகம் . போக்கு
    எச்சரிக்கை முதலான விஷயங்களை
    மிகச் சரியாக அனுமானித்ததாலும்
    எச்சரித்ததாலும் உயிர்ப்பலி அதிகம் நேராமல்
    தவிர்க்க முடிந்திருக்கிறது

    ReplyDelete
  4. மிகவும் சிரமம் தான்...

    ReplyDelete