இந்த ஸ்ட்ரா பெர்ரி மில்க் ஷேக் குடிப்பதற்கல்ல !!!
ஏனென்றால் இது மெழுகால் செய்யப்பட்டது!
இதை செய்ய தேவையான பொருட்கள்...
பாரபின் மெழுகு
ஒரு கண்ணாடி கோப்பை./(tumbler )
சிவப்பு நிற wax crayon
straw
பாத்திரம்
மத்து
செய்முறை
பாத்திரத்தில் மெழுகை போட்டு சூடாக்கி தண்ணீர் போல உருக விடவும்...
இதில் சிறிது வாக்ஸ் crayon சேர்த்து இளம் பிங்க் நிறம் வரும் வரை கலக்கவும்.
(ஜாக்கிருதை ! மெழுகு ரொம்ப சூடு ஆகி விட்டால் தீ பிடித்து விடும்...)
அதனால் இளம் சூட்டில் வைத்து உருக்கவும்.
இதை அடுப்பில் இறக்கி வைத்து தயிர் கடையும் மத்தால் கடையவும்.
நன்றாக நுரைத்து வரும்.
இதை சிறிது சிறிதாக கண்ணாடி கோப்பை யில் நிரப்பவும்...
நுரையை மேலாக ஸ்பூனில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்...
சிறிது கெட்டியான பிறகு straw வை சாய்வாக சொறுகி வைக்கவும்...
சீக்கிரமே அலங்காரமாக ஷோ கேசில் வைத்து விடுங்கள் ....
இல்லாவிட்டால்...யாராவது
"அஹா ! ஸ்ட்ரா பெர்ரி மிலக் ஷேக்கா ? "என்று
அதை குடிக்கப் போய் விடுவார்கள்!
(மெழுகு உருக்கிய பாத்திரம் ,மத்து ஆகியவற்றை தண்ணீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சுத்தம் ஆகிவிடும்...)
//இந்த ஸ்ட்ரா பெர்ரி மில்க் ஷேக் குடிப்பதற்கல்ல !!!
ReplyDeleteஏனென்றால் இது மெழுகால் செய்யப்பட்டது!//
நல்லவேளையாகக் குடிப்பதற்கு முன்பே சொன்னீர்கள்.
நல்லாவே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி சார் .ஒரு எச்சரிக்கைக்குதான் முதலிலேயே சொல்லிவிட்டேன்....:)
Deleteபாராட்டுக்கு நன்றி
அழகாக செய்துள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Deleteதத்ரூபமா இருக்கு... நானும் எங்க வீட்டு ஷோ கேஸில் செய்து வைத்து விடுகிறேன்.
ReplyDeleteவெரி குட் ,ராதா ராணி .உடனே செய்து வைத்து விடுங்கள்...கூடவே ஒரு படத்தை ப்ளாக்கில் போட்டுவிடுங்கள்
Deleteசூப்பர் ! இந்த மாதிரி எந்த கலர் வேணுமானாலும் கலந்து செய்யலாமா?
ReplyDeleteதாராளமாக வேறு கலர் சேர்க்கலாம்,தானைத்தலைவி .கொஞ்சம் பச்சை சேர்த்தால் பிஸ்தா மில்க் ஷேக் ரெடி!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்ச்சியான செய்தியை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றிகள்
Delete