அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
(அலைபாயுதே)
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
(அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு
(அலைபாயுதே)
கேரள பாணியில் இராதா+கிருஷ்ணன் படம் நன்றாக உள்ளது.
ReplyDeleteஅதுவும் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
(அலைபாயுதே)
என்ற அழகானதொரு பாடலுடன் பார்க்கும்போது நம் மனமே அலைபாயுது அந்தக்கண்ணனை நோக்கி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk
கண்களை நிறைக்கும் வண்ன ஓவியமும்
ReplyDeleteமனதை நிறைக்கும் அற்புத பாடல் பகிர்வும் அருமை.. பாராட்டுக்கள்..
ராதாகிருஷ்ணன் அழகிய வண்ணகளுடன் அழகாக வரைந்துள்ளீர்கள் அக்கா....ரொம்ப அழகா இருக்கு படமும், அருமையான பாடலும்.....சூப்பர் அக்கா....
ReplyDeleteஅய்யோ அய்யய்யோ நான் உங்களின் வீட்டிற்கு பக்கத்தில் இல்லாமல் போய்விட்டேனே .... இருந்திருந்தால் படங்களையெல்லாம் ஆட்டையை (சூட்) அடிச்சிருக்கலாம் .. ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கு.....
ReplyDeleteஅக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் இப்படி.... அருமை அக்கா....
Can I get your mail-id madam?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletethanks madam !
DeleteT.Thalaivi