badge

Followers

Wednesday, 11 July 2012

மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல்




மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம்...




இதோ  ....வாக்தேவி சரஸ்வதியை கேரளா ம்யுரல்  பாணியில் நான் வரைந்துள்ள ஓவியத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


Visit my other blog ...
http://ushasrikumar.blogspot.in/2012/02/saraswathi-varadhe-kaama-rubinee.html

6 comments:

  1. "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
    தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
    அம்மா பாட வந்தோம்
    அருள்வாய் நீ இசை தர வா நீ"
    ஆஹா என்ன ஒரு பாடல். அற்புதமான படைப்பு மாதேவி கலைவாணி ஓவியம் .... மிகவும் அழகாக இருக்கிறது அக்கா......

    ReplyDelete
  2. சரஸ்வதி தேவியின் கருணை விழிகள்..உதட்டில் தவழும் புன்சிரிப்பு ... தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்.ரெம்ப,ரெம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. ”மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி”
    பாடலுடன் கொடுத்துள்ள படம் அழகுக்கு அழகு
    சேர்ப்பதாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

    கேரளப்பாணி மாதேவி கலைவாணிக்கு என் நமஸ்காரங்கள். ;)))))

    ReplyDelete