badge

Followers

Wednesday, 11 July 2012

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் -தஞ்சை பாணி ஓவியம்


       

                                                             
                                                                மதுராஷ்டகம்


(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!


இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
(நன்றி -இணையம்)



தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு 
வரும் இந்த   வெண்ணைத்தாழி கிருஷ்ணர்  ஓவியத்தை  
தங்கள் பார்வைக்கு இந்த ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்...

Visit my other blog too...

http://ushasrikumar.blogspot.in/2012/01/navaneetha-krishna-tanjore-painting.html

4 comments:

  1. அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்

    ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

    என்ற மதுரமான பாடலுடன் வெண்ணெய்த் தாழிக் கண்ணனை பார்க்கப்பார்க்க ஒரே பரவஸமாக உள்ளது.

    வெகு அழகாக வரைந்துள்ளீர்கள். அந்த குழந்தையான முகபாவமும், அமர்ந்திருக்கும் அழகிய ஸ்டைலும், நகை ஆபரணங்களும், மணி மண்டபமும் என எதைப் பாராட்டுவது எதை விடுவது?

    எல்லாமே ஒரே அழகோ அழகு.
    அற்புதமான படைப்பு.

    படைத்த தங்களின் திருக்கரங்களுக்கு நன்றியோ நன்றிகள். EXCELLENT ART WORK MADAM. VERY GLAD TO SEE ..... ;)))))

    ReplyDelete
  2. அக்கா ரொம்ப அழகாக உள்ளது கண்ணனின் தஞ்சை ஓவியம் ..... அக்கா என்னை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து விட்டது உங்களின் கைவண்ணம் .... Wow! Excellent Art Work akka....

    ReplyDelete
  3. தஞ்சைபாணி கண்ணனின் ஓவியம் அதே பாணியில் சற்றும் குறையாமல் மிக நன்றாக உள்ளது.உங்கள் கை திறமை வெகு அழகு.

    ReplyDelete
  4. வெண்ணைத்தாழி கிருஷ்ணர் ஓவியமும்
    மதுராஷ்டகமும் மதுரம் !
    மதுரம் மதுரமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete