badge

பின்பற்றுபவர்கள்

சனி, 26 ஜூலை, 2014

கணிணி கவசம்!!!!




கந்த சஷ்டி கவசம் போல இதையும் பாராயணம் செய்யுங்கள் ஐ  டி  துறை மக்களே!!!!

வீட்டில் உள்ள சிஸ்டம் அல்லது லேப்டாப்பில் நாளெல்லாம் ப்ளாக் செய்யும் நட்பு வட்டமும்,
முகநூல் வாசிகளும் கூட பாராயணம் செய்தால் நன்மை தரும்!!!!!




துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!
காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்னல்  மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகாமல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட்ரப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோல்டர்சும்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலட்சிய ஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க...



(இணையத்தில் படித்ததில் பிடித்தது)

6 கருத்துகள்:

  1. கணினி கவசம் கந்த சஷ்டி கவசத்தையே தூக்கி சாப்பிட்டுவிடும் விதமாக உள்ளது. அருமையோ அருமையாக யோசித்து எழுதியுள்ளீர்கள். நல்ல நகைச்சுவை. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி...
      ஆனால் இது என் கற்பனையில் உதித்தது இல்லை.நான் பகிர்ந்து கொண்டந்து மட்டுமே...(அதை நான் கடைசியில் தெரிவித்துள்ளேன்).
      என்னை சிரிக்க வைத்த இந்தப்பகிர்வு மேலும் பலரை சிரிக்க வைக்கும் என்றே பகிர்ந்துள்ளேன்...
      பாராட்டு அந்த முகம் தெரியாத எழுத்தாளருக்குப் போய் சேர வேண்டும்:)))

      நீக்கு
  2. சிரித்தேன் சிரித்தேன் வயிறு வலிக்க ...இதைப் போன்றே பாக்கியம் ராமசாமி அவர்களும் கணினி கவசம் எழுதியுள்ளார் ,அது நினைவுக்கு வந்தது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் பகவான்ஜி...

      நீக்கு