badge

Followers

Monday, 7 July 2014

பிரிஜ்ஜை பராமரிக்க சில டிப்ஸ்...


குளிர்சாதனப்பெட்டியை (fridge )பராமரிப்பது எப்படி?

1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.அதிக உஷ்ணமும் பிரிஜ்ஜை  கெடுக்கும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.உள்ளே வாய்த்த பண்டங்கள் நீண்ட நாட்கள்/நேரம் ப்ரெஷ்ஆக  இருக்க உதவும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. 

பிரிஜ்சுக்கும் சுவற்றுக்கும் இடையே ஒரு அடி கேப் அவசியம்.அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.





4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.





8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.



10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.


13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.



15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லி, கீரை, கறிவேப்பிலை இவைகளை  நியூஸ்பேப்பர்/அல்லது மெல்லிய பருதித்துணி கொண்டு சுற்றி வைத்தால்  ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை குறைவாகப் பயன் படுத்தும்.


21.பிரிஜ்ஜுக்குள்  ஒரு சிறு  கரித்துண்டை ஒரு ஓரத்தில் வைத்தால் துர்வாடை வருவதை தடுக்கலாம்.



22.பிரிஜ்ஜில் வைக்கும் பண்டங்களை மூடி வைப்பது அவசியம்.இல்லாவிட்டால்,ஒன்றின் வாசனை மற்ற உணவு பொருட்களில் ஒட்டிக  கொள்ளாது...

23.FROST FREE  பிரிஜ்  பராமரிப்பு இன்னும் சுலபமானது.

24.தனி ப்ரீசருக்கு பல உபயோகங்கள் உள்ளது.

25.ரவை,மித,மசாலா பொடிகள்,சில பருப்பு வகைகளைக் கூட ஜிப் லாக் கவர்களில் போட்டு ப்ரீசரில் வைத்தால் பல மாதங்கள் பிரெஷாக இருக்கும்.பூச்சி ,வண்டு வராது.

26.எலுமிச்சை சாறை ஐஸ் கட்டிகளாக ப்ரீஸ் செய்து ஒரு பெட் பாட்டில் அல்லது ஜிப் லாக் கவரில் வைத்து ஜூஸ் வேண்டும் போதெல்லாம் ஒரு ஐஸ் கட்டியை உபயோகப்படுத்தலாம்.









11 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள். ஒருமுறை பொறுமையாக என் ஆத்துக்காரிக்கும் படித்துக் காட்டிவிட்டேன். வேறு ஒன்றும் என்னால் செய்வதற்கு இல்லை. TNEB BILL இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 8000க்கும் மேல் கட்டி வருகிறேன். ஈஸ்வரோ ரக்ஷது. ;)))))

    ReplyDelete
    Replies
    1. சார்...
      8000/- E .B .பில்லுக்கு பொறுப்பு பிரிஜ் இல்லை...அதற்க்கு அப்பனான A .C . தான்!!!!வெயிலை சமாளிக்க வேறு வழி எனக்கும் தெரியலை!இங்கேயும் அதே கதை தான்!!!

      Delete
    2. Usha Srikumar 7-7-14 2:35 பிற்பகல்

      //சார்... 8000/- E .B .பில்லுக்கு பொறுப்பு பிரிஜ் இல்லை...அதற்க்கு அப்பனான A .C . தான்!!!!வெயிலை சமாளிக்க வேறு வழி எனக்கும் தெரியலை!இங்கேயும் அதே கதை தான்!!!//

      ஆமாம் மேடம். என் வீட்டில் இரண்டு SPLIT A.C. க்கள் தனித்தனியாக இரண்டு இடங்களில் உள்ளன. பெரும்பாலும் இரவு நேரங்களிலும், சில சமயம் பகலிலும் கூட ஓட்டத்தான் வேண்டியுள்ளது.

      அதுதவிர இரண்டு DESK TOP COMPUTERS, ONE 'E' COOK, ONE FULLY AUTOMATIC BIG SIZE WASHING MACHINE, FRIDGE, GRINDER, MIXY, SEVEN CEILING FANS, TWO EXHAUST FANS, 10 TUBE LIGHTS, BIG SIZE T.V., என பல சமாசாரங்கள் [மின்சாரத்தில் இயங்குபவைகளாக] உள்ளன.

      போன சம்மரில் ஒரு முறை 9900 ரூபாய் [கிட்டத்தட்ட 10000 ரூபாய் வரை] TNEB Bill கட்டியுள்ளேன்.

      வசதி வாய்ப்புகள் எதையும் இன்று குறைத்துக்கொள்ள இயலவில்லை. அதுபோலவே பழகியாச்சு.

      நான் SSLC [11th Standard] படித்து முடிக்கும்வரை என் வீட்டில் எலெக்ட்ரிக் கனெக்‌ஷனே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

      நான் படித்ததெல்லாம் பள்ளியின் வகுப்பறையிலும், தெரு விளக்கிலும் மட்டுமே. இப்போது FAN / A.C. இல்லாமல் ஒரு நிமிடம் இருக்க முடிவது இல்லை. நினைத்துப்பார்க்கவே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

      ஏதோ இருக்கும் வரை ஜாலியாக எல்லாவற்றையும் அனுபவித்து விடுவோம் என்ற எண்ணமும் உள்ளது. ;)

      வாழ்க்கையில் எல்லாவித சுக துக்கங்களையும் பார்த்தாச்சு.

      ஏதோ இதேபோல சொச்சகாலமும் கஷ்டமில்லாமல் ஓடினால் சரியே என்ற முடிவுக்கும் வந்தாச்சு.

      அன்புடன் கோபு






      Delete
    3. உண்மை தான்...அந்தக்காலத்தில் முடிந்தது...இன்று பல வசதிகளை பழகிவிட்டோம்.அவை ஆடம்பரம் அல்ல அவசியம் ஆகிவிட்டன...

      Delete
  2. //வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.//

    பச்சைப் பழம் அப்படி சாப்பிட்டால் தனி ருசி. செய்யக்கூடாதா? ஏன்?

    ReplyDelete
    Replies
    1. Bananas pump out loads of ethelene gas, which speeds the ripening of other fruits. This goes against the purpose of a fridge, which is to lengthen the shelf life of spoilable produce by about a week.+they ripen well when they are kept in an airy place ...
      Welcometo this blog,Dharumi...

      Delete
  3. //16. கொத்தமல்லி, கீரை, கறிவேப்பிலை இவைகளை நியூஸ்பேப்பர்/அல்லது மெல்லிய பருதித்துணி கொண்டு சுற்றி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.//


    சிறப்பான அறிவுரைகள்.

    இந்த நியூஸ் பேப்பர் சுற்றி வைப்பது சரியில்லை. வீட்டில் சிலர் சப்பாத்தி போடும்போதும் நியூஸ் பேப்பரில் போடுவார்கள். இது சரியில்லை. நியூஸ் பேப்பரில் இருந்து மை அதில் ஒட்டிக்கொள்ளும். வேண்டுமானால் பாலிதீன் பையில் வைத்து, அதன் மேல் நியூஸ் பேப்பரை சுற்றி வைத்து, இவற்றை இன்னொரு பாலிதீன் பையில் வைக்கலாம். நல்ல டிஷ்யூ கிடைத்தால் அதில் சுற்றியும் வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.செய்திதாளில் உள்ள மை உடம்புக்குக் கெடுதல் செய்யலாம்.

      polythene கவரில் வைத்தால் கீரை,காய்களில் உள்ள ஈரம் உறிஞ்சப்பட்டது.அதனால் அவை ஈரம் பட்டு அழுகும் வைப்பு உண்டு.டிஷ் யூ வீடுகளில் இருந்தால் தாராளமாக வைக்கலாம்.
      கருத்துக்கு நன்றி.

      Delete
  4. Replies
    1. Welcome,Anuradha....
      Thanx for the feedback:)

      Delete