badge

Followers

Tuesday, 3 July 2012

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ...






குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 



சரணம் - 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

சரணம் -2 

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

சரணம் - 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 



சரணம் - 4


கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

சரணம் - 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் 
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

(பாடல் வரிகள்...நன்றி இணையத்திற்கு...)

நான் தஞ்சை பாணி ஓவியமாக வரைந்த
அந்தகோவிந்தன்...எம்பெருமான்  ஏழுமலயப்பனின்
ஓவியத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

Visit my other blog too...
http://ushasrikumar.blogspot.in/2012/03/sri-venkateshwara-tanjore-painting.html

12 comments:

  1. ஆஹா அருமை அருமை .... எம்பெருமானை காண்பதுவே மகிழ்ச்சி அதிலும் இத்தனை அருமையான பாடல்வரிகளுடன்... மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அக்கா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ,விஜி...

      Delete
  2. அழகான தங்களின் கைவேலைகளால் தோன்றிய பெருமாளை தரிஸிக்கும் போது .......


    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

    எனப்பாடத்தான் தோன்றுகிறது. சந்தோஷம்! ;)

    கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களின் அழகாக இந்தப்பதிவினால் காட்சி தருகிறாய் கண்ணா!!

    அதனால்
    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

    என்று தான் இனி மாத்திப்பாடணும் எனத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.

    vgk

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி,சார்:)

      Delete
  3. எம்..எஸ்..அம்மாவின் அருமையான குரலில் இந்த பாடலை அடிக்கடி கேட்பதுண்டு..பெருமாளின் தரிசனம் உங்கள் கை வண்ணத்தில் அருமை...அழகான எம்பாசிங் வேலை போல் ஓவியத்தை வரைந்து விட்டீர்கள் ..இதை செய்வதற்கு பொறுமை மிக மிக வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. ராதா ராணி ,உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.
      இந்த பாடலை நினைத்தாலே எம் எஸ் அம்மா வின் தேன்மதுரக்குரல் தான் காதில் ஒலிக்கிறது,அல்லவா!

      Delete
  4. Excellant .Pl. view my blog
    http://keerthananjali.blogspot.in/2010/11/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. Thanx for your visit and comments,Sir.Peeped into your blogs too.Nice:)

      Delete
  5. அருமையான பாடல், அழகான ஓவியம்!

    ReplyDelete
  6. குறை ஒன்றும் இல்லை !!!!!

    ReplyDelete