குழந்தைக்கிருஷ்ணனை ஆசையுடன் மடியில்
அமர்த்தி கொஞ்சும் இந்த வித்தியாசமான கணபதி
நமக்கு தரிசனம் தருவது கேரள மாநிலத்தில்,
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள
ஸ்ரீ மல்லியூர் கணபதி கோவில்
என்கிற திருத்தலத்தில்...
பிள்ளையாரை எத்தனையோ வடிவங்களில்
நாம் வடிவமைத்து வணங்கி மகிழ்கிறோம்...
கிரிகெட் ஆடும் பிள்ளையார்...
கம்ப்யூட்டர் பிள்ளையார்...
வாத்தியங்கள் வாசிக்கும் பிள்ளையார்...
படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் கணேசர்...
என்று இன்று எண்ணற்ற வடிவங்களில்
நாம் கணநாதரை கொண்டாடுகிறோம்...
ஆனால்,பல நூறு ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்ட இந்தத் திருத்தலத்தில்
மாமன் கிருஷ்ணனை வாஞ்சையோடு
தன் மடி மீது அமர வைத்துக் கொஞ்சும்
அன்பான மருமகனாக கணபதி காட்சி தருகிறார்...
இவர்களை தஞ்சாவூர் பாணி ஓவியமாக வடித்து
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
மறுமான் தொந்திப்பிள்ளையார் மடியில் மாமா குட்டிக்கிருஷ்ணன் வெகு அழகாக தஞ்சாவூர் ஓவியமாக வடிவமைத்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார்
Deleteஅருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,ராஜி
Delete// மாமன் கிருஷ்ணனை வாஞ்சையோடு
ReplyDeleteதன் மடி மீது அமர வைத்துக் கொஞ்சும்
அன்பான மருமகனாக கணபதி காட்சி தருகிறார்...// ரொம்பவே வித்தியாசமா, ஆச்சர்யமா இருக்கு. :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தானைத்தலைவி
Delete