badge

பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

விஷமக்கார கண்ணன் ...
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன் 

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது 
இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது 
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது 
இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால் 
அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான் ||

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன்

நீலமேகம் போலே இருப்பன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன் 
கோலப்புல்லாங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி
கொஞ்சம்போல  வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்  ||

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன்

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)
மூகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் 
எனக்கது  தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு
விக்கி விக்கி அழும்போது இது தாண்டி மூகாரி என்பான் ||

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன்.....
என்ன புதிய விஷமம் செய்ய இப்படி ஒன்றுமே தெரியாத சமத்து செல்லம் போல முகத்தை  வைத்துக்கொண்டு எட்டி பார்கிறான்?

வெண்ணை திருட்டு திட்டம் போடுகிறானா ?
மண்ணை உண்ண சதி செய்கிறானா ?
தோழர்களுடன் கோகுலத்தை கலக்க முடிவு செய்துவிட்டனா ?
இல்லை காளிங்கன் தலையில் தாண்டவம் 
ஆட தாளம் முடிவு செய்து விட்டனா?

அவனை தஞ்சைஓவியமாய் வரைய தெரிந்த எனக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே ..
.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே... 12 கருத்துகள்:

 1. விஷமம் கண்ணிலேயே தெரிகிறது . மிக அருமை உங்கள் இல்லத்து வெண்ணை....................??????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் என் இல்லத்து வெண்ணைக்கு ஆசைப்பட்டால் நான் பாக்யசாலி

   நீக்கு
 2. //அவனை தஞ்சைஓவியமாய் வரைய தெரிந்த எனக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே .. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...//

  விஷமக்காரக் கண்ணன் என்ன நினைக்கிறான் என்றால்.....

  ”யாருக்குமே கட்டுப்படாத புலப்படாத புரிந்துகொள்ள முடியாத பரம்பொருளாகிய என்னையே, இந்த திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள், தனது தனித்திறமையால் அழகோ அழகாக வரைந்து, அன்பினால் சிறைப்படுத்தி, அனைவரும் காணும் வண்ணம் ஓர் அழகிய பதிவாக்கித் தந்து விட்டார்களே!” என்று தான் நினைக்கிறான்.

  படமும் அழகு. அந்தப்பாடலும் திருமதி அருணா சாய்ராம் அவர்கள், பலவித முகபாவனைகளுடன் பாடுவது போன்ற உற்சாகத்தைத் தருவதாக உள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள், மேடம். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK Sir,
   அவன் அப்படி நினைத்தால் என்னை விட அதிருஷ்டசாலி இந்த உலகத்தில் இருக்க முடியாது
   நானும் அருணா சாய் ராம் விசிறி...இது என் favorite பாட்டு கூட...

   நீக்கு
 3. தாங்கள் எனக்களித்த விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக,
  தாங்கள் கூறியிருந்த நிபந்தனைகளின்படி, பதிவு ஒன்று வெளியிட்டு விட்டேன்.
  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/06/awesome-blogger-award.html

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 4. உங்கள் படமும் பாட்டும் மிக மிக அழகு! எனக்கு இந்தப் பாட்டு முழுக்க தெரியாது. முழு பாட்டும் போட்டதற்கு நன்றி உஷா.

  பதிலளிநீக்கு
 5. அருமை அக்கா வெண்ணை திருடும் கண்ணன் மிகவும் அழகு பொருந்தி காணப்படுகிறான் . உங்கள் கைவண்ணம் மிகவும் அருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி...விஜி

  பதிலளிநீக்கு