பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரை அடையாளம் தெரியாது ...
பக்கத்து கிரகத்தில்
மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது!!!
மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி...
தெருவுக்குத்தெரு டாக்டர்கள் ...ஆஸ்பத்திரிகள்....
புதுசு புதுசாக நோய்கள்....நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்!!!
நிறைய வருமானம்...
அதற்குமேல் கடன்!!!
வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை!!!!
தெருவுக்குத்தெரு டாக்டர்கள் ...ஆஸ்பத்திரிகள்....
புதுசு புதுசாக நோய்கள்....நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்!!!
நிறைய வருமானம்...
அதற்குமேல் கடன்!!!
வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை!!!!
புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான
விவாதங்கள் அதிகம்....
உணர்வுப் பூர்வமான உரையாடல்களும்,
சின்னச்சின்ன பாராட்டுகளும் குறைவு!!!!
அளவில்லாத நண்பர்கள்...முகநூலில் ....அதில் பலரையும் பார்த்தது கூடக் கிடையாது !
ஆபத்துக்கு உதவ யாரும் இல்லை...அருகில்!!!!!!!
பல பல பட்டங்கள்...பட்டயங்கள்....
ஆனால் சிறிய பிரச்சனையை சமாளிக்கத் திணறும் காரணம் பொது அறிவு இல்லாமை...
பொழுது போக்காக விளையாட்டு -அது அந்தக்காலம்...
ரத்த அழுத்தம் ,அதிக சர்க்கரை ,உடல் பருமனைக் குறைக்க ஜிம்மில் வியர்வை சிந்துவது...இந்தக்காலம்!!!
அப்பா ,அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு...
குழந்தைக்கு அடுத்த வீடு தாத்தா ,பாட்டியை அறிமுகம் செய்வது !!!!
கோவில்,குளம் போக நோ டைம்!!!
மன அழுத்தம் குறைக்க ஆயிரங்கள் கொட்டிக்கொடுத்து "குருஜி"யிடம் தியானம் பழக அலைமோதும் கூட்டம்!!!
கஷ்டப்பட்டு அம்மா சுட்ட மல்லிகைப் பூ இட்லி அரை டஜன் சாப்பிட்டபின் ஒரு வார்த்தை பாராட்டு இல்ல...
ஆனால் முகநூலில் யாரோ போட்ட இட்லி,சட்னி படத்துக்கு 118 "லைக்"குகள் !!!! 68 கம்மேன்ட்டுகள்..."சூப்பர் ",ம்ம்மம்மம்ம்ம்ம் ...", "அருமை!"என்று ...
தண்ணீர் குடிக்கததால் சிறுநீரகத்தில் கல்லு !
தண்ணி அடிப்பதால் வயிறெல்லாம் புண்ணு !!!!
உண்மைகள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,தனபாலன்
Deleteஅனைத்தும் அருமை, உண்மை. ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
ReplyDelete//கஷ்டப்பட்டு அம்மா சுட்ட மலிகைப் பூ இட்லி அரை டஜன் சாப்பிட்டபின் ஒரு வார்த்தை பாராட்டு இல்ல... ஆனால் முகநூலில் யாரோ போட்ட இட்லி,சட்னி படத்துக்கு 118 "லைக்"குகள் !!!! 68 கம்மேன்ட்டுகள்..."சூப்பர் ",ம்ம்மம்மம்ம்ம்ம் ...", "அருமை!"என்று ...//
அருமையோ அருமை ;))))) சூப்பர் ! ;))))) I also like this. ;)))))
>>>>>
தங்கள் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார்
Delete//அளவில்லாத நண்பர்கள்...முகநூலில் ....அதில் பலரையும் பார்த்தது கூடக் கிடையாது ! ஆபத்துக்கு உதவ யாரும் இல்லை...அருகில்!!!!!!!//
ReplyDeleteகரெக்ட்.
//புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம்....
உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்னச்சின்ன பாராட்டுகளும் குறைவு!!!!//
தங்களை உணர்வு பூர்வமாக நிறைய நிறைய பாராட்டித்தான் வருகிறேனாக்கும். ;)
//தங்களை உணர்வு பூர்வமாக நிறைய நிறைய பாராட்டித்தான் வருகிறேனாக்கும்...//
Deleteநிச்சயமாக...
நன்றிகள்,சார்
எவ்வளவு பெரிய உண்மைகளை அசால்ட்டா போற போக்குல சொல்லிட்டீங்க. அருமைங்க.
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கும் ,வருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,ராஜி
Deleteஅனைத்தும் அருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,Carunairuban
DeleteWell said, Usha...technology can be such a thief of treasured family values. We need to find balance :)
ReplyDeleteThank you,Elmo.U r right.
Deleteமிகவும் அருமையான பதிவு....,
ReplyDelete