ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...
என் தஞ்சை பாணி ஓவியத்தில் ஒய்யாரமாய் ஆலிலையில் படுத்து இருக்கிறான் என் செல்லக்குட்டிக் கண்ணன் ...
தஞ்சை ஓவியம் மிகவும் அருமை.. ஆலிலை கண்ணன் ஆஹா என்ன அழகு..... அக்கா உங்களிடம் எவ்வளவு கலைத்திறன் இருக்கிறது எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது ........... ஆனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா ....
ReplyDeleteஆலிலை கண்ணன் அழகா இருக்கார்..
ReplyDelete//ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ//
ReplyDeleteஎன்ற மிக அழகான பாடலுடன் ஆரம்பித்து, ஆலிலைக் கண்ணனை மிக அழகாக வரைந்து பதிவிட்டு, பகிர்ந்துள்ளது அழகோ அழகு.
ஆலிலையைச் சுற்றிக்காட்டியுள்ள மாதுளை முத்துக்கள் ஜொலிப்பது போன்ற டிசைன் கண்ணனின் அழகுக்கு மேலும் அழகூட்டுகிறது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
விஜி ,ராதா ராணி & VGK Sir,
ReplyDeleteதங்கள் கனிவான பின்னூட்டங்களுக்கு மிக்க nandri